விகாரமான தோலும் உடைந்த மனதும்! கடிதங்கள்
அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு,
வணக்கம். நலமாக உள்ளீர்களா?
இந்த வார குங்குமத்தை ஈரோட்டில்தான் வாங்கினேன். சக்தி சாரின் ஃபேமில் ட்ரீ தொடரை முன்னதாகவே படித்தேன். சிறப்பாக எழுதி வருகிறார். நாணயம் விகடனில் வேலை பார்த்த அனுபவம் உதவுகிறது என நினைக்கிறேன்.
சென்னை, காலைக்கதிர் நாளிதழில் வேலை பார்த்த வீடியோ பிரிவினரில் ஆறு பேருக்கு கொரோனா வந்துவிட்டது. எங்களுக்கு இன்னும் வீட்டிலேயே பணி செய்யும் ஆணை வரவில்லை. அப்படி கொடுத்தால் அலுவலகத்திற்கு புறநகரிலிருந்து வரும் நேரம் நிறைய மிச்சமாகும். உற்பத்தி திறனும் கூடும். இதில் எங்களது ஆசிரியருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.
ஒவ்வாமை பிரச்னை இருப்பதால் கொரோனாவிற்கான தடுப்பூசியை நான் போட்டுக்கொள்ள முடியாது. ஊசி தூண்டிவிட்டால் மீண்டும் எனது முழு உடலும் தோல் உரிந்து எரிச்சல் தொடங்கிவிடும். முகமெல்லாம் கொப்புளங்கள் வெடித்து விகாரமாக மாறிவிடும். ஊருக்கு சென்று வந்ததில் அம்மாவுக்கு சித்த மருந்துகளை வாங்கிக் கொடுத்துவிட்டு வந்ததுதான் உருப்படியான விஷயம். மற்றபடி நானும் ரூ.2 ஆயிரத்திற்கு மருந்துகள் வாங்கிக்கொண்டேன்.
எஸ்கேஎம் மருத்துவமனையில் சித்தாவில் நல்ல மருத்துவராக ரெஜூநாத் கிடைத்துள்ளார். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான். இந்த வகையில் மயிலாப்பூரிலுள்ள வெங்கட்ரமணா மருத்துவமனை எனக்கு ஏனோ பயன் தரவில்லை. அங்கிருந்த ஆண் மருத்துவர் சரியானபடி தகவல்களைக் கேட்கவில்லை. சரி, ஒருவரின் மனநிலை சரியாக இருந்தால்தான் சிகிச்சை சரியாக இருக்கும். பார்ப்போம். சொல்ல வேறெதுவுமில்லை சார்.
நன்றி!
ச.அன்பரசு
14.3.2021
கருத்துகள்
கருத்துரையிடுக