ரொக்கப் பரிவர்த்தனைதான் அல்டிமேட்! - டேட்டா ஜங்க்ஷன்
ரொக்கமாக பணத்தை கையாள்வது இந்தியாவில் 2010ஆம் ஆண்டு நூறு சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு எடுத்த ஆய்வில் அதன் அளவு 89 சதவீதமாக குறைந்துள்ளது. முழுமையாக க்யூஆர் கோடை பதிவு செய்து பொருட்களை வாங்குவது கடினமான ஒன்றுதான். நகரத்தில் பலரும் இதனை இப்போதுதான் பயன்படுத்துகின்றனர். ஆனால் அனைவரும் இதனை தேர்ந்தெடுப்பதாக தெரியவில்லை.
பேங்க் ஆப் இன்டர்நேஷனல் செட்டில்மெண்ட்ஸ் என்ற நிறுவனம், பணம் அச்சிடப்படுவது பெரிதாக குறையவில்லை என்று தகவல் கொடுத்திருக்கிறது. ரொக்கமாக பணத்தை பரிமாறுவது குறைகிறது என பலரும் கூறும் சூழ்நிலையில் கூட ரொக்கப்பணத்திற்கான மதிப்பு குறையவே இல்லை. இதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.
அமெரிக்க டாலர்கள் ரொக்கமாக பரிமாறுவது கடந்த இரண்டு ஆண்டுகளை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
2020ஆம் ஆண்டு 26 சதவீதத்திலிருந்து ரொக்கப் பரிவர்த்தனை 19 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அமெரிக்க வங்கி எடுத்த ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
ஸ்வீடனில் உண்மையில் ஒரு சதவீத ரொக்கப் பரிவர்த்தனைதான் நடந்துள்ளது. உலக நாடுகளிலேயே இதுதான் மிகவும் குறைவான ரொக்கப்பரிவர்த்தனை.
ஜப்பானில் 21 சதவீத ரொக்கப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதனை உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் கூறுகிறார்கள். இந்த சதவீதம்தான் உலக நாடுகளில் அதிகமானது.
2019இல் மட்டும் பேங்க் ஆப் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ் உறுப்பினர் நாடுகளில் 15 ட்ரில்லியன் அளவுக்கு ரொக்கப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.
நவம்பர் 2020இல் 363 பில்லியன் டாலர்கள் அளவுக்கு ரொக்கப்பணம் சுழற்சியில் உள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஒரு டாலர் நோட்டுகளை விட நூறு டாலர் நோட்டுகளே அதிகம் அச்சிடப்படுகின்றன. இதற்கு அர்த்தம், மக்கள் அதிகம் செலவழிப்பதை விட சேமிப்பதற்கே முயல்கின்றனர் என்பதே இதன் அர்த்தம்.
ஸ்வீடன் நாடு ரொக்கப் பரிவர்த்தனையை முழுமையாக குறைத்துவிட்டு அனைத்தையும் எலக்ட்ரானிக்காக மாற்றியுள்ளது. இதனால் அனைத்து கடைகளிலும் பொருட்களை வாங்கலாம், பணத்தை போன் வழியாகத்தான் கட்ட முடியும். கடைகள் அரசு மூலம் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. 1960ஆம் ஆண்டு முதலாக ஊழியர்களின் சம்பளத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் சேமிப்பது, அதனை எடுத்துக்கொள்வது ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்களைசெய்துகொண்டிருக்கிறது அந்த நாட்டு அரசு.
2012இல் நிதி நிறுவனம் ஒன்று ஊழியர்களின் பெயர்கள், அடையாள எண்களோடு வங்கியையும் இணைத்துள்ளது. இதனால் எளிதாக பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். நகரத்தில் இருப்பவர்கள் எளிதாக இணைய வசதி மூலம் எலக்ட்ரானிக் முறையில் பணத்தை செலுத்தலாம். ஆனால் தொலைதூரங்களில் இருப்பவர்கள் எப்படி பொருட்களை வாங்குவது என்றால் இதற்கு பதில் கிடையாது. வங்கிகளில் பணத்தை ரொக்கமாக செலுத்துவது, பெறுவது ஆகியவற்றுக்கு தேவையான சட்டங்களை உருவாக்குவது பற்றி எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
க்வார்ட்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக