விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்துகிறதா கொரில்லா?





கொரில்லா by ஷோபாசக்தி















கொரில்லா

ஷோபா சக்தி

கருப்பு பிரதிகள்


இலங்கையில் நடப்பது என்ன? அங்கு அமைதிப்படை தமிழ் மக்களுக்கு வழங்கியது என்ன? இதில் அரசியலின் பங்கு பற்றி எண்ணற்ற கேள்விகளை கொண்டுள்ள மக்களுக்கு இதில் பதில் கிடைக்கிறது. நூல் யாகோப்பு அந்தோணி தாசன் பிரான்ஸ் அரசுக்கு அகதி விண்ணப்பத்தை எழுதி அளிப்பது போல தொடங்குகிறது.

அதிலே பகடி தொடங்கிவிடுகிறது. அதில் எளிமையாக வாழ நினைக்கும் ஒருவனுக்கு புலிகள் இயக்கம் எப்படி சாவுமணி அடிக்கிறது என்று பல்வேறு சம்பவங்கள் வழியாக கூறும் சம்பவங்கள் பீதியூட்டுகிறது.

ரொக்கிராஜ் என்பவரின் முழு வாழ்க்கைதான் கதை. அவர் எப்படி குஞ்சன் வயலிலிருந்து இயக்கத்திற்கு செல்கிறார், அங்கு பயிற்சி எடுப்பது, பின் ஊருக்கு காவலாக வருவது, இயக்கத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், வன்முறை ஆகியவற்றை இந்த நாவல் அப்பட்டமாக பேசுகிறது. இதனால்தான் நூலை விமர்சிக்கையில் சாருநிவேதிதா விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் நூல் என்று கூறியிருக்கிறார். அதை அவர் படித்துவிட்டு சொல்லியிருக்கும் தன்மைக்கு மதிப்புக்கொடுத்து அதனை பிரசுரித்திருக்கிறார்கள். இந்த தன்மை முக்கியமானது.

Thadam Vikatan - 01 February 2018 - "அம்பேத்கரும் ...
விகடன்



புலிகள் இயக்கத்தில் சேர்ந்த ஒருவனுக்கு வாழ்க்கை எப்படி நரகமாகிறது, அவன் எங்கு சென்றாலும் அவனைக் காட்டிக்கொடுக்க முன்வருவது சிங்களவர்கள் அல்ல என்ற உண்மையும் நாவலில் தெரிய வரும் கசப்பான உண்மை.

இந்த நாவலில் நாம் சில பக்கங்களிலேயே தெரியவரும் உண்மை. என்னதான் புலிகளின் தாயகம் தமிழீழம் என்றாலும் அதில் சாதிவாரியாகத்தான் அனைத்து மக்களுக்கும் இடம் உண்டு என்பதுதான் வேதனை.  சீவல்காரரான குஞ்சனுக்கு எதிராக ஊரே அணிதிரண்டு அவரின் சொத்துக்களை நாசம் செய்து அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது உண்மையில் தமிழீழ கனவு என்னவென்ற கேள்வியை எழுப்புகிறது. அடுத்து ஆற்றின் மணலை கொள்ளையிடமு மாஃபியா கும்பல் இயக்கத்திற்கு காசு கொடுப்பது ஒன்றே காரணமாக செல்வாக்கு பெற்றதாக உள்ளது.

இலங்கையிலிருந்து பிரான்ஸ் சென்றாலும் காட்டிக்கொடுக்கும் தமிழர்களின் பண்பு நாவல் முழுவதும் தொடர்கிறது. நாவல் முடிவதும் கொலை ஒன்றில்தான். இதன் விளைவாக அந்தோணிதாசனின் முழு வரலாறும் பிரான்ஸ் போலீசாரால் எடுக்கப்பட்டு விடுகிறது. இத்தனைக்கும் நடைபெறும் சம்பவம், தனிப்பட்ட இருவருக்கானது. அது எப்படி தமிழ் அகதிகளின் வாழ்க்கையோடு இணைக்கப்படுகிறது என்பது அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

ரொக்கிராஜ் என்கிற கொரில்லாவின் வாழ்க்கை நாடு கடந்தும் சிதைவுற்று தடுமாறும் நிலையை எட்டுவதைத்தான்  கொரில்லா நாவல் விவரிக்கிறது. இந்த வாழ்க்கை தமிழீழ ஆதரவாளர்களுக்கு உவப்பில்லாததாக இருக்கலாம். ஆனால்  ஓர் விடுதலை இயக்கம் எப்படி தன் ஆன்மாவை சுய லாபங்களுக்காக விட்டுக்கொடுத்து தோல்வியுறுகிறது என்பதை இந்த நாவலைப்படித்து தெரிந்துகொள்ளலாம். 


கோமாளிமேடை டீம்