இளைஞர்களின் இந்தியா - சேட்டன் பகத்

நமது இளைஞர்கள்


இந்தியா அதிக அளவிலான இளைஞர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 70% விழுக்காடு முப்பத்தைந்து வயதிற்கும் குறைவாக, 25 வயதில் இருக்கும் நடுவயது கொண்டவர்கள் அதிகம். அரசியல் அல்லது இந்தியாவின் பிரச்சனைகள் குறித்து அதிகம் பேசுவதில்லை என்பதோடு முக்கிய வாக்குவங்கியாக அவர்கள் உருவாகவில்லை. நாட்டிலுள்ள இளைஞர்களின் குரலை நானும் சிறிது பிரதிபலிக்கிறேன் என்று நினைக்கிறேன். இளைஞர்களின் பிரச்சனைகள் பற்றி முடிந்தவரை பேச முயற்சிக்கிறேன். என்னுடைய புத்தகங்களைப் படிக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு ஏதேனும் செய்ய விரும்புகிறேன்.

     மாற்றத்திற்கான பெரும் நம்பிக்கையாக இளைஞர்களையே கருதுகிறேன். கவர்ந்திழுக்கக் கூடியவர்களாகவும், பல்வேறு சிந்தனைகளை வெளிப்படுத்தவும், புதுமைகளை ஏற்றுக்கொண்டு செயல்பட ஆர்வம் கொண்டுள்ளவர்களாகவும் அவர்களை நான் பார்க்கிறேன். என் நம்பிக்கையை பெரிதும் இளைஞர்களிடமிருந்தே பெறுகிறேன்.

     கல்வியின் தேவை, மூடர்கூடம், வியாபாரமான கல்வி ஆகிய கட்டுரைகளில் நமது கல்வி அமைப்பு செல்லும் பாதை குறித்து ஆழமாக சிந்தித்துள்ளதை அறியலாம். சோனியா காந்திக்கு ஒரு பகிரங்க கடிதம் எனும் கட்டுரை இளைஞர்களின் எதிர்பார்ப்பை நாட்டின் சக்தி வாய்ந்த ஒருவரிடம் முன்வைக்கிறது. காந்திக்கு ஒரு கடிதம் எனும் கட்டுரை இன்றைய சூழலை பற்றி காந்தியிடம் பேசுவதைப் போல எழுதப்பட்டதாகும்.

இப்பகுதியைப் படித்து முடிக்கும்போது, இந்திய இளைஞர்கள் தம் ஒவ்வொரு நிலையிலும் கடுமையாக உழைக்கும்போது நல்ல கல்வியும், தொழிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்கள் மனதில் துளிர்க்கும்.

எனது முட்டாள்தனமான தற்கொலைத்திட்டம்

‘’ கடவுள் நம் வாழ்வை பறித்துக்கொள்ள நினைத்தால் மனிதர்களின் உடலில் அதற்கான பட்டனைப் பொருத்தியிருப்பார் ’’

     இன்றைய செய்திகளில், தொடர்ச்சியாக நடைபெறும் தற்கொலைகளில் குறிப்பாக பெரும்புகழ் பெற்ற உயர்ந்த கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களின் தற்கொலைகள் அதிகம். தனக்கு எதிர்காலம் இல்லை; எதற்காக வாழ்கிறோம் என்று இலக்கில்லாதபோது மக்களில் பலரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
     பொறுங்கள். ஐ.ஐ.டி மட்டும்தான் ஒளிர்ந்த, பளபளப்பான கனவான எதிர்காலத்தை தீர்மானிக்கவும் உதவும் மோசமான முடிவிற்கு கொண்டு வருகிறதா?  அவை எதையும் நமக்கு தருவதில்லையா? இளமை, கடுமையாக உழைக்கும் சிறந்த மாணவனுக்கு இந்நிறுவனம் எதுவும் செய்யவில்லையா? அவனை உலகம் முன்னிறுத்தியது யார்? ஏன் இதனைப் பின்பற்றக்கூடாது? இதன் பதிலாக நிலையான புகழ்பெற்ற சிறந்த நிறுவனமான கருதி பூஜிப்பதால்தான் இதன் மற்றொரு பக்கத்தை மறந்துவிடுகிறோம்(ஐ,ஐ,டி சிறந்தது என்று நானும் நம்புகிறேன்). அதன் மறுபக்கமாக அபூர்வமான சாராம்சமான கல்விமுறையின் அழுத்தம் உலகிலேயே அதிகம் இங்குதான் உள்ளது.

