இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

manadespadal- a new book coming soon

படம்
title only english. but all article in tamil.

ராணித்தேனீயின் கதை

ராணித்தேனீயின் கதை             மீரா பரத்வாஜ்                     தமிழில்: ஜோ ஃபாக்ஸ்     சாயா நஞ்சப்பாவின் கண்கள் தன் நிறுவனமான ‘நெக்டார் ஃப்ரெஷ்’ பற்றிப்பேசும்போது மகிழ்ச்சியிலும், ஆர்வத்திலும் அவ்வளவு அழகாக மினுங்கி ஒளிர்கிறது. ‘’ ஒரு சிறு கிராமம் சார்ந்த தொழில் நிறுவனமாக 2007ல் எனது கிராமமான கூர்க்கில், அதனைத் தொடங்கினேன். தேனுக்கு புகழ்பெற்ற பகுதி அது ’’ என்று மகிழ்ச்சி மாறாமல் கூறுகிறார் சாயா.     திருமணத்தோல்வி மற்றும் தந்தையின் மரணம் என மிகச்சிக்கலான காலகட்டத்தில் அவர் தொழில் ஆரம்பித்த தருணம் இருந்தது.  தேன் பற்றிய தன் அறிவை விரிவாக்கிக்கொள்ள மத்திய தேன் மற்றும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கழகத்தின் அடிப்படை பயிற்சியில் சேர்ந்தார். ‘’நிறுவனத்திற்கு அடிப்படைத்தேவையான தேனை சித்திஸ், ஜீனு குருபாஸ் மற்றும் பல மக்களிடமிருந்தும், பல்வேறு மாநில விவசாயிகளிடமிருந்தும் பெறுகிறேன், ’’ என்கிறார் சாயா. இன்று இவரது நெக்டார் ஃப்ரெஷ் நிறுவனமானது, பெரும் ஏற்றுமதியாளர் மற்றும் தயாரிப்பாளராக இந்தியாவில் உருவெடுத்திருக்கிறது. தேனைப் பக்குவப்படுத்தியும், மூலப்பொருள் ஏற்றுமதி செய

சிக்கனமான புதுமைவழித் தீர்வுகள்

சிக்கனமான புதுமைவழித் தீர்வுகள்              கேத்தரின் கிலோன்             தமிழில்:வின்சென்ட் காபோ ஒளிரும் புத்தகப்பை தயாரித்தவர்: அனுஷீலா சகா சவால்      தொடர்ச்சியான மின்வெட்டுகளினால் பள்ளிக்குப் பிறகான படிப்பு மாணவர்களுக்கு எளிதானதாக இல்லை. பயணம்      டெல்லியைச் சேர்ந்த அனுஷீலா சகா தன்வீட்டில் பணிப்பெண்ணுடன் நடத்திய உரையாடலின்போது, அங்கு ஏற்படும் மின்வெட்டு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான சிந்தனை அவரின் மூளையில் உதித்தது. சீல் இந்தியா நிறுவனத்தின் புதுமை உருவாக்கத்திறன் தலைவரான அனுஷீலா, ‘’ டெல்லியிலுள்ள பெரும்பாலான குடிசைப்பகுதிகளில் தொடர்ச்சியான மின்வெட்டுகளினால் அங்குள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் மெழுகுவர்த்தி அல்லது மண்ணெண்ணெய் விளக்கின் மூலம் படிக்கிறார்கள். அசைந்து எரிந்து நின்றுவிடுவது போல் எரியும் சுடரின் ஒளியில் படிப்பது மிக கடினமான காரியம் என்பதோடு, படிப்பின் மீதான ஆர்வமும் வடிந்துபோய், பள்ளியை விட்டு நிற்கிற நிலைவரை செல்கின்றதும் உண்டு ‘’ என்று விரிவாக பேசுகிறார் அனுஷீலா.      சிறந்த விளக்குகளைக் கொண்ட ஒரு பையை உருவாக்க வேண்டும் என்பது இவரின் ஆசையா

