இரண்டு செய்திகள்! - மலமள்ளும் அவலம் - புற்றுநோயில் மூன்றாவது இடம்!
giphy |
மலமள்ளும் அவலத்தை ஒழிக்க முயற்சி
அண்மையில் மத்திய அரசு மலமள்ளும் தொழிலை ஒழிப்பதற்காக 1.25 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி மூலம் கழிவுகளை அகற்றுவதற்கான கருவிகளையும், சாதனங்களையும் வாங்க உள்ளது. கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 500 நகரங்களுக்கு இந்த கருவிகள் பயன்படவிருக்கின்றன.
மலமள்ளும் மற்றும் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் மரணங்கள் பற்றி உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை மத்திய அரசுக்கு தெரிவித்தது. இதன் விளைவாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய செயல்திட்டத்தை அறிவித்தார்.
இத்திட்டத்தை வீட்டுவசதித்துறை, நகரமயமாக்கல் துறை, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று அமைச்சகம் ஆகியோரின் உதவியுடன்தான் சாத்தியப்படுத்த முடியும். அம்ருத் என்ற திட்டத்தின் இதனை இணைத்து செயல்படுத்தவிருக்கின்றனர். பாதுகாப்பான கருவிகளை அணிந்துகொண்டு மலக்குழிக்குள் இறங்குவது , பாதாளச்சாக்கடைக்குள் இறங்குவது தவறான வழிகாட்டுதல் ஆகும். அவற்றை மனிதர்கள் இன்றி இயந்திரங்களே செய்வது நல்லது. அந்த இடத்திற்கு அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பவர்களும் வருவது சிறப்பான ஒன்று.
நன்றி - எகனாமிக் டைம்ஸ் - நிதி சர்மா
புற்றுநோய் தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடம்!
2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் 18 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் . அங்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு பலியாகி உள்ளனர். அதாவது ஒருநாளைக்கு 1600 மரணங்கள் என கணக்கிட்டு அறிவித்துள்ளது அமெரிக்க புற்றுநோய் சொசைட்டி.
சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா புற்றுநோய் பாதிப்பில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. புற்றுநோய் உடலின் செல்களில் பரவி, அதனை புற்றுநோய் செல்களாக மாற்றுவதில் பல்வேறு நிலைகள் உள்ளன. வைரஸ், பாக்டீரியா மூலம், பல்வேறு வேதிப்பொருட்கள் மூலம், புற ஊதாக்கதிர்கள் மூலம் நோய் பரவுகிறது. உலகளவில் 28 சதவீத இறப்புகளுக்கு புற்றுநோயே காரணமாக உள்ளது.