     கல்விமுறை பற்றியும், அதில் ஏற்படுத்த தேவை இருக்கும் முக்கியமான விஷயங்கள் குறித்தும் அல்லது நடந்துகொண்டிருந்த மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்கவும் பல யோசனைகளைக் கொண்டு இருந்தேன். இவற்றில் தேர்ந்த விஷயங்களுக்கு முன்னால் என்னுடைய கதையைக் சொல்லிவிடுகிறேன்.

     தற்கொலை பற்றிய செய்திகள் சிறுவயது நினைவு ஒன்றினை மேலெழுப்புகிறது. பதினான்கு வயதில் எனக்கு தற்கொலை பற்றிய தீவிரமான ஆழ்ந்த சிந்தனை தோன்றியது. பத்தாம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் வேதியியல் தேர்வினை படுமோசமாக எழுதியிருந்தேன். ஐ.ஐ.டி யில் சேருவதையே குறிக்கோளாக கொண்டு இருந்தேன். 68% மதிப்பெண்கள் ஐ.ஐ.டியில் சேர அவசியம். எது என்னை தேர்வு குறித்து பயமுறுத்தி மாற்றியதோ தெரியாது. ஆனால் ஒன்றைத்தெரிந்துகொண்டேன்; என்னை நான் கொன்றுவிட வேண்டும். அதில் என் மனதில் இருந்த விவாதமே எப்படி? எந்த முறையில் இறப்பது என்பதுதான். நகைமுரணாக வேதியியலே எனக்கு ஒரு வழிகாட்டியது. காப்பர் சல்பேட் பற்றி முன்னமே படித்திருந்தேன். மேலும் அது விலை மலிவாகவும், விஷம் கொண்டதாகவும் இருந்தது. அருகிலிருந்த கடையிலேயே அதைப்பெற்றுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளத் தயாரானேன்.

     என்னை நானே கொன்றுகொள்வதற்கு இருந்த அடிப்படைக் காரணங்கள் மிக எளியவை. என்னை யாரும் விரும்பவில்லை; எனது வேதியியல் மதிப்பெண்ணும் படுமோசம்; எதிர்காலம் இல்லாத நான் இந்த உலகில் இல்லாதததினால் என்ன மாற்றம், இழப்பு ஏற்பட்டுவிடப்போகிறது? இரண்டு ரூபாய்க்கு காப்பர் சல்பேட் வாங்கினேன். சிறந்த விலை மலிவான முறையில் உலகை விட்டுச்செல்லும் வழி இதுவாகத்தான் இருக்கமுடியும்.

     ஆனால் அதனை நான் செய்யாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, வீட்டின் அருகிலிருந்த அத்தை ஒருவரிடம் இயல்பாக காப்பர் சல்பேட் குறித்துப் பேச, புத்திசாலியான அவர் காப்பர் சல்பேட்டினால் இறந்துபோன பெண் பற்றியும், விஷத்தினால் ரத்தக்குழாய்கள் வெடித்து கடுமையான சித்திரவதைக்குப்பின்தான் இறந்தாள் என்று கூறினார். அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு உள்ளுக்குள் ஏராளமாக உதறலெடுக்கத் தொடங்கிவிட்டது. இரண்டாவது காரணம், நான் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்ட நாளில் வீட்டிற்கு வெளியே நின்று உணவு தேடிக்கொண்டிருந்த தெரு நாய் ஒன்றினை பக்கத்துவீட்டுச் சிறுவர்கள் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள். யாரும் அதனை விரும்பவில்லை. நாய் இங்கே இல்லாதபோதும், உலகில் எந்த வேறுபாடும் நிகழப்போவது இல்லை. நிச்சயம் இந்த நாயும் வேதியியலில் மிக மோசமான மதிப்பெண்களை எடுத்திருக்கும். ஆனால் கூட அது நான் மருந்து வாங்கிய கடைப்பக்கம் செல்லவில்லை. அதன் கவனம் முழுவதும் கிடைக்கப்போகும் அடுத்தவேளை உணவு குறித்த தேடலில் மட்டும் இருந்தது. அந்த நாயின் வயிறு நிரம்பிய பின், தெரு திருப்பத்தில், தனியாக வளைந்து படுத்து ஒற்றைக்கண்ணை விழித்தபடி உலகம் பற்றிய எந்த வசைகளையும், உதிர்க்காமல் படுத்திருக்கும். அந்த நாய் இறப்பது குறித்து எந்த யோசனையும் இல்லாது இருக்கும்போது, நான் மட்டும் ஏன் உளறிக்கொண்டு வீணாக யோசிக்கிறேன்? காப்பர் சல்பேட்டினை குப்பையில் எறிந்து இரண்டு ரூபாயை எப்போதைக்குமாக வீணாக்கினேன்.

