காலனித்துவம், அகதிகளின் பிரச்னை பற்றிப் பேசிய எழுத்தாளர்! - இலக்கிய நோபல் 2021

 







தான்சானியாவைச் சேர்ந்த அப்துல்ரசாக் குர்னா என்ற எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வழங்கியுள்ளனர். 

எந்த சமரசமும் செய்யாமல் அகதிகளின் பிரச்னைகளையும் காலனித்துவ பாதிப்புகளையும் அப்துல்ரசாக் பதிவு செய்துள்ளார் என நோபல் கமிட்டி கூறியுள்ளது. 

குர்னா, தனது இருபது வயதிலிருந்து எழுத தொடங்கியுள்ளார். இதுவரை பத்து நாவல்களை பதிப்பித்துள்ளார். நிறைய சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் பிரிட்டனுக்கு அகதியாக வந்து குடியேறியவர். 

1987இல் மெமரி ஆப் டிபார்ச்சர் என்ற நூலை முதலில் வெளியிட்டார். பிறகு 1990இல் பில்கிரிம்ஸ் வே என்ற நூலை வெளியிட்டார். 

அகதிகளின் பிரச்னைகள், இனவெறி, அடையாளம் சார்ந்த பிரச்னைகளை நூலில் பேசியுள்ளார் குர்னா. 

1994ஆம் ஆண்டு பாரடைஸ் என்ற நாவலை எழுதினார். இந்த நாவல் உலகப்போரின்போது ஆப்பிரிக்கவில் நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிறது. இந்த நாவலை புக்கர் பரிசு தேர்வுப்பட்டியலில் வைத்திருந்தனர். இறுதியில் ஸ்காட்லாந்து எழுத்தாளர் ஜேம்ஸ் கெய்மன் புக்கர் பரிசை வென்றார். 

கார்டியன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் நான் எழுப்பிய கேள்விகள் புதிதானவை கிடையாது. மன்னர் ஆட்சி, மக்கள் இடம்பெயர்தல் ஆகியவற்றை நமது காலத்தில் எப்படி பார்ப்பது என்பதை நூலில் எழுதியுள்ளேன் என்றார். 

ஆப்டர்லைவ்ஸ் என்ற நூலை கடந்த ஆண்டு எழுதி வெளியிட்டார். இது காலனித்துவ காலத்தில் ஜெர்மனிக்கு விற்கப்படும் சிறுவனைப் பற்றியது.  

2005இல் டிசெர்ஷன் என்ற நூலை எழுதினார். இது 2006இல் காமன்வெல்த் ரைட்டர்ஸ் பரிசுக்கு தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றது. 2011ஆம் ஆண்டு தி லாஸ்ட் கிஃப்ட் என்று வெளியான நாவல் அதன் மையப்பொருளுக்காக பேசப்பட்டது. 

குர்னாவுக்கு இப்போது 72 வயசாகிறது. கென்ட் பல்கலைக்கழகத்தில் காலனித்துவ இலக்கியத்திற்கான பேராசிரியராக இருந்தார். இப்போதுதான் பணி ஓய்வு பெற்றுள்ளார். 

1960ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி இங்கிலாந்துக்கு வந்துவிட்டார். அதிபர் அபெய்ட் கருமே, அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றவேண்டும் என சட்டம் இயற்றியதால் இப்படி நாட்டை விட்டு வெளியேறும் சூழல் உருவானது. 

அப்போது நாடு காலனித்துவ சூழலிலிருந்து நாடு மெல்ல விடுதலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. 

1984ஆம் ஆண்டு ஜான்சிபாருக்கு தன் தந்தையைப் பார்க்க குர்னா வந்தார். அப்போது அவர் இறக்கும் தருவாயில் இருந்தார். 

1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசை ஐரோப்பியா மற்றும் வட அமெரிக்க எழுத்தாளர்களே பெற்று வந்தனர். நோபல் பரிசு பெற்ற ஆறு ஆப்பிரிக்காவை பூர்விகமாக கொண்ட எழுத்தாளர்களில் குர்னாவும் இப்போது இணைந்துள்ளார். 

 ஹெச்டி 


கருத்துகள்