டிஜிட்டல் கருவிகள் உங்களை கண்காணிக்கின்றனவா?



Alexa, how often do you listen in? © Amazon

மிஸ்டர் ரோனி

அலெக்ஸா, சிரி, கூகுள் அசிஸ்டென்ட் இன்று அனைத்து இடங்களிலும் வந்துவிட்டது. ஸ்மார்ட்போனில் கூட ஹே கூகுள் என்று குரல் கொடுத்தால் போதும். இவை நம்மை அறியாமல் தகவல்களை பதிவு செய்யும் வாய்ப்புகள் உள்ளதா?


காளத்தி நியூஸ் மார்ட்டில் ரோஸ்மில்க் கிடைக்குமா என்பது போன்ற கேள்விதான் இது. பதிவு செய்யாமல் என்ன? டிஜிட்டல் உதவியாளர்களது வேலையை உங்களைக் கவனித்து புரிந்துகொள்வதுதான். அவற்றை விழிப்படையச் செய்யும் சில வார்த்தைகளை பதிந்து வைத்திருப்பார்கள். ஹே கூகுள் என்பது போல சிரி என்றால் ஆப்பிளின் இயக்கமுறைமை தன் பணியைத் தொடங்கிவிடும். இப்படி தினசரி பலமுறை விழித்தெழுந்து உரையாடல்களை பதிவு செய்துள்ளதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன.

நீங்கள் யாரிடமாவது உரையாடிக்கொண்டிருப்பீர்கள். அல்லது நெட்பிளிக்ஸில் படம் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அதில் வரும் சில வார்த்தைகள் டிஜிட்டல் உதவியாளர்களை விழிப்புணர்வுக்கு கொண்டு வரும். அப்படி வந்தால் அடுத்த ஆறு நொடிகளுக்கு ஒலிகளை பதிவு செய்யும். இதனை நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் செய்த ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது. விபத்தாக சில வார்த்தைகளைக் கேட்டு பதிவு செய்யும் அளவு 19 முறை என்கிறது இந்த ஆய்வு.

முடிந்தளவு டிஜிட்டல் உதவியாளர்களுடன் இணையும் பொருட்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருங்கள். அதுவே நல்லது.

நன்றி - பிபிசி








பிரபலமான இடுகைகள்