இறுதியாத்திரை அனுபவத்தில் அப்பாவின் நினைவுகள்! - கடிதங்கள்

 



எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர்






அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம். 

நலமாக இருக்கிறீர்களா? இன்றுதான் இங்கு வெயில் லேசாக அடிக்கிறது. விரைவில் சென்னை ஆபீசுக்கு வேலைக்கு வரச்சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன். 

அறையில் தங்கவில்லை என்றாலும் வாடகையை மாதம்தோறும் கொடுத்து வருகிறேன். அறையைத் தக்க வைக்க வேறு வழியில்லை. எம்.டி. வாசுதேவன் நாயரின் இறுதி யாத்திரை நாவலைப் படித்தேன். 130 பக்கம் கொண்ட நாவல் இது. புற்றுநோயால் இறந்துபோன அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு வரும் நான்கு மகன்களைப் பற்றிய கதை. நான்கு மகன்களின் வாழ்க்கையில் அப்பாவின் பங்கு, அப்படி எப்படி இருந்தார் என்பதை விவரிக்கிறார் ஆசிரியர். 

கேரளம், இலங்கை என பயணிக்கும் கதையில் அனைத்து இடங்களையும் சிறப்பாக அனுபவித்து உணரும்படி எழுதியிருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம், மொழிபெயர்ப்பாளரான சைலஜாதான். பொருளாதாரத்தில் முக்கியமான வார்த்தைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதுதொடர்பான நூலில் இன்னும் நூறு பக்கங்கள் மிச்சமுள்ளன. 

அம்பேத்கரின் இந்துமத தத்துவம் என்ற நூலை எடிட்டர் கே.என்.சிவராமன் பரிசாக வழங்கினார். அதன் இரு பகுதிகளைப் படித்துள்ளேன். இன்னும் ஒரு பகுதி மிச்சமிருக்கிறது. மனு எப்படி சமூக பிரிவினைகளை ஏற்படுத்தும் விதமாக விதிகளை ஏற்படுத்தி அதனை சமூகங்கள் போலச்செய்தல் என பிரதியெடுத்தன என்பதை எழுதியுள்ளார் அம்பேத்கர். 

மேட் இன் சீனா என்ற படம் பார்த்தேன். செக்ஸ் சூப் விற்கும் குஜராத்தி ஒருவரின் வெற்றிக்கதையைப் பேசுகிறது படம். இந்த சூப்பைப் குடித்து சீன அதிகாரி ஒருவர் இறந்துவிட, சூப் ஓனரான ராஜ்குமார் ராவ் மீது வழக்கு போடப்படுகிறது. அதிலிருந்து எப்படி  அவர் மீண்டு வருகிறார், தனது பிராண்டை எப்படி வலுவாக்குகிறார் என்பதுதான் கதை. ராஜ்குமார் ராவ், பொம்மன் இரானி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். வணிகரீதியான பாடம் சொல்லும் படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று கூறமுடியாது. பலரும் மௌனிராயின் கவர்ச்சிக்காகவே வருவார்கள். 

நன்றி

ச.அன்பரசு 

16..1.2021


படம் 

மின்னற்பொழுதே தூரம் வலைத்தளம்

கருத்துகள்