சிறந்த அறிவியல் புத்தகங்கள்!



Explaining Humans Dr Camilla Pang £14.99, Viking, 12 March 2020Death By Shakespeare: Snakebites, Stabbings and Broken Hearts Kathryn Harkup £16.99, Bloomsbury Sigma, 5 March 2020




Footprints: In Search of Future Fossils David Farrier £16.99, 4th Estate, 5 March 2020Our House is on Fire Malena and Beata Ernman, Svante and Greta Thunberg £16.99, Allen Lane, 5 March 2020





30-Second Zoology

Edited by Mark Fellowes
உலகிலுள்ள விலங்குகளைப் பற்றி அறிவது கடினமான ஒன்று. இந்த நூல் அழகான விலங்குகளின் ஓவியங்களோடு மனதைக் கவருகிறது. ஒரு விஷயத்தைக் கற்க நீங்கள் 30 நிமிடம் செலவு செய்தால் போதும். நூலில் விலங்குகளை 50 பிரிவுகளாக பிரித்து வைத்து விளக்கியிருக்கிறார்கள். 
Our House is on Fire
Malena and Beata Ernman, Svante and Greta Thunberg
கிரேட்டா துன்பெர்க்கின் அம்மா எழுதியுள்ள நூல். கிரேட்டாவுக்கு எப்படி சூழலின் மீது ஆர்வம் ஏற்பட்டது என்பதை இந்த நூல் விளக்குகிறது. முழுக்க கிரேட்டாவின் சுயசரிதையாக நூல் செல்லாமல், உலகின் மீதான அக்கறை கொண்டதாக எழுத்துகள் இருப்பது வாசிக்க நன்றாக இருக்கிறது. சூழல் அக்கறை கொண்டவர்களுக்கான நூல் இது. 

Footprints: In Search of Future Fossils

David Farrier
எதிர்கால மனிதர்களுக்காக நாம் என்ன விதமான விஷயங்களை விட்டுவிட்டு போகிறோம் என்று இந்த நூலில் கூறியிருக்கிறார் ஆசிரியர். இந்த நூல் நாம் வாழும் வாழ்க்கை, நாம் எப்படி பின்னர் நினைவுகூரப்படவேண்டும் என்பதைப் பற்றிய கவனத்தை ஏற்படுத்துகிறது. 

Death By Shakespeare: Snakebites, Stabbings and Broken Hearts

Kathryn Harkup
ஷேக்ஸ்பியர் படிப்பவர்களுக்கு இந்த நூல் பிடிக்கலாம். இவர் அளவுக்கு காதல், நட்பு, துரோகம் ஆகியவற்றை யாரும் எழுதியதில்லை. அதற்கு இன்றுமே கூட இவரது நாவல்களை தழுவி திரைப்படங்களை உருவாக்குவது சான்று. இதில் பலரும் கவனிக்காத விஷயம், விஷம். இதுபற்றிய அறிவைக் கொண்ட ஷேக்ஸ்பியர் அதை தன் கதைகளில் பயன்படுத்தியுள்ளார். இதனை ஆசிரியர் விரிவாக விளக்கி உள்ளார். 

Explaining Humans

Dr Camilla Pang
எட்டு வயதில் நூல் ஆசிரியருக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்படுகிறது. இதன்பிறகு அவரின் வாழ்க்கை எப்படி மாறியது, அவரின் உலகை பிறர் எப்படி புரிந்துகொண்டனர் என்பதை நகைச்சுவையோடு ஊக்கமூட்டும் வகையில் எழுதியுள்ளார். இதன் வழியே ஆட்டிசத்தை எப்படி கையாளமுடியும் என்பதையும் வாசகர்கள் அறியமுடியும். 
நன்றி - பிபிசி







பிரபலமான இடுகைகள்