ஒடிஷாவின் ஐன்ஸ்டீன்

ஒடிஷாவின் ஐன்ஸ்டீன்                      ஹேமந்த் குமார் ரௌட்      சிறிய கேக் துண்டுகளை வெட்டும் இயந்திரத்திலிருந்து பெரிய தொழிலக கத்தரிக்கோல்கள், காற்றடிக்கும் இயந்திரத்திலிருந்து ரிக்சா, தானியங்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், கிராமத்து குளிர்சாதனப்பெட்டியிலிருந்து பல்வேறு செயல்பாடுகளைக்கொண்ட சாதனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த கண்டு பிடிப்புகள் மிஹிர்குமார் பண்டாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்திற்கும், அவற்றைப்பயன்படுத்திய முறைக்கும் சாட்சியாக உள்ளன.      ஒடிஷாவின் கரையோர மாவட்டமான பாலசோர் மாவட்டத்திலில் உள்ள பகனாகா அருகிலுள்ள இச்சாபூரினை பூர்வீகமாக கொண்டவரான 47 வயதாகும் பண்டாவின் அறிவுத்திறன் சிறுவயதிலேயே உத்வேகம் கொண்டு ஒளிரத்தொடங்கியிருக்கிறது. இளமையிலிருந்தே பண்டா வாகனங்களின் இயந்திர பாகங்களை கழற்றுவது, பின அவற்றை இணைப்பது என்பது அவருக்கு ஒரு பொழுதுபோக்கான விஷயமாக, விளையாட்டாக இருந்து வந்தது. பண்டாவின் கண்டுபிடிப்புகள் மக்களுக்கான கண்டுபிடிப்புகள், மற்றும் மாணவர்களுக்கான கண்டிபிடிப்புகள் என் வாழ்வில் தினமும் பயன்படுத்தும் வண்ணமான பொருட்கள

பார்வையாளனுக்கு பாடம் கற்பிக்கும் ஒரு இயக்குநர்

பார்வையாளனுக்கு பாடம் கற்பிக்கும் ஒரு இயக்குநர்                   எஸ். கலீல்ராஜா                தொகுப்பு: லாய்டர் லூன் நிபந்தனைகள் என்ன?     குறைந்த பட்ஜெட்டில் வார்னர் பிரதர்ஸ்க்காக நோலன் எடுத்துக்கொடுத்த ரீமேக் படமாக இன்சோம்னியா 100 மில்லியன் டாலர் வசூல் குவிக்க, அப்போதுதான் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் நோலன்.     அப்போது கதைக்கு ஹாலிவுட்டில் ஏகத்துக்கும் பஞ்சம். ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், பேட்மேன் போன்ற படங்களை தூசுதட்டி காலத்திற்கு ஏற்ப ரீபூட் செய்ய தொடங்கின தயாரிப்பு நிறுவனங்கள். ஏற்கனவே அறிமுகமான கதாபாத்திரங்கள் என்பதால் வித்தியாசமான கதை சொல்லும் முறை வார்னருக்கு தேவைப்பட்டது. பலமும், பலவீனமும் கொண்ட நாயகன், அவனது புதுமையான கார் மற்றும் பயன்படுத்தும் தொழில்நுட்பம், அவனை விட அதிக பலம் கொண்ட வில்லன் என பேட்மேனை புதிய கோணத்தில் நோலன் சொன்னவிதம் வார்னர் பிரதர்ஸ் க்கு பிடித்துவிட்டது. ‘டிஜிட்டல் கேமராவில் படம் எடுக்க மாட்டேன்’ , கிராபிக்ஸ் பயன்படுத்த மாட்டேன். முடிந்தவரை அனைத்தையும்  செட் போடவேண்டும். எடிட்டிங்கும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். நான் நினைத்

prakash ponnusamy poems - loiter loon

படம்

மொழிபெயர்ப்பாளர்களை ஏன் மதிக்க வேண்டும்?

