இடுகைகள்

ஆப்கன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீவிரவாத இயக்கத்தின் நிதியாதாரத்தை முடக்கும் உலக அமைப்பு!

படம்
பினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது சாதாரண காரியமல்ல. இதற்கு உலக நாடுகள் துணிச்சலான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதில் முக்கியமானது, தீவிரவாத காரியங்களுக்கு உதவும் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது. அமெரிக்கா, தனது வர்த்தக மைய தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதம் வளர்க்கும் பல்வேறு செயல்பாடுகளை கண்காணிக்க ஆரம்பித்து தடுத்தது.  இதில் முழுமையான வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பதல்ல விஷயம். இந்த முயற்சியில் அமெரிக்கா தெரிந்துகொண்ட விஷயங்கள் அதிர்ச்சி ஏற்படுத்துபவை.  இருபதாண்டுகளாக அமெரிக்க தீவிரவாதத்தை தடுப்பது என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு நிதியளித்து வருகிறது. அதை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த அதற்கு கிடைக்கும் நிதியுதவி ஆதாரங்களைக் கண்டுபிடித்து தடுக்கவேண்டும். அப்போதுதான் நாடுகளில் நடைபெறும் பல்வேறு தீவிரவாத செயல்களை தடுக்கமுடியும். ஃபினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் என்ற அமைப்புதான் மேலே சொன்ன விஷயங்களை கூறியது. உலகம் முழுக்க தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளில் இந்த அம

உலக நாடுகள் ஆப்கானிஸ்தானில் நடத்தும் அரசியல் விளையாட்டு

படம்
  அரசியல் விளையாட்டு ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு பெரும்பாலான மக்கள் பழங்குடிகள் என்பதால் போர் என்பது எப்போதும் அங்கு நின்றது கிடையாது. நிற்கவும் போவதில்லை. இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா என அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தானை வளைத்து போட முயன்றுகொண்டே இருக்கின்றன.இதனை நேரடியாக, மறைமுகமாக என இரண்டு வகையாகவும் கூறலாம்.  இப்போது அதைப் பற்றி சில தகவல்களைப் பார்ப்போம்.  அமெரிக்கா அமெரிக்க மக்களைப் பொறுத்தவரை இனி அவர்களின் வரிப்பணம் போருக்கு என்று செலவிடப்படாது. அந்நாட்டின் பொருளாதார நிலைமை இப்போது சரியில்லை. இந்த வகையில் அமெரிக்க அதிபர், அடுத்த ஆபரேஷன் நமக்குத்தான் என்று சொல்லி பின்வாங்கியது நல்ல விஷயம்தான். அமெரிக்காவை தளமாக கொண்டு தீவிரவாதிகள் இயங்கிய நிலை இனி இருக்காது என அமெரிக்கா நம்புகிறது. இதனை ஆப்கானிஸ்தானை சுற்றியுள்ள நாடுகளே கூட நம்பாது. உலகின் சூப்பர் போலீஸ் நாடான அமெரிக்கா, இதனை நம்புகிறது. அதோடு அதன் பெருமைமிக்க அந்தஸ்து இருபது ஆண்டு போரில் தோற்று பின்வாங்கியதோடு முடிவுக்கு வந்துவிட்டது. பின்லேடனை அழித்தது மட்டுமே சாதனை என அமெரிக்கா சொல்லிக்கொள்ளலாம்.

வர்த்தக மையம் தாக்குதல் தொடர்பான நூல்கள்!

படம்
 தி லூமிங் டவர் ஐந்தாண்டு ஆராய்ச்சி, நூற்றுக்கும் மேலான நேர்காணல்கள் ஆகியவற்றைக் கொண்ட நூல். தாக்குதலை நடத்தியவர்களின் மனநிலையை சிறப்பாக பிரதிபலித்து புலிட்சர் விருது வென்றது. இதனை வர்த்தக மையம் சார்ந்த நூல்களில் முக்கியமாக கருதுகிறார்கள்.  ஃபாலிங் மேன் அமெரிக்க வர்த்தக மையம் தாக்கப்பட்டபிறகு டான் டிலில்லோ என்ற நபரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை விவரிக்கிற நாவல் இது.  டைரக்டரேட் எஸ் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் செய்த போர் பற்றிய நூல். அல்கொய்தா எப்படி உருவானது, அமெரிக்காவில் வர்த்தக மையம் தாக்கப்பட்டபிறகு ஆப்கானில் அல் கொய்தா வளர்ச்சி பெற்றதை நூல் விவரிக்கிறது புலிட்சர் விருது பெற்ற நூலை பத்திரிகையாளர் ஸ்டீவ் கோல் எழுதியிருக்கிறார்.  தி ரைஸ் அண்ட் ஃபால் ஆப் ஒசாமா பின்லேடன் பத்திரிகையாளர் பீட்டர் பெர்ஜென் எழுதியுள்ள நூல் இது. அமெரிக்க தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாகவே பின்லேடனின் வாழ்க்கையைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறது. 

தெருக்களில் பெண்களை தாலிபன்கள் அடிப்பது உறுதி! - ஸார்கோனா ராஸா

படம்
            ஸார்கோனா ராஸா பிரிட்டிஸ் ஆப்கன் பெண்கள் சங்கம் காந்தகாரில் பிறந்தவரான ராஸா , 1994 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி இங்கிலாந்திற்கு அடைக்கலம் தேடி குடும்பத்தோடு இடம்பெயர்ந்துவிட்டார் . 2004 ஆம் ஆண்டு தொடங்கி ஆப்கானிஸ்தானுக்கு வந்து சென்றுகொண்டிருக்கிறார் . ஆப்கனிலுள்ள பெண்களின் நிலை இனி என்னவாகும் என்று அவரிடம் பேசினோம் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தாலிபன்கள் பெண்கள் விவகாரத்தில் முன்னர் நடந்துகொண்டது போல கடுமையாக நடந்துகொள்ளவில்லையே ? நீங்கள் இதனை நம்புகிறீர்களா ?   முன்னர் தாலிபன்கள் நடந்துகொண்டதை விட இப்போது மென்மையாக பெண்கள் விவகாரத்தில் நடந்துகொள்வதாக நான் நம்பவில்லை . காரணம் இன்று ஊடகங்கள் நிறைய வந்துவிட்டன . அவர்களிடம் நேர்மறையாக தங்களை காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது . முஸ்லீம் நாடுகளில் பெ்ணகள் தலையை மறைக்காமல் டிவியில் வந்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள் . ஆண்களும் , பெண்களும் கலந்து படி்த்த பல்கலைக்கழகங்ளில் பெண்க்ள் மட்டும் தனியாக படிக்கவேண்டும் என தாலிபன்கள் கூறுவார்கள் . தாலிபன்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் பெண்கள் தலையை மறைக்காமல