இந்தியாவில் நடைபெற்ற முக்கியமான தீவிரவாத தாக்குதல்கள்!

 





மும்பை தாக்குதல் 2008


இந்தியாவில் நடைபெற்ற முக்கியமான தீவிரவாத தாக்குதல்கள்

நாடாளுமன்ற தாக்குதல்

டிசம்பர் 13, 2001

இறப்பு 9 காயம் 15

லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ மொகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஐந்து தீவிரவாதிகள் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்தனர். நுழைந்தவுடனே பார்த்த ஆட்களையெல்லாம் சுடத் தொடங்கினர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் துப்பாக்கிக் காயம் படவில்லை. இந்த சம்பவம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான உறவை பாதித்தது. 

டெல்லி தொடர் குண்டுவெடிப்புகள்

அக்.29, 2005

காயம் 200க்கும் அதிகம். 

இறப்பு 67

தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னதாக தொடர் குண்டுவெடிப்புகள் தொடங்கின. இரண்டு குண்டுகள் மார்க்கெட்டுகளிலும் ஒன்று பஸ்சிலும் வெடித்தது. இஸ்லாமிய புரட்சிகர முன்னணி இயக்கம் இதற்கான பொறுப்பை ஏற்றது. இந்திய அரசு, லஷ்கர் இ தொய்பா இயக்கம் இதன் பின்னணியில் உள்ளது என கூறியது. 

மும்பை ரயில் குண்டுவெடிப்பு

ஜூலை 7, 2006

இறப்பு 200

காயம் 700

மும்பை நகரத்தில் ஓடும் லோக்கல் ரயில்களில் பிரஷர் குக்கர்களில் வெடிகுண்டுகள் செட்டப் செய்து வெடிக்கவைக்கப்பட்டன. இதில் இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பும், லஷ்கர் இ தொய்பாவும் இணைந்து செயல்பட்டதாக காவல்துறை கூறியது. பதினொரு நிமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து மக்களை பீதிக்குள்ளாக்கின. 

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு

மே 13, 2008

இறப்பு 71 

காயம் 200 க்கும் அதிகம். 

ஜெய்ப்பூர் நகரெங்கும் குண்டுகள் வெடித்தன. இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பு இத்தாக்குதலுக்கு காரணம். நகரில் ஏழு இடங்களில் சைக்கிளில் வெடிகுண்டுகளை பொருத்தி வெடிக்க வைத்தனர். மக்கள் கூடும் இடங்களில் வெடித்ததால் பாதிப்பும் கூடுதலாக இருந்தது. 

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு

ஜூலை 26, 2008

இறப்பு 56 காயம் 200க்கும் அதிகம்

இந்தியன் முஜாகிதீன் ரிட்டர்ன்ஸ். சைக்கிளில் வெடிகுண்டுகளை கட்டி இருபது இடங்களில் வெடிக்க வைத்தனர். இந்த சம்பவங்களுக்குப் பிறகு பெங்களூருவிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. 

டெல்லி மார்க்கெட் வெடிகுண்டு தாக்குதல்

செப்.13, 27, 2008

இறப்பு 23 

காயம் 120


அரைமணிநேரத்தில் டெல்லியில் உள்ள சந்தைகளில் ஐந்து குண்டுகள் வெடித்தன. இதில் கன்னாட்பிளேசும் ஒன்று. முதல் குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் பொறுப்பு ஏற்றது. பிறகு வெடித்த குண்டுவெடிப்புகளுக்கு எந்த இயக்கம் காரணம் என்று தெரியவில்லை. டெல்லியில் நான்கு வெடிகுண்டுகளை வெடிக்காமல் தடுத்தது காவல்துறை. இந்த சம்பவம் நடந்தபிறகு இரண்டு வாரங்கள் கழித்து மெக்ராலி சந்தையில் குண்டுகள் வெடித்தன. 

மும்பை குண்டுவெடிப்பு

நவ.26, 2008

இறப்பு 160 

காயம் 300


மும்பையில் மூன்று நாட்களில் பத்து எல்இடி தீவிரவாதிகள் எட்டு இடங்களை குறிவைத்து தாக்கினர். கடல் வழியாக இந்தியாவுக்குள் வந்தவர்கள் தாஜ் ஹோட்டல், லியோபோல்ட் கஃபே, ஓபராய் டிரிடென்ட், நாரிமன் ஹவுஸ், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், காமா மருத்துவமனை ஆகிய இடங்களை தாக்கினர். ஹோட்டல்களில், நாரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களில் மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர். தீவிரவாதிகளில் ஒருவரை மட்டும் கொல்ல முடிந்தது. ஒரு தீவிரவாதியை காவல்துறை உயிருடன் பிடித்தது. அஜ்மல் கசாப்  என்ற தீவிரவாதியைப் பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2012இல் தூக்கிலிட்டனர். 

டைம்ஸ் ஆப் இந்தியா

படம் ஒன் இந்தியா



 

கருத்துகள்