மொழிபெயர்ப்பாளர்களை ஏன் மதிக்க வேண்டும்?                                            டிம் பார்க்ஸ் தமிழில்: எதிராஜ் அகிலன்      நீங்கள் நேசித்து வாசிக்கும் மிலன் குந்தேராவை எழுதியது யார்? விடை: மைக்கேல் ஹென்றி ஹைம். அறிவார்ந்த எழுத்தாளர் என்று கருதப்படும் ஓரான் பாமுக்கை? அவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மௌரீன் ஃப்ரீலி. கற்பனை வளம் கூடிய பாண்டித்யம் மிக்க ராபர்ட்டோ காலஸ்ஸோ? ம்ஹ்ம். நான்தான்.      தன் வேலையை முடித்துவிட்ட பிறகு மொழிபெயர்ப்பாளன் காணாமல் போய்விடவேண்டும். படைப்புத்திறன் மிகுந்த, கவர்ச்சிமிக்க, பேரெழுத்தாளர் மட்டுமே புவியெங்கும் வியாபித்து நிற்க விரும்புவார். அவருடைய வாசகர்களில் பெரும்பான்மையோர் உண்மையில் அவருடைய எழுத்தை வாசிப்பதில்லை என்ற யதார்த்தத்தை ஜீரணிக்க முடியாது.      நான் மொழிபெயர்ப்பு பணிகளிலும் ஈடுபடுவதுண்டு என்ற தகவல் என் புதினங்களை வாசிக்கும் வாசகர்களை அதிருப்தி கொள்ள வைப்பதை அவர்களை சந்திக்கும்போது கண்டிருக்கிறேன். தான் முக்கியமான எழுத்தாளர் என்று நம்பும் ஒருவர் செய்யக்கூடாத காரியமாக மொழிபெயர்ப்பு பணியினை பார்க்கிறார்கள்.      ஒரு மொழிபெயர்ப்பாளர

இந்தியப்பிரிவினையைப்பற்றிய திரைப்படங்கள் வரலாற்று ரீதியில் ஒரு பட்டியல்

இந்தியப்பிரிவினையைப்பற்றிய திரைப்படங்கள் வரலாற்று ரீதியில் ஒரு பட்டியல் 1.   சின்னமூல், வங்கமொழி 1951, இந்தியா இயக்குநர்: நிமாய்கோஷ் 2.   கர்த்தார் சிங், உருது, பஞ்சாபி, 1954, பாகிஸ்தான் இயக்குநர்: சைபுதின் சைப் 3.   சுபர்ண ரேகா, வங்கமொழி, 1962, இந்தியா இயக்குநர்: ரித்விக் கட்டக் 4.   கரம் ஹவா, உருது, இந்தி, 1973, இந்தியா இயக்குநர்: எம்.எஸ் சத்யூ 5.   தமஸ், இந்தி, 1986, இந்தியா இயக்குநர்: கோவிந்த் நிஹ்லானி 6.   வஸ்துஹாரா, மலையாளம், வங்கமொழி, 1990, இந்தியா இயக்குநர்: அரவிந்தன் 7.   மம்மோ, உருது, இந்தி, 1994, கனடா இயக்குநர்: ஷியாம் பெனகல் 8.   எர்த், உருது, இந்தி, 1994, கனடா இயக்குநர்: தீபா மேத்தா 9.   டிரெய்ன் டு பாகிஸ்தான், உருது, இந்தி, 1997, இங்கிலாந்து இயக்குநர்: பமேலா ரூக்ஸ் 10.            ஜின்னா, உருது, ஆங்கிலம், 1998, பாகிஸ்தான் இயக்குநர்: ஜமில் தால்வி 11.            கர்வான், இந்தி, 1999, இந்தியா இயக்குநர்: பங்கஜ் புடாலியா 12.            ஹேராம், தமிழ் 2000, இந்தியா இயக்குநர்: கமலஹாசன் 13.            சித்ரா நாதிர் பரே, வங்கமொழி, 2002, பங்களாதேஷ் இயக்குநர்: தன்வ

சு. ஆ. வெங்கடசுப்புராய நாயகர் நேர்காணலிலிருந்து சில பகுதிகள்..

