துப்பறியும் கதைகளின் அணிவகுப்பு! - கடிதங்கள்

 








அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். 

சென்னையில் விநாயகர் சதுர்த்தி பாடல், சோறு, பூஜை என அமர்க்களப்பட்டது. கடலில் சிலைகளை கரைக்கச் செய்யும் போது கூட்டம் அதிகமாக இருக்கும். விகடன் இதழ்கள் சிலவற்றை நிறுத்துவது பற்றி அறிந்திருப்பீர்கள். 

டெலிகிராம் செயலியில் நிறைய மின்நூல்கள் கிடைக்கின்றன. தினசரி பத்திரிக்கைகளையும் இதிலேயே படித்துக்கொள்ள முடிகிறது. பத்திரிகைகள், மாத இதழ்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சரி, தவறு என்பதைவிட காலமாற்றத்திற்கேற்ப மக்கள் டிஜிட்டலுக்கு மாறி வருகின்றன. இப்படி படிக்கும் செய்திகள் மனதில் நிற்குமா என்று கேட்கிறார்கள். தேவையான விஷயங்களை இதில் படித்துக்கொள்ள வேண்டியதுதான்.  இணையத்தில் இந்த வகையில் ஏராளமான செய்திகள், மின்நூல்கள் கொட்டிக்கிடக்கின்றன. 

தாளின் விலையேற்றம், நூல்களை சேமிக்க முடியாதது என இதற்கு பின்னால் நிறைய காரணங்கள் உண்டு. சத்யஜித்ரேயின் பெலுடா சீரிசில் இரண்டு கதைகளைப் படித்தேன். 

பம்பாய் கொள்ளையர்கள், தங்கவேட்டை என்று இரண்டு நூல்களும் நன்றாக இருந்தன. மொழிபெயர்ப்பு வீ.பா. கணேசன் . மொத்தம் இந்த வரிசையில் இருபது நூல்கள் உள்ளன. 

வங்காளத்தில் பியோம்கேஷ் பக்ஷி தொடரை வெப் சீரிசாக பார்த்து வருகிறேன். இதேகாலத்தில் டிடி1 இல் இத்தொடர் வெளியுள்ளதை பாலபாரதி பார்த்து சொன்னார். நன்றாக படமாக்கப்பட்டதை தரவிறக்கி வைத்துக் கொள்ளலாம். 

நன்றி!

ச.அன்பரசு

3.9.2019




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்