     இதை நான் ஏன் உங்களிடம் கூறுகிறேன்? சில சமயங்களில் நமக்கு ஏற்படும் அழுத்தம் கடுமை கொண்டதுதான். மாணவர்களுடைய வாழ்வில் ஏற்படுகிற ஒன்றுதான். அவர்கள் இந்த சூழலில் எடுக்கும் பயங்கர முடிவு, அவர்களின் வாழ்வோடு இணைந்த மற்றவர்களின் மனங்களையும் நொறுக்கிவிடுவதோடு, இந்தியா கொண்டிருக்கும் தன் அற்புதக் குழந்தைகளையும் இழக்கவேண்டிய சூழ்நிலையாகிறது. அபத்தமான காப்பர்சல்பேட் கதை நமக்கோ, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கோ, நிகழ்ந்த, நிகழ்கின்ற ஒன்றாக இன்றும் இருக்கிறது என்பதனால்தான்.

     தயவு செய்து சற்று வெளியே பார்ப்போம். மனச்சோர்வு கொண்ட இளம் ஆன்மா ஒன்றினைக் கண்டால், அதற்கு ஆதரவு கொடுத்து, முன்தீர்மானம் இல்லாத மனதுடன் காதுகளைத் திறங்கள். திரும்பி பார்த்தால் என்னிடம் பேசிய பக்கத்துவீட்டு பெண்மணி மற்றும் நாய் ஆகியோர் அறியாமலேயே என் வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கிறார்கள். கடவுள் நம் வாழ்வை எடுத்துக்கொள்ள விரும்பினால் அதனை நிறுத்திவிடக்கூடிய பட்டனை தந்திருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. நம்பிக்கை கொண்டு பயணிக்கின்ற வாழ்வை நமக்கு திட்டமிட்டிருக்கிறார்.

     வாழ்வை கடினமான தருணங்களில் தடுமாறினாலும் எவ்வளவு காயங்களை, வருத்தங்களைத் தந்தாலும், ஒரு தெருநாய் தன் வாழ்வை விட்டுக்கொடுக்காமல் வாழும்போது, எந்த காரணமில்லாது சிறந்த உயிரிகளான மனிதர்கள் நாம் ஏன் முட்டாள்தனமாக முடிவெடுக்கவேண்டும்? அர்த்தம் உள்ளதுதானே சரியா?





                           உள்ளொளி


அனைவருக்கும் காலை வணக்கம். அதோடு என்னை இங்கு உங்களோடு பேச வாய்ப்பு கொடுத்து அழைத்தமைக்கு நன்றி. இந்த நாள் உங்களை பற்றியதே. சுகமாக இருந்த வீடுகளிலிருந்து எதையோ தேடி கல்லூரி வந்திருக்கிறீர்கள்( சிலருக்கு இது நேர்மறையாக இருக்கும்). நீங்கள் அனைவரும் எதிர்பார்ப்புகளோடு இருக்கிறீர்கள். மனிதர்களின் வாழ்வில் குதூகலாமாக இருந்த நாட்கள் என்று கூறுவது சில நாட்களைத்தான். முதல் நாள் கல்லூரி செல்வது என்பது அதில் உள்ளடங்கும் ஒன்றாகும். கல்லூரிக்கு கிளம்பும்போதே உங்கள் வயிற்றில் மணி அடிப்பது போலிருக்கும். கல்லூரியின் ஆடிட்டோரியம், ஆசிரியர்கள் எப்படி இருப்பார்கள், புதிய வகுப்புத்தோழர்கள் எனப் பெரும் ஆவல் நம் மனதில் அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தூண்டும். இந்த எதிர்ப்பார்ப்பைத்தான் நான் உள்ளொளி(ஸ்பார்க்ஸ்) என்பேன். இது மட்டும் உங்களை உயிர்ப்பானதாக வைத்திருக்கும். நான் இன்று உள்ளொளியை அதன் வெளிச்சம் குறையாமல் பாதுகாப்பது பற்றி பேசப்போகிறேன் அல்லது அதனை மற்றொரு வழியில் மாற்றி மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? பெரும்பான்மை நேரம் இல்லையென்றால் குறிப்பிட்ட கணங்கள் என்று கொள்வோமா?