சு. ஆ. வெங்கடசுப்புராய நாயகர் நேர்காணலிலிருந்து சில பகுதிகள்..                                            சீனு. தமிழ்மணி நீங்கள் எப்படி மொழிபெயர்ப்புத்துறைக்கு வந்தீர்கள்? தொடக்கத்தில் சாதாரணமாகவும், பின்னர் பயிற்சியாகவும் மொழிபெயர்ப்பினைச் செய்துவந்தேன். பிறகு அதில் உள்ள சவால்களும், சுவாரசியங்களும் அப்பணியை செய்து முடிக்கும்போது கிடைக்கும் மன நிறைவும் என்னைத்தொடர்ந்து இயக்கி வருகின்றன. ஒரு படைப்புக்கு பல மொழிபெயர்ப்புகள் வருகின்றன. இப்படி பல மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பிரஞ்சு படைப்பு ஏதாவது இருக்கிறதா?      பலவற்றைச்சொல்லலாம். மதாம் பொவாரி எனும் பிரஞ்சு புதினத்தின் ஐந்து ஆங்கில மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. அவற்றில் உள்ள வித்தியாசங்களை ஆய்வு செய்து Guillemin Fletcher நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த ஐந்து மொழிபெயர்ப்புகளைத் தவிர இன்னும் பல மொழிபெயர்ப்புகள் அதே படைப்புக்கு ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. எனவே காலந்தோறும், மாறிவரும் மொழியின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு படைப்புக்கு பல மொழிபெயர்ப்புகள் தேவைப்படுகின்றன. மொழிபெயர்ப்பில் அடிக்குறிப்புகள் தேவையா?      இயன்ற வ

இளைஞர்களின் இந்தியா - சேட்டன் பகத்

நமது இளைஞர்கள் இந்தியா அதிக அளவிலான இளைஞர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 70% விழுக்காடு முப்பத்தைந்து வயதிற்கும் குறைவாக, 25 வயதில் இருக்கும் நடுவயது கொண்டவர்கள் அதிகம். அரசியல் அல்லது இந்தியாவின் பிரச்சனைகள் குறித்து அதிகம் பேசுவதில்லை என்பதோடு முக்கிய வாக்குவங்கியாக அவர்கள் உருவாகவில்லை. நாட்டிலுள்ள இளைஞர்களின் குரலை நானும் சிறிது பிரதிபலிக்கிறேன் என்று நினைக்கிறேன். இளைஞர்களின் பிரச்சனைகள் பற்றி முடிந்தவரை பேச முயற்சிக்கிறேன். என்னுடைய புத்தகங்களைப் படிக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு ஏதேனும் செய்ய விரும்புகிறேன்.      மாற்றத்திற்கான பெரும் நம்பிக்கையாக இளைஞர்களையே கருதுகிறேன். கவர்ந்திழுக்கக் கூடியவர்களாகவும், பல்வேறு சிந்தனைகளை வெளிப்படுத்தவும், புதுமைகளை ஏற்றுக்கொண்டு செயல்பட ஆர்வம் கொண்டுள்ளவர்களாகவும் அவர்களை நான் பார்க்கிறேன். என் நம்பிக்கையை பெரிதும் இளைஞர்களிடமிருந்தே பெறுகிறேன்.      கல்வியின் தேவை, மூடர்கூடம், வியாபாரமான கல்வி ஆகிய கட்டுரைகளில் நமது கல்வி அமைப்பு செல்லும் பாதை குறித்து ஆழமாக சிந்தித்துள்ளதை அறியலாம். சோனியா காந்திக்கு ஒரு பகிரங்க கடிதம் எனும்