நீண்டகால வலியைப் போக்கும் மருத்துவக் கண்டுபிடிப்பு!
கடந்த திங்களன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் படாபௌடியன் ஆகிய விஞ்ஞானிகள் வெப்பத்தை உடல் எப்படி உணர்கிறது. தொடுதலை எப்படி புரிந்துகொள்கிறது என்ற ஆராய்ச்சிக்காக பரிசு பெறுகிறார்கள்.
மிளகாய் சாப்பிடும்போது காரம் என்ற வலி உணர்வைத்தாண்டில் உடலில் வெப்பத்தை பலரும் உணர்வார்கள். ஜூலியசும் கூட அதைத்தான் ஆய்வு செய்தார்.
உடலிலுள்ள குறிப்பிட்ட உணர்வுப்பகுதி மிளகாயின் கெபாசைசின் வேதிப்பொருளுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்தார்.
ஆர்டெம், ஒருவரை தொடுவதால் உடலில் இயக்கப்பெறும் செல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்.
நமது உடல் வெளிப்புற சூழ்நிலைகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பதை புதிய கண்டுபிடிப்பு விளக்குகிறது.
வெவ்வேறு சூழல்கள், வெப்பம், குளிர் ஆகியவற்றுக்கு உடல் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்கிற வகையில் ஆய்வு முக்கியமானது.
இந்த ஆய்வு மூலம் நீண்டகாலமாக வலியில் தவித்து வருபவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பதை எளிதாக அறியலாம்.
டிஆர்பிவி1 என்ற உணர்வுப்பகுதி வெப்பத்தை உணர்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றன
பிஐஇஇசட் 02 என தொடுதல் சார்ந்த உணர்வுப்பகுதி, ரத்த அழுத்ததை ஒழுங்கு செய்கிறது.
ஹெச்டி
கருத்துகள்
கருத்துரையிடுக