தீவிரவாத இயக்கத்தின் நிதியாதாரத்தை முடக்கும் உலக அமைப்பு!


பினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ்





அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது சாதாரண காரியமல்ல. இதற்கு உலக நாடுகள் துணிச்சலான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதில் முக்கியமானது, தீவிரவாத காரியங்களுக்கு உதவும் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது. அமெரிக்கா, தனது வர்த்தக மைய தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதம் வளர்க்கும் பல்வேறு செயல்பாடுகளை கண்காணிக்க ஆரம்பித்து தடுத்தது. 

இதில் முழுமையான வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பதல்ல விஷயம். இந்த முயற்சியில் அமெரிக்கா தெரிந்துகொண்ட விஷயங்கள் அதிர்ச்சி ஏற்படுத்துபவை. 

இருபதாண்டுகளாக அமெரிக்க தீவிரவாதத்தை தடுப்பது என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு நிதியளித்து வருகிறது. அதை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த அதற்கு கிடைக்கும் நிதியுதவி ஆதாரங்களைக் கண்டுபிடித்து தடுக்கவேண்டும். அப்போதுதான் நாடுகளில் நடைபெறும் பல்வேறு தீவிரவாத செயல்களை தடுக்கமுடியும். ஃபினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் என்ற அமைப்புதான் மேலே சொன்ன விஷயங்களை கூறியது. உலகம் முழுக்க தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளில் இந்த அமைப்பு ஈடுபடுகிறது. இந்த அமைப்பின் பரிந்துரைகளை இருநூறு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. 


எஃப்ஏடிஎஃப் எனும் இந்த பணமோசடி, தீவிரவாத பணத்தடுப்பு அமைப்பு, 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பாரிசில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவில் உருவானது. முதலில் உலக நாடுகளில் நடைபெறும் பணமோசடிகளை தடுக்கவே பயன்பட்டது. பிறகு, 2001ஆம் ஆண்டு முதல் தீவிரவாத இயக்கங்களுக்கு செல்லும் நிதி ஆதாரத்தை தடுக்கும் செயல்பாடுகளை செய்து வருகிறது. 

இந்தியா, இந்த அமைப்புடன் 2010இல் இணைந்தது. ஜி 20 என்ற அமைப்பில் உள்ள வளர்ந்த வல்லரசு நாடுகள் எஃப்ஏடிஎஃப் என்ற அமைப்பின் பணிகளுக்கு உறுதியாக உள்ளன. இந்த அமைப்பு பல்வேறு நாடுகளுக்கு இடையில் தீவிரவாதம் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்கிறது. இதன்மூலம் தீவிரவாத தொடர்புகளை எளிதாக அறிந்துகொண்டு அழிக்க முடியும். தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது காவல்துறைக்கும், பிற உளவு அமைப்புகளுக்கும் எந்தளவு பலமாக இருக்கிறதோ, அதேயளவு தீவிரவாத அமைப்புகளும் பலத்தில் முன்னேறி வருகின்றன. 



 டைம்ஸ் ஆப் இந்தியா

சுரோஜித் குப்தா


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்