ஒடிஷாவின் ஐன்ஸ்டீன்
ஒடிஷாவின் ஐன்ஸ்டீன்
ஹேமந்த் குமார் ரௌட்
சிறிய
கேக் துண்டுகளை வெட்டும் இயந்திரத்திலிருந்து பெரிய தொழிலக கத்தரிக்கோல்கள், காற்றடிக்கும்
இயந்திரத்திலிருந்து ரிக்சா, தானியங்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், கிராமத்து குளிர்சாதனப்பெட்டியிலிருந்து
பல்வேறு செயல்பாடுகளைக்கொண்ட சாதனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த கண்டு பிடிப்புகள்
மிஹிர்குமார் பண்டாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்திற்கும்,
அவற்றைப்பயன்படுத்திய முறைக்கும் சாட்சியாக உள்ளன.
ஒடிஷாவின்
கரையோர மாவட்டமான பாலசோர் மாவட்டத்திலில் உள்ள பகனாகா அருகிலுள்ள இச்சாபூரினை பூர்வீகமாக
கொண்டவரான 47 வயதாகும் பண்டாவின் அறிவுத்திறன் சிறுவயதிலேயே உத்வேகம் கொண்டு ஒளிரத்தொடங்கியிருக்கிறது.
இளமையிலிருந்தே பண்டா வாகனங்களின் இயந்திர பாகங்களை கழற்றுவது, பின அவற்றை இணைப்பது
என்பது அவருக்கு ஒரு பொழுதுபோக்கான விஷயமாக, விளையாட்டாக இருந்து வந்தது. பண்டாவின்
கண்டுபிடிப்புகள் மக்களுக்கான கண்டுபிடிப்புகள், மற்றும் மாணவர்களுக்கான கண்டிபிடிப்புகள்
என் வாழ்வில் தினமும் பயன்படுத்தும் வண்ணமான பொருட்களை உருவாக்க முனைகிறார்.
ஒடிஷாவின்
ஐன்ஸ்டீன் என்று அழைக்கப்படும் இவர் 8,537 அறிவியல் மாதிரிகளை உருவாக்கியிருப்பதோடல்லாமல்,
தனது சொந்த கண்டுபிடிப்புகளாக 2000க் கும் மேற்பட்ட இயந்திரங்களை வடிவமைத்துள்ளார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவற்றைத் தயாரிக்க அரசின் உதவிகளையோ அல்லது
தனியார் அமைப்புகளின் உதவிகளையோ பெறாமல் இவ்வளவையும் உருவாக்கி சாதித்திருக்கிறார்
என்பதுதான் முக்கியமானது.
அறிவியலின்
மீதான காதல் பண்டாவுக்கு 1986 ஆண்டு உள்ளூர் சிறுவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்கும்
போது, முதன்முதலில் தொடங்கியது. தன் வீட்டு காலிங்பெல்லை கழற்றி மாணவர்களுக்கு எப்படி
அது வேலை செய்கிறது என்று காட்டும்வரை தனக்கு அறிவியல் மாதிரிகள் பற்றி எந்த அறிவும்
இல்லை என்று ஒப்புக்கொள்கிறார் பண்டா. அழைப்பு மணி வேலை செய்வது நின்று போக, வீட்டில்
பெற்றோர் இவரைத்திட்ட அழைப்புமணியை சரிசெய்கிறார் என்றாலும், அதனை தராமல் வேறொரு அழைப்பு
மணியை உருவாக்கி வெற்றியை பெறுகிறார்.
சிவில்
என்ஜினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்றுள்ள பண்டா மாநில பஞ்சாயத்துராஜ் துறையில் பணியாற்றுகிறார்.
இவர் வாழ்வினை விடாமுயற்சி கொண்டு பயணிக்கும் நெடுந்தொலை நீண்ட சாலை என நம்புகிறார்.
‘’
பெறுவது இழப்பது என்பனவற்றை உள்ளடக்கிய வாழ்க்கை தீர்க்கப்படாத ஒரு சூத்திரம். தோல்வியின்
துக்கங்களைத் தாண்டிய சிறப்பான ஒன்றைத்தேடுவதே இதில் மகிழ்ச்சியான நிகழ்வு. பல புதிய
விஷயங்களை தேடிப்பயணிப்பதே என் கனவுகளுக்கு உருவம் கொடுக்கவும், அவற்றை ஆராயவும் உதவுகிறது
‘’ என்று கூறுகிறார் பண்டா.
