ஒன்றிய அரசின் பசிபட்டினி பற்றிய ஆவேசமும் உண்மையும்!

 




பசிபட்டினி தொகுப்பு பட்டியல் 2021


யாருக்கும் தான் செய்துகொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றிய மதிப்பீடுகளைக் கொடுத்தால் உடனே கோபம் வந்துவிடும். காரியம் நடந்துகொண்டிருக்கும்போதே முடிவை சொல்கிறாயே என்று ஒன்றிய அரசும் கூட பட்டினிதொகுப்பு பட்டியல் முடிவை அறிவியல் ஆதாரமே இல்லை என்று எளிமையாக கூறிவிட்டது. 

மொத்தம் 116 நாடுகள் உள்ள பட்டியலில் இந்தியா இப்போது 101 இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இடத்தைப் பிடித்த தற்கே எல்லாம் எங்கள் கட்சி பிரதமரின் உழைப்பால் வந்தது என கட்சி தொண்டர்கள், ஐடி விங்குகள், சமூகவலைத்தள விளக்குகள் கொண்டாடிக்கொண்டு உள்ளனர். ஒன்றிய அரசைப் பொறுத்தவரை இப்படி சமாளிப்பு பதில் சொல்வது இத்தோடு நிற்காது. எளிதாக வணிகம் செய்வதற்கான பட்டியலிலும் தடுமாற்றம், பத்திரிகை ஜனநாயக பட்டியலிலும் பின்னடைவு, எகனாமிஸ்ட் பத்திரிகை கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா குறைத்தே கணக்கு காட்டுகிறது எனசெய்தி வெளியிட்டுள்ளது. இப்படி பல்வேறு ஆய்வுகளையும் தவறு என சுட்டிக்காட்டவேண்டிய தேவையும் அவசியமும் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

பட்டினிப் பட்டியலை எடுக்க முக்கியமான அம்சங்கள் சில உள்ளன. அவை. ஊட்டசத்து பற்றாக்குறையான குழந்தைகளின் எண்ணிக்கை, உயரத்திற்கு ஏற்ற எடை, எடைக்கான சரியான உயரம், கொழுப்பு அளவு குறைவாக உள்ள குழந்தைகள், குழந்தைளின் இறப்பு, ஆகியவற்றைக் கவனிக்கிறார்கள். 2012ஆம் ஆண்டைவிட இந்த ஆண்டு எல்லா அம்சங்களுமே பரவாயில்லைதான். ஆனாலும் தகுதி கீழே வர முக்கியமான காரணம் உள்ளது. அதுதான் ஐந்து வயதுக்கு உட்பட்ட  குழந்தைகளின் எடை, உயரம், கொழுப்பு அளவு குறைவாக இருப்பது தற்போது இந்த பாதிப்பு 15.1 லிருந்து 17.3 ஆக மாறியிருக்கிறது. ஊட்டச்சத்து பாதிப்பு கொண்ட குழந்தைகளின் அளவும் 15 லிருந்து  15.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசு, நான்கு கேள்விகளை வைத்து குழந்தைகளின் ஊட்டச்சத்து பிரச்னையை காலப் என்ற அமைப்பு அளவிட்டது தவறு என முட்டுக்கொடுத்தது. ஆனால் ஆய்வு செய்த அமைப்பு நாங்கள் சரியாகவே அளவிட்டோம் என்று பதில் கூறியுள்ளது. 

ஆய்வு நிறுவனம்  உணவு மற்றும் விவசாய அமைப்பின் அறிக்கையை மையமாக வைத்தே ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளின் அளவைக் கணக்கிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2016-20 வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை விவரங்கள் உள்ளது. சரியான கலோரி கிடைக்காத குழந்தைகளையும் ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளனர். 

ஆண்டுதோறும் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை பட்டினி தொகுப்பு பட்டியல் ஆய்வு கணக்கில் கொள்ளவில்லை. ஆனால்  இந்த ஆய்வை உலக நாடுகள் அனைத்துமே கருத்தில் கொள்கின்றன. இந்த ஆய்வு முறையும் காலத்திற்கேற்ப மேம்பட்டு வருகிறது. இதை வைத்தே அரசு பட்டினியை ஒழிக்க என்ன திட்டங்களை தீட்டி வருகிறது என கண்டுபிடித்துவிடலாம். ஒன்றிய அரசு சர்வதேச அளவில் மதிக்கப்படும் ஆய்வை ஏற்கவில்லை. அதேசமயம் குடும்பநல ஆய்வில் கூட அரசுக்கு ஆதரவாக நல்ல முடிவுகள் கிடைக்கவில்லை என்பதை என்ன சொல்வது? 2019-20ஆம் ஆண்டு முடிவைத்தான் இங்கு குறிப்பிடுகிறேன். மேற்கு நாடுகளின் அமைப்பு செய்யும் ஆய்வு முடிவைப் பற்றி கவலைபட்டு கொள்கை மீது மறுசீராய்வு செய்தால் நமக்கு பலனுண்டு. கோபம் கொண்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. 

மின்ட் - தனய் சுகுமார், பிரக்யா ஸ்ரீவஸ்தா





கருத்துகள்