காடுகளை அழித்தால் இனி வரும் காலத்தில் நுண்ணுயிரிகளின் தாக்குதல் கூடும்!
மரங்களை
அழித்தால் நோய் பரவும்!
சோனியா
ஷா,
எழுத்தாளர்.
ஆங்கிலத்தில்:
சோபிதா
தர்
நீங்கள்
2016ஆம்
ஆண்டு எழுதிய பான்டெமிக்
என்ற நூலில் கொரோனா தாக்குதல்
நடைபெற வாய்ப்புள்ளது என்று
முன்னரே கணித்து எழுதியுள்ளீர்கள்.
எப்படி?
2010ஆம்
ஆண்டு ஹைதியில் காலரா பாதிப்பு
ஏற்பட்டது.
பொதுவாக
நாம் காலராவை ஏழைகளுக்கு
வரும் நோய் என்று
நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால்
காலரா பாதிப்பு நியூயார்க்,
லண்டன்,
பாரிஸ்
ஆகிய பகுதிகளை பாதித்தது.
இதனை
நீங்கள் எப்படி புரிந்துகொள்வீர்கள்.
நான்
சீனாவில் இன்று நோய் பாதித்துள்ள
பகுதிகளை முன்னரே சென்ற
பார்வையிட்டுள்ளேன்.த
வைரஸ் தாக்குதல்கள் பலமுறை
ஒருவரைத் தாக்கும் என்பதை
நோய்களின் வரலாறு பற்றி
படித்தாலே அறிய முடியும்.
நீங்கள்
கடந்த ஐம்பது ஆண்டுகளில் 300
வைரஸ்
கிருமிகள் உருவாகியுள்ளதாக
கூறுகிறீர்களே?
அது
எப்படி?
நான்
கூறியது உண்மைதான்.
ஏறத்தாழ
உலகில் பரவிய நோய்களில் 60
சதவீதம்
விலங்குகள் மூலம் பரவியதுதான்.
மிருகங்கள்
இன்று வெப்பமயமாதல் மூலம்
மனிதர்களின் வாழிடங்களுக்கு
நெருக்கமாக வாழ்ந்து வருகின்றன.
இதன்
விளைவாக எளிதில் மனிதர்கள்
நோய்வாய்ப்படுகின்றனர்.
அரசுகள்
நாட்டு வளர்ச்சிக்காக காடுகளை
அழித்து,
மரங்களை
வெட்டி கட்டடங்களை உருவாக்குகின்றனர்.
அங்கு
வாழும் வௌவால் போன்ற பறவைகள்
மனிதர்கள் வாழும் இடங்களிலுள்ள
விவசாய பண்ணைகள் உள்ளிட்ட
இடங்களுக்கு இடம்பெயர்கின்றன.
இதன்
விளைவாக,
அவற்றின்
உடலிலுள்ள கிருமிகள் எளிதாக
மனிதர்களைத் தொற்றுகின்றன.
நாம்
நம்முடைய பெருக்கத்தை
குறைத்துகொள்வது அவசியம்.
சீனாவில்
தொடங்கிய கொரோனா வைரஸ்,
இப்போது
இந்தியாவிலும் பரவத்தொடங்கியுள்ளது.
நாம்
எப்படி இதை எதிர்கொள்வது?
நிச்சயமாக
சந்தேகமில்லாமல் இந்தியாவில்
நிறைய பேர் பாதிக்கப்பட
வாய்ப்புள்ளது.
இந்தியாவில்
அதிக மக்கள்தொகை என்பதால்
வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளது.
இங்கு
இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில்
இருப்பதால்,
அவர்களை
வைரஸ் தாக்குவது குறைவு.
ஒப்பீட்டளவில்
வயதானவர்களை தாக்கி பலி
கொண்டுள்ளது.
இதனை
அரசு சரியான முடிவு எடுத்து
முன்னதாகவே கட்டுப்படுத்துவது
அவசியம்.
இந்தியாவில்
வெயில் அடிப்பதால் நோயின்
தாக்கம் குறையும் என்கிறார்களே?
வெப்பச்சூழல்
என்பது நுண்ணுயிரிகளின்
பெருக்கத்தைக் குறைக்கும்.
ஆனால்
பருவக்காலம் மாறும்போது
இன்ப்ளூயன்சா வைரஸ் போல
தாக்கும் வாய்ப்பும் உண்டு.
ஓராண்டில்
தடுப்பூசியை உருவாக்கினால்
மட்டுமே நோய்களைக் கட்டுப்படுத்த
முடியும்.
நாம்
உலகமயமாக்கல் காலத்தில்
வாழ்கிறோம்.
வைரஸ்
பிரச்னையை எப்படி சமாளிக்க
முடியும்?
நீங்கள்
கூறும் பிரச்னை இருக்கிறதுதான்.
மக்கள்தொகை
அதிகம் இருக்கும் இடங்களில்
நுண்ணுயிரிகளின் பரவல் வேகமாக
இருக்கும்.
இதன்விளைவாக,
நோய்
பரவிய நகரங்களுக்கும் பரவாத
நகரங்களுக்கும் தாக்குதல்
தொடங்கும்.
இதன்விளைவாக
நாம் வேகமாக பல்வேறு ஆய்வாளர்களை
அனுப்பி பாதிப்பை குறைக்க
முயற்சிக்கவேண்டும்.
இந்த
விஷயங்களை செய்ய சுற்றுலாவுக்கு
தடை விதித்து நாட்டின் எல்லைகளை
மூடி சுகாதார விஷயங்களை
வலுவாக்க வேண்டும்.
நமக்கு
வேறு வழியில்லை.
நன்றி
-
டைம்ஸ்,
மார்ச்
8,
2020