இடுகைகள்

மனிதகுலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சரியான கல்விமுறையே மனிதகுலத்திற்கான பேருதவி! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  மனிதர்களை மாறுபட்டவர்களாக்கும் கல்வி பிள்ளைகளை நீங்கள் கவனமாக பார்த்தால் விளையாடும்போது, படிக்கும்போது பார்த்தால் அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளலாம். அவர்களின் மீது பெற்றோர்கள் தமது முன்முடிவுகளை, பயத்தை, ஆசைகளை, நிறைவேறாமல் போன கனவுகளை திணிக்க கூடாது. பெற்றோர்கள் அவர்களின் பிடித்த, பிடிக்காத விஷயங்களை பிள்ளைகளிடம் திணித்து அவர்களை குறிப்பிட்ட வகையில் தீர்மானிக்க முயல்வது தவறு. பிள்ளைகளின் மீது வேலியைப் போட்டு உலகத்தோடு அவர்கள் கொண்டுள்ள உறவைத் தடுக்க கூடாது. நம்மில் பெரும்பாலான பெற்றோர், குழந்தைகள் சொந்த மகிழ்ச்சிக்காக பல்வேறு லட்சியங்களை அடைவதற்காக பயிற்சி கொடுத்து வளர்க்கிறார்கள். திருப்தி, சுகமான சூழ்நிலை ஆகியவற்றை உரிமை, ஆதிக்கம் செலுத்தும் குணங்களின் மூலம் பெற்றோர் அடைகின்றனர். பெற்றோர் பிள்ளைகளுடன் கொண்டுள்ள உறவு என்பது மெல்ல தண்டனையாக மாறுகிறது. ஆசை, ஆதிக்கம் என இரண்டையும் தெளிவாக புரிந்துகொள்வது குழப்பமான செயல்பாடாக உள்ளது. ஆசை, ஆதிக்கம் என இரண்டு செயல்பாடுகளுக்கும் பல்வேறு வடிவங்கள் உண்டு. ஆதிக்கமாக உள்ளவருக்கு அடிமையாக சேவை செய்வது என்பது புரிந்துகொள்ள கடினமான ஒன்று