உள்ளொளி எங்கேயிருந்து தொடங்குகிறது? நாம் அவற்றுடனே பிறப்பதாகக் கருதுகிறேன். என் இரட்டையராக பிறந்த பிள்ளைகள் கோடி உள்ளொளியினைப் பெற்றிருக்கக் கூடும். ஒரு சிறிய சிலந்திமனிதன் பொம்மை அவர்களை படுக்கையிலிருந்து குதிக்க வைக்கிறது. பூங்காவில் சத்தத்தோடு ஊஞ்சலாடுவது அவர்களுக்கு பெரும் சாகச அனுபவத்தை அளிக்கிறது. அவர்களின் அப்பா கூறும் கதை அவர்களுக்கு பெரும் எதிர்பார்ப்புகளைத் தருகிறது. தங்களுக்கே தங்களுக்கு என்று இருக்கும் பிறந்த நாளின்போது கேக்கை வெட்ட, பல மாதங்களுக்கு முன்பிருந்தே வரப்போகும் பிறந்தநாளை எண்ணிக் கணக்கிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
உள்ளொளி கொண்டுள்ள உயிர்களை, மாணவர்களாக காணும்போதே உணர்கிறேன். ஆனால் வயதான மனிதர்களை காணும்போது அவர்களிடம் உள்ளொளியைக் காண்பது அபூர்வமானதாக இருக்கிறது. இதன் காரணம், வயதானபின்பு உள்ளொளி மங்கி மறைந்துவிடும் என்பதுதான். மங்கிய உள்ளொளி கொண்டவர்கள் உற்சாகமற்ற, மனம் தளர்ந்த, நோக்கமற்ற, விரக்தியானவர்களாக இருக்கிறார்கள். ஜாப் வி மெட் இந்தி திரைப்படத்தில் கரீனா முன்பகுதியிலும், பின்பகுதியிலும் எப்படி இருக்கிறார்? உள்ளொளி இல்லாதபோது நிகழ்வது அதுதான். சரி, உள்ளொளியை எப்படி காப்பாற்றுவது?

உள்ளொளியை ஒரு விளக்கின் நெருப்புச்சுடராக கற்பனை செய்துகொள்வோம்.  முதலாவதாக நம் உள்ளொளியைப் பராமரிக்க அதற்கு எரிபொருளை தொடர்ந்து வழங்க வேண்டும். இரண்டாவதாக புயல்களிலிருந்து அதனை பாதுகாக்க வேண்டும்.

