இப்படியும் நிதியுதவிகளை பெறலாம்! - கடிதங்கள்

 



நன்கொடை மிரட்டல்






அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

நேற்று பிக்பஜார் கடைக்கு டீஷர்ட் வாங்க சென்றேன். வடபழனியில் தனியாக கடையை அமைத்துள்ளார்கள். துணியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென இரண்டு டிப்டாப் டை கட்டாத ஆட்கள் எங்களை அணுகினர். குழந்தைகள் பசியால் இறக்கின்றனர் என்பதை சொல்லி புள்ளிவிவரங்களைச் சொன்னார்கள். எதற்கு என்னால் நாங்கள் அதற்கு 5 ஆயிரம் தொடங்கி பல்லாயிரம் வரை தானம் கொடுக்கலாமாம். 500 ரூபாய் டிஷர்ட் எடுக்க வந்து ஐயாயிரம் ரூபாய் தானம் கொடுக்கும் தைரியம் எனக்கு இல்லை. 

பிக் பஜார் கடையில் இதுபோல வாடிக்கையாளர்களை மிரட்டும் ஆட்கள் புதிதல்ல. இதற்கு முன்னால் வங்கி ஆட்களை உள்ளே விட்டு கிரடிட் கார்டு வாங்கிக்கொள்ளுங்கள் என மிரட்டுவார்கள். இப்போது இப்படி. நேருவின் போராட்டகால சிந்தனைகளை படிக்கத் தொடங்கியுள்ளேன். மதம் பற்றிய அவரது உறுதியான சிந்தனை ஆச்சரியப்படுத்துகிறது. 

நன்றி!

ச.அன்பரசு 

22.3. 2021


கருத்துகள்