பெண்களால் ஓரம்கட்டப்பட்ட டேஞ்சர் டயாபாலிக்! கடிதங்கள்
அன்புள்ள ஆசிரியர் கே.என். சிவராமன் அவர்களுக்கு,
வணக்கம். வரும் வெள்ளி ஊருக்கு சென்று மருந்துகள் வாங்க வேண்டியிருக்கிறது. தாய்மாமன்களில் நடுமாமன் தார்ச்சு கட்டிடம் கட்டிவிட்டார். இது கூட தாமதமான முயற்சிதான். புதுமனை புகுவிழா நடத்த அழைப்பு விடுத்தார்கள். ஆனால் என்னால் போகமுடியவில்லை. எங்கள் குடும்பத்தினர் செல்வார்கள்.
துரோகம் ஒரு தொடர்கதை காமிக்ஸ் படித்தேன். டேஞ்சர் டயபாலிக் கௌரவ தோற்றத்தில் வரும் காமிக்ஸ் என்று சொல்லலாம். இதில் கோரா, ஈவா என்ற இருபெண்கள்தான் கதையை நகர்த்தி செல்கிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் கதை சலிப்பாகிவிடுகிறது.
உறவுப்பாலம் என்று இலங்கை சிறுகதைத் தொகுப்பை படித்து வருகிறேன். எட்டு சிங்களச்சிறுகதைகளில் மூன்று நன்றாக இருக்கிறது. மறுபடியும், அக்கா, இன்று என் மகன் வீடு வருகிறான் ஆகிய கதைகள் எனக்கு பிடித்திருந்தன. இன்று என் மகன் வீடு வருகிறான் கதை, காவல்துறையால் பிடிக்கப்பட்டு காவல்நிலையத்திற்கு சென்ற மகன் திரும்ப வருவான் என கல்லூரி வாசலில் காத்திருக்கும் தாய் பற்றிய கதை. இந்த மையம் வழியாக தாயின் மகன் என்ன செய்தான், அதற்கு அரசு எடுத்த நடவடிக்கை ஆகியவற்றை சிறுகதையில் உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார்கள்.
நன்றி!
ச.அன்பரசு
10.3.2021
கருத்துகள்
கருத்துரையிடுக