பண்டாவின்
வீடு ஒரு பொருட்காட்சி சாலையை நினைவுபடுத்துகிறாற்போல பல்வேறு அளவுகளில் வடிவங்களில்
இயந்திரங்கள் மூலை முடுக்கெங்கும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மக்களுக்கான அறிவியல்
பொருட்களைத் தயாரிப்பதே இவரின் வாழ்வின் லட்சியமாக உள்ளது. Social Development
Research Organisation for Science, Technology and Implementation(SROSIT) எனும் எளிமையான
தனித்துவ இயந்திர கண்டுபிடிப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிலகத்தை உருவாக்கியுள்ளார்
பண்டா. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இவரது பயிலகத்தை பார்வையிட்டு,
இவரது படைப்பாளுமையில் உருவான அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி கற்கிறார்கள்.
உயிரோட்டமான
வகுப்பறைகளில் மாணவர்களை சிறைவைப்பதனால் அவர்களின் புதுமையாக்க ஆர்வம் அழிந்துவிடுவது
துரதிர்ஷ்டவசமானது. உயிர்ப்பான சூழலில் நடைபெறும் கல்வி ஒரு கொண்டாட்டமாகவும், அவர்களின்
திறன்களை மேம்படுத்துவதாகவும் அமையும்’’ என்கிறார் பண்டா.
‘’கல்வி என்பது வாழ்க்கை முழுவதும் கற்க
வேண்டிய ஒன்று இது பாடத்திட்டத்தில் குறுகிவிடக்கூடாது. கண்கள் கவனிக்க, கைகள் செய்யும்
இந்த அறிவியல் மாதிரிகள் மூலம் நாம் கற்பதை பாடநூல்களின் மூலம் கற்பது சாத்தியமில்லை’’
என்று தீர்க்கமாக பேசுகிறார் தன்னியல்பான அறிவியல் கண்டுபிடிப்பாளர் பண்டா.
இவரது
கண்டுபிடிப்புகள் பெரும்பாலும், வீணான பொருட்கள், குப்பைகளிலிருந்து உருவாகியுள்ளன.
‘’ என் வருவாயைப் பயன்படுத்தித்தான் இவை அனைத்தையும் உருவாக்கி வருகிறேன். பொருளாதாரரீதியாக
யாரும் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. என் மனைவியின் நகைகளையும் இதற்காக விற்றுவிட்டேன்.’’
என்று கூறுபவர் இதனை 75 பைசாவிலிருந்து தொடங்கியிருக்கிறார்.
பொருளாதாரப்
போதாமை என்பது மீண்டும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பொருளாதாரப் பற்றாக்குறையினால்,
பல முக்கியமான நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகள் வெளியே தெரியாமல் தேங்கி நின்றுகொண்டிருக்கின்றன.
பல்வேறு இடைஞ்சல்கள் வந்தாலும், பண்டா அவற்றை தாண்டி விட்டுக்கொடுக்காமல் இயந்திரங்களை
உருவாக்கி வருகிறார்.
பண்டாவின்
அறிவியல் ஆய்வுக்கூடமானது நன்கு அலங்காரம் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டு தோட்டத்துடன்
உள்ளது. வெகு தொலைவிலிருந்து வரும் பார்வையாளர்களையும், தன்வசம் ஈர்ப்பதாக உள்ளது.
எந்த
விவசாயப்பின்னணியும் கொண்டிராத பண்டா தனித்துவமான முறைகளின் மூலம் போன்சாய் ஆலமரங்களை
மேம்படுத்தி தன் பண்ணையில் வளர்த்துவருகிறார். இவற்றை கைவிடப்பட்ட கோயில்கள், பழைய
கட்டிடங்களிலிருந்து பெற்றிருக்கிறார்.
உண்மையான
மனிதர்களுக்கு நெருக்கமான அறிவியலை உணர பண்டாவின் ஆய்வுக்கூடம் மற்றும் பயிற்சி அறையிலுள்ள
இயந்திரங்கள் மூலம் அறிய முடியும். இதற்கு அதைச்சுற்றியுள்ள தனித்துவமான சூழலும், காரணமாயிருக்கலாம்.
பண்டாவின் சாதனைகளுக்கும் அவை உதவியிருக்க கூடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக