நிச்சயமற்ற எதிர்கால வாழ்வு - கடிதங்கள்

 







அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். 

நலமாக இருக்கிறீர்களா? 

போஸ்ட் ஆபீஸ் செல்ல முடியாததால், அஞ்சல் அட்டைகளை வாங்க முடியவில்லை. தபால் ஊழியர்களைப் பார்த்தாலே திடீரென எரிச்சலாகிறது. ஏன் என்றே தெரியவில்லை. 

கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது  - மாயா ஏஞ்சலோ சுயசரிதையை இன்றுதான் படித்து முடித்தேன். மொழிபெயர்ப்பு அவை நாயகன். நேர்த்தியான தமிழாக்கம் மோசமில்லை. கருப்பர் இனம், பாகுபாடு, பாலுறவு என தன்னை நிர்வாணமாக முன்வைத்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட மாயாவின் துணிச்சல் வாசகர்களுக்கு வாசிக்கும்போதே பயம் தருகிறது. சிறுவயது துயர வாழ்க்கை, சூதாடும் அம்மா, கட்டற்ற பாலியல் விருப்பம் கொண்ட தந்தைமார்கள், பாலியல் வன்புணர்வு, நிச்சயமற்ற எதிர்கால வாழ்வு, தமக்காக மட்டுமே வாழ்க்கை என கருப்பர் இனம் குறித்த பதிவுகள் திகைக்க வைக்கின்றன. 

வெள்ளையர்கள் காரணமின்றி கருப்பர்களை ஒதுக்கும் பகுதி படிக்கும்போதே ரத்தத்தை சூடாக்குகிறது. குறிப்பாக மாயாவுக்கு பல் மருத்துவம் பார்க்கும் பகுதி. டிஸ்கவரி ஆப் இந்தியாவில் எட்டே பக்கங்கள்தான் படித்திருக்கிறேன். சிறையில் ஒன்றே கால் ஆண்டுகள் செலவழித்து எழுதிய நூல் இது. 

இப்படி நூல் எழுதுவதற்கான காரணத்தை முன்னரே கூறிவிடுகிறார். 

நன்றி!

ச.அன்பரசு

7.3.2019





கருத்துகள்