விவாகரத்து என்பது இயற்கையான விஷயமல்ல! - சித்தார்த் மல்லையா

 








சித்தார்த்  மல்லையா, தனது மனநிலை பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். இஃப் ஐயம் ஹானஸ்ட் எ மெமோர் ஆப் மை மென்டல் ஹெல்த் ஜர்னி என்ற நூலைப் பற்றி அவரிடம் பேசினோம். 


மனநிலை பற்றிய நூல் ஒன்றை எழுதியிருக்கிறீர்கள். இந்த அனுபவம் எப்படியிருக்கிறது?

எனக்கு நன்றாகத்தான் இருக்கிறது. இந்த நூல் மூலம் நிறையப் பேருக்கு உதவ முடியும் என நினைக்கிறேன். இந்த நூல் ஒருவருக்கு உதவினால் நான் எழுதியதற்கு பயன் இருக்கும. 

உங்கள் பெற்றோர் செய்துகொண்ட விவாகரத்து மனநிலை பாதிபைப ஏற்படுத்தியதாக கூறினீர்கள். நூலை எழுதியபோது, அதனை கடந்து வர முடிந்ததா?

நூலை எழுதியதன் மூலம் அதனை கடந்து வர முடிந்ததா என்று தெரியவில்லை. மனநிலை என்பதை பல்லாண்டுகளாக ஏற்பட்டு வந்த நிலை. திடீரென காலையில் எழுந்து உடனடியாக நூலை எழுத முடியாது. நூலை எழுதலாம். இவற்றை பேசலாம் என்று யோசித்து தயாராகவே சில ஆண்டுகள் பிடித்தன. 

விவாகரத்தை குழந்தைகள் எளிதாக கடந்து வர முடியுமா?

எனக்கு அப்படித் தோன்றவில்லை. நீங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். இயற்கைக்கு மாறான ஒன்றுதான் அந்த சூழ்நிலை. காலம் என்பது இதனை குணப்படுத்தும் என நினைக்கிறேன். அனைவரும் இதனை நான் கூறியது போல கடந்து வர முடியும் என்று உறுதியாக கூற முடியாது.

உளவியல் தெரபி முக்கியம் என்று எப்படி கூறுகிறீர்கள்?

நீங்கள் உங்கள் பாதிப்பிலிருந்து மீள சரியான உளவியல் தெரபியாளரைக் கண்டுபிடிக்கவேண்டும். அவர் அளிக்கும் சிகிச்சை உங்களுக்கு சிறப்பாக பயன் அளிக்கும். இதனை அனைவருக்கும் என்னால் பரிந்துரைக்க முடியாது. ஏனெனில் தெரபி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிடைப்பதில்லை. சரியான சிகிச்சையாளர் கிடைத்துவிட்டால் தெரபி பிரமாதமான பயன்களை வழங்கும். உங்களைப் பற்றித் தெரிந்தவர், முன்கூட்டிய முடிவுகளைக் கொண்டிருப்பார். அவரை விட உங்களைப் பற்றி அதிகம் தெரியாதவரை வைத்து சிகிச்சை பெற்றால் நல்லது. 

இணையத்தில் உங்களை கிண்டல், கேலி செய்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஐபிஎல் சமயங்களில் என்னைப் பற்றி பலரும் கடுமையாக விமர்சிப்பார்கள். கேலி செய்வார்கள். நான் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். பிறகு அதனை கைவிட்டுவிட்டேன்.



டெக்கன் கிரானிக்கல்

காயத்ரி ரெட்டி பாட்டியா

கருத்துகள்