நம்மில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நம் வாழ்க்கைக்கு அடையாளமாக வெற்றி மற்றும் அதனினும் கூடுதலான ஒன்று தேவைப்படுகிறது. நீங்கள் வளர்ந்து வரும்போதே வாழ்க்கைக்கு பணத்தின் தேவை என்னவென்று உணர்ந்திருப்பீர்கள். நம்முன் இருக்கும் வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவுவதும் அவைதான். பொருளாதார சுதந்திரம் கிடைப்பது என்பது பெரிய சாதனைதான். வாழ்வின் தேவையே பணம்தானா என்றால் இல்லை. அப்படி பணம் என்றிருந்தால் அம்பானி தன் தொழில்களை ஏன் விரிவாக்கிக்கொண்டே போகிறார்? ஷாரூக்கான்  ஆடாமலும், பாடாமலும் வீட்டிலேயே அமர்ந்திருக்க முடியுமே?  ஸ்டீவ் ஜாப்ஸ் ஏன் ஐபோனை உருவாக்க அவ்வளவு கடினமான உழைப்பைத் தரவேண்டும்? பிக்ஸார் நிறுவனம் மூலம் சம்பாதிப்பது போதாதா? ஏன் அவர்கள் உழைக்கிறார்கள் என்றால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதால்தான். அது அவர்களை உயிர்ப்பானதாக மாற்றுகிறது. தற்போதைய நிலையிலேயே அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நீங்கள் நன்றாக படித்தால் உங்களின் மதிப்பெண் தரம் உயரும். மக்களோடு ஒன்றாக கலந்து பழகினீர்கள் என்றால் நேர்முகத்தேர்வுகளில் மிகச்சிறப்பான தேர்ச்சி பெறுவீர்கள். தொடர்ந்து கிரிக்கெட்டில் பயிற்சி செய்தால், அதை இன்னும் மேம்பட்ட தன்மையுடன் விளையாட வாய்ப்புள்ளது. இன்னொன்றை மனதில் கொள்ளவேண்டும். நீங்கள் டெண்டுல்கராக ஆக முடியாது. ஆனால் அடுத்த நிலையை அடைய முடியும். அடுத்த நிலைக்கான ஏக்கம், போராட்டம் மிக முக்கியமானது.

நாம் பிறக்கும்போதே நம் உடலில் நமக்கான செயல்பாடுகளைக் கொண்ட ஜீன்கள் உருவாகிவிடுகின்றன. மகிழ்ச்சி எனும்போது இயற்கை நம் உடலுக்கு அளித்திருக்கிற வடிவமைப்பின்படி அதை வெளிப்படுத்துகிறோம்.

லட்சியங்கள் நமக்கு சமநிலையான, வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவக்கூடும். தொழில் அல்லது கல்விக்கான இலக்குகளை நான் குறிப்பிடவில்லை. வெற்றி என்பதற்கு முன் சமநிலை என்ற வார்த்தையைக் கவனியுங்கள். உடல்நலம், உறவுகள், மனநலம் ஆகியவற்றை ஒத்திசைவாக ஒருங்கிணைவாக பராமரிப்பதே சமநிலை என்கிறேன்.

காதலியைப் பிரியும் தருணத்தில் கிடைக்கும் வேலைக்கான முன்னேற்றம் என்பதை அனுபவிக்க முடியாது. முதுகில் காயம்பட்டிருக்கும்போது காரில் செல்லும் பயணம் வேடிக்கையானது அல்ல. மனம் முழுக்க பதற்றம் நிரம்பிய நேரத்தில் பொருட்களை வாங்குவது சிறந்ததல்ல.

வாழ்க்கை என்பது ஒரு கடினமான பந்தயம், மாரத்தான் போன்றது என்றெல்லாம் பழமொழிகள் கேட்டிருப்பீர்கள். அதிலிருந்து சற்று விலகி நர்சரி பள்ளி குழந்தைகளின் பந்தயத்தைப்போல என்றுதான் நான் சொல்லுவேன். வாயில் ஸ்பூனில் வைக்கப்பட்டுள்ள மார்பிள் கற்கள் கீழே விழாமல் ஓட வேண்டும். கற்கள் விழுந்துவிட்டால் முதலில் வந்தும் எந்த மதிப்பெண்ணும் கிடையாது. வாழ்க்கையும் அப்படித்தான். உடல்நலமும், நட்பும், உறவுகளும்தான் மார்பிள் கற்கள் போன்றவை. போராட்டம், உழைப்பு என்பவை வாழ்விற்கு ஒரு லயத்தை, இளக்கத்தை, நேசத்தை தந்தால் அதற்கு ஒரு மதிப்புண்டு. ஆனால் இவையேதுமின்றி கிடைக்கும் வெற்றி, நம்முள்ளிருக்கும் எதிர்பார்ப்புகளைக் கொண்ட உயிர்ப்பான உள்ளொளி மெதுவாக இறந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

நம்முள்ளிருக்கும் உள்ளொளியை வளர்த்து பராமரிக்க நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். வாழ்க்கையை மிகத்தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதுதான். எனது யோகப்பயிற்சி ஆசிரியர் பயிற்சிகளின் இடையில் மாணவர்களை ஏதாவது நகைச்சுவைத்துணுக்குகளின் மூலம் சிரிக்கவைப்பார்.  அவரின் மாணவர்களில் ஒருவர், நகைச்சுவை யோகப்பயிற்சிகளின் தன்மையினை உருக்குலைத்துவிடாதா என்று கேட்டார். அதற்கு ஆசிரியர், மிகத்தீவிரம் வேண்டாம். நேர்மையாக சரியாக இருந்தால் போதும் என்றார். இவ்வார்த்தைகள்தான் என்னுடைய வேலைகள் முழுமையாக, பணிகளை வடிவமைக்க இன்றுவரை உதவிவருகிறது. எழுத்துக்கள், வேலை, உறவுகள், நட்புகள் என இலக்குகள் அனைத்திற்கும் இவ்வார்த்தைகள்தான் மூலம். என் எழுத்துக்கள் குறித்த ஆயிரம் விமர்சனங்கள் தினமும் எனக்கு கிடைக்கிறது. அவற்றில் சில பாராட்டுக்களும், சில கடுமையான விமர்சனங்களையும் கொண்டிருக்கின்றன. அவற்றை நான் தீவிரமாக எடுத்துக்கொண்டால் என்ன ஆகும்? எப்படி நான் எழுத முடியும்? அதை விடுங்கள். நான் வாழ முடியுமா? வாழ்க்கையை மிகத்தீவிரமாக அணுக எடுத்துக்கொள்ள தேவையில்லை. நாம் இப்பூவுலகில் இருப்பது தற்காலிகம்தான். நாம் ப்ரீபெய்டு போல குறிப்பிட்ட நாட்களை கொண்டவர்கள். நாம் அதிர்ஷ்டம் பெற்றவர்களாகயிருந்தால் ஐம்பது ஆண்டுகள் வாழமுடியும். ஐம்பது ஆண்டுகள் என்பது 2500 வார இறுதிகளைக் கொண்டது. முழுக்க இவற்றை வேலை செய்ய பயன்படுத்த வேண்டுமா? சில வகுப்புகளை தவிர்க்கலாம். முட்டாள்தனமாக சில நேர்முகத்தேர்வுகளில் சொதப்பலாக செயல்படலாம். காதலில் விழலாம். நாம் மனிதர்கள்; உணர்ச்சிகளற்ற கருவிகள் அல்ல.

மூன்று விஷயங்களை, உங்களிடம் உள்ள உள்ளொளியை வளர்க்க பாதுகாக்க உதவும் தன்மை கொண்டதாக நினைக்கிறேன். அவை பொருந்தக்கூடிய அடைய முடியும் இலக்குகள். சமநிலை, தீவிரமற்ற மனப்பாங்கு. நான்கு புயல்கள் நம்மிடமுள்ள உள்ளொளியை அணைத்துவிட முயலும். அவை ஏமாற்றம், விரக்தி, தனிமை, நேர்மையின்மை ஆகியவையே ஆகும்.

நம்முடைய முயற்சி நாம் எதிர்பார்த்த பலனை தராதபோது, ஏமாற்றம் வருகிறது. சிந்தனைகள், சரியான திட்டமிடல் இல்லாது செயல்படும்போதும், தோல்விகளை சந்திக்கும்போதும் ஏமாற்றம் மனதை வருத்துகிறது. வலுவான மனம் கொண்டிருந்தாலுமே கூட ஏமாற்றத்தின் கடினமான கணங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கும். தோல்வியினால் நாம் என்ன கற்றுக்கொண்டோம்? என்று கேட்டுக்கொள்வது நமக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும். நீங்கள் கடுமையான பரிதாபகரமான துக்கத்தால் சூழப்படுகிறீர்கள். வாழ்வு இதோடு முடிந்துவிடட்டும் என்றும் நினைக்கலாம். என் முதல் புத்தகத்தை பிரசுரிக்க 9 பதிப்பாளர்கள் மறுத்து விலக்கினார்கள். குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக ஐ.ஐ.டி மாணவர்கள் தற்கொலையைத் தீர்வாக கையில் எடுக்கிறார்கள். எவ்வளவு கீழ்த்தரமான கோழைத்தனம் இது?

தோல்வி அந்தளவு மனதினைப் பாதித்திருக்கிறது. ஆனால் அதுதான் வாழ்க்கை. சவால்களை சந்திக்க வலிமையான மனதைக் கொண்டிருந்தால் போதும். ஏதாவதொன்றில் தேர்ச்சி பெறாமல் தோல்வியுறும்போது, நமது முயற்சி குறிப்பிட்ட எல்லை, கவனம் தொடவில்லை என்றே அர்த்தமாகிறது.

ஏமாற்றத்தின் உடன்பிறப்பாக விரக்தி என்பது இரண்டாவது இடம்பிடிக்கிறது. எப்போது நீங்கள் விரக்தி நிலையை அடைந்து இருக்கிறீர்கள்? ஏதாவது சிக்கல்களில் சிக்கிக்கொண்டால் இந்த உணர்வு எழும். இந்தியாவிற்கு இது மிகவும் பொருந்தக்கூடிய ஒன்று. போக்குவரத்து நெரிசல் உங்களுக்கு விரக்தியினை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.  மேலும் சில நிகழ்ச்சிகளின் நீளமான நகர்வு நாம் சரியான லட்சியத்தை நோக்கி நகர்கிறோமா என்று கூட பயத்தை ஏற்படுத்தும் வண்ணம் விரக்தியின் கரங்கள் நீளும். புத்தகங்கள் எழுதியதன் பின், இந்தி திரையுலகிற்கும் கதை எழுதவேண்டும் என்று லட்சியமாக இருந்தது.  அதற்கு எழுத்தாளர்கள் தேவை என்று நான் நினைத்தேன். அதிர்ஷ்டசாலி என்று நினைத்தாலும் அந்த இலக்கை அடைய ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டது.

விரக்தி நம் எதிர்பார்ப்பு மற்றும் ஆரம்பகட்ட உத்வேகம் ஆகியவற்றை உறிஞ்சி பலவீனப்படுத்துவதோடு, கசப்பான மனிதரகா உங்களை மாற்றிவிடும். அவற்றை எப்படி சமாளித்தேன்? காலம் எப்படி இதில் செயல்படுகிறது என்று கணிக்க முயன்றேன். படங்களைப் பார்த்து நன்றாக இருக்கிறதா என்று கூறுவதற்கு ஆகும் நேரத்தை விட அவற்றை உருவாக்க செலவிடும் நேரம் அதிகம்.
 நான் திரைக்கதை எழுதுவது குறித்து கற்றுக்கொண்டு இருந்த நேரத்தில் மகிழ்ச்சி தரும் விஷயங்களான நண்பர்கள், உணவு, பயணம் என்று அந்தக்காலத்தை பயன்படுத்திக்கொண்டேன். விரக்தி என்பது விஷயங்களை மிகத்தீவிரமாக எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாகும்.

நேர்மையின்மை என்பதை புரிந்துகொள்வது கடினம் என்றாலும், நமது நாடு இயங்குவது அதோடுதான். பல்வேறு தொடர்புகள், பணக்கார தந்தைகள், அழகான முகங்கள், பரம்பரையாக வாரிசு என நடப்பது இந்தி திரையுலகில் மட்டுமல்ல பல இடங்களிலும் நடைபெறுகிறது. சில சமயங்களில்  அவை அதிர்ஷ்டம் மூலமாக நடைபெறுகிறது. இந்தியாவில் சில வாய்ப்புகள்தான் கிடைக்கின்றன என்றாலும்,  பல நடிகர்கள் வெற்றி பெற வைக்க ரசிகர்களை நம்பி வரிசையில் நிற்கிறார்கள். தகுதியும், கடின உழைப்பும் குறுகிய கால சாதனைகளுக்கு தொடர்ந்து உதவாது.  தொடர்ந்த பரஸ்பர உழைப்பு அதிகமாக தேவைப்படுகிறது. உண்மையில் சிலர்  உங்களை விட அதிர்ஷ்டசாலிகளாக இருக்கக் கூடும்.

கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலத்தில் பேசும் ஒரு பேச்சினை கேட்க முடிகிறதல்லவா! அதுவும் இந்தியாவில் அதைப்புரிந்து கொள்ள முடிகிறது என்பதற்கெல்லாம் நீங்கள் நிச்சயம் அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள் என்றே சொல்லவேண்டும். நமக்கு விஷயங்களுக்காகவும், நாமாக இருப்பதற்காகவும் நாம் நன்றியுடன் இருக்கவேண்டும். மற்ற எழுத்தாளர்கள் நினைத்து பார்க்கமுடியாத அளவு ரசிகர்கள் எனக்கு இருக்கிறார்கள் என்பதோடு, அவர்களை மிகவும் நேசிக்கிறேன்.
இலக்கியப்பரிசு எதுவும் நான் பெறவில்லை. சரி, ஐஸ்வர்யாராயைப்போல இருக்க விரும்பவில்லை. ஆனால், எனக்கு இருக்கும் இரு பையன்கள் ஐஸ்வர்யாராயைவிட அழகானவர்கள். நல்லது. நேர்மையின்மை, ஒழுங்கீனம், உள்ளொளியை கொன்றுவிட அனுமதிக்கக் கூடாது.
இறுதியாக, தனிமை என்பது மனதின் உள்ளொளியைக் கொன்றுவிடும் இறுதியான காரணியாக உள்ளது. வளர்ந்துவரும் பருவத்தில் தனித்தன்மை கொண்டவராக உணர்வீர்கள். சிறுவயதாக நீங்கள் இருக்கும்போது, அனைவரும் விரும்பும் சிலந்திமனிதன், ஐஸ்கிரீம் பிடித்திருக்கும். பின் வயதாகும்போது, கல்லூரியில் பல நண்பர்களைப்போலவே இருந்திருப்பீர்கள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனித்துவமான ஒருவராக உணர்வீர்கள். நீங்கள் விரும்புவது, நம்புவது, மகிழ்ச்சிக்கு உள்ளாகுவது என நெருங்கிய மனிதர்களிலிருந்து பலவும் வேறுபட்டு இருக்கும்.

இது போன்றவை லட்சியங்களோடு, முரண்பட்டு விடுவதோடு மற்றவர்களோடு பொருந்தாது இருக்கும். சில லட்சியங்களை கைவிடவும் நேரும். கல்லூரியில் பேஸ்கட் பால் கேப்டனாக விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் தங்கள் திருமணம் முடிந்து இரண்டாவது குழந்தை பிறந்தபின் விளையாடுவதை நிறுத்திவிடுவார்கள். விளையாட்டை விட அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் விஷயம் வேறாகிவிட்டது. அவர்கள் தங்கள் முன்னுரிமையை குடும்பத்திற்கு தருகிறார்கள். ஆனால் இதுபோன்று செயல்படும்போது, உள்ளொளி மறைந்துவிடும். எப்போதும் சமரசத்திற்கு உடன்படக்கூடாது. முதலில் உங்களை விரும்புங்கள்; பிறகு மற்றவர்களையும்.
இனி நீங்கள் பயணிக்கலாம். ஏமாற்றம், விரக்தி, ஒழுங்கீனம், தனிமை என்பனவற்றை மழைக்காலம் போல தவிர்க்கமுடியாத இயற்கை சுழற்சி. குறிப்பிட்ட இடைவெளியில் அவை நம் வாழ்வில் குறுக்கிடும். மழையின்போது, நனையாது தடுக்க ரெயின்கோட் பயன்படுத்துவது போல, இவற்றிலிருந்து நம்மை நாமே காத்துக்கொண்டால் மட்டுமே உள்ளொளி அணையாமல் பாதுகாக்க முடியும்.


வாழ்வின் அற்புத பருவங்களைக் கொண்ட காலத்திற்கு உங்களை மீண்டும் நான் வரவேற்கிறேன். திரும்ப நான் காலத்தின் பின் திரும்பச்செல்ல வாய்ப்பு கிடைத்தால் கல்லூரிப்பருவத்திற்குத்தான் திரும்பிச்செல்வேன். ஆனால் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் கண்கள் தங்கள் கனவுகளுடன் பளபளக்கிறது. உள்ளொளி தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்க, கல்லூரியின் வழி மட்டுமில்லாது, 2500 வார இறுதிகள் உள்ளன. எனது நம்பிக்கை நீங்கள் மட்டுமல்ல. நாடு முழுவதும் உள்ளொளியான உயிருடன் இருக்க, மற்ற எந்த காலத்தையும் விட இன்றைய காலம் வரலாற்றில் முக்கியமானதாகிறது. பலகோடி உள்ளொளி நிறைந்த ஒரு நாட்டிலிருந்து நான் வருகிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். 

கருத்துகள்