உறுப்புகளை இழந்தாலும் அநீதிக்கு எதிராக குரல் உயர்த்திய பாடகன்! - கடிதங்கள்
துணிவின் பாடகன் பாந்த்சிங் |
அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.
நலமாக இருக்கிறீர்களா? அறுபத்துமூவர் விழா இறுதிப்பகுதியை எட்டியிருக்கிறது. மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவில் விழா என்பதால் எப்போதும் போல கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. நோய்த்தொற்று காலத்தில் விழாவை நிறுத்தமுடியாமல் நடத்துகிறார்கள். ஏராளமான போலீஸ் நாற்புறங்களிலும் குவிந்து விட்டனர்.
துணிவின் பாடகன் பாந்த்சிங் என்ற நூலைப் படித்து வருகிறேன். 175 பக்கங்கள் படித்துவிட்டேன். இன்னும் நூறு பக்கங்கள் பாக்கியாக உள்ளது. ஜாட் சாதி வெறியர்களால் இருகைகளும், ஒரு காலும் வெட்டப்பட்டு உயிர்பிழைத்தவர் பாந்த்சிங். இவரது மூத்த மகளான பல்ஜித்தை மேல்சாதி இளைஞர்கள் பாலியல் வல்லுறவு செய்கிறார்கள். அதனை காவல்துறையில் பதிவு செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க பாந்த்சிங் முயன்றதற்காக அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நிருபமா தத் என்ற பத்திரிகையாளர் எழுதியதை கமலாலயன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
நீங்கள் இந்த சம்பவம் பற்றிய செய்தியை முன்னதாக நாளிதழ்களில் படித்திருப்பீர்கள். தெஹல்கா, டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய இதழ்கள் மட்டுமே பாந்த்சிங் பற்றிய செய்தியை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன.
நன்றி!
ச.அன்பரசு
26.3.2021
படம் - இந்து தமிழ்
கருத்துகள்
கருத்துரையிடுக