இடுகைகள்

சைக்கோ கொலைகாரர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகிரா நிஷிகுச்சி - ஜப்பான் காவல்துறையை மாற்றிய கொலைகாரர்

படம்
அசுரகுலம் அகிரா நிஷிகுச்சி 1925 ஆம் ஆண்டு பிறந்த அகிரா, ஜப்பான் நாட்டின் காவல்துறை சீர்த்திருத்தங்களை செய்ய உதவிய சீரியல் கொலைகாரர். இத்தனைக்கும எத்தனை ஆண்டுகள் க்ரைம் வரலாறு இவருக்குண்டு? இரண்டே ஆண்டுகள்தான். 1963 - 1964 வரையிலான இரண்டு ஆண்டுகளில் ஜப்பான் மக்களுக்கு பயம் என்றால் என்பதை மனதில் உணரவைத்த ஆளுமை சார்தான். குற்றத்தடம் லண்டனைச் சேர்ந்த ஜான் ஜார்ஜ் ஹைக் எனும் குற்றவாளியைப் பின்பற்றிய பாணி அகிராவுடையது. பெரிய குற்றவாளி என சொல்ல முடியாது. சின்ன வழிப்பறி, கொள்ளைகள் என்று தொடங்கி கொலைவரை சென்றுவிட்டார் அகிரா. சில நூறு டாலர்களுக்காக ஐந்து நபர்களை கொன்று விட்டார் என அறிந்தபோது தேசமே திகிலில் உறைந்துபோனது. ஜப்பான் நாட்டின் சிறுபான்மை இனத்தில் பிறந்தவர்தான் அகிரா. 1963 ஆம் ஆண்டு கொலை செய்வதற்கு முன்பு இவரின் குற்றங்கள் பெரியளவு கண்டுகொள்ளப்படவில்லை. அகிரா கத்தியால் குத்தி செய்த இரு கொலைகளிலும் கூட சந்தேகப்படுவதற்கு வாய்ப்பு இருந்ததே ஒழிய அவரை போலீஸ் கூட சந்தேகப்படவில்லை. சாரின் பவ்யம், பாவனையான முகம் அப்படி தோற்றத்தைக் கொடுத்தது. இரண்டு ட்ரக் டிரைவர்களை 750 டாலர்க

சினிமா பார்த்து கொலைகாரர் ஆனார்!

படம்
அசுரகுலம் செய்சாகு நகமுரா ஜப்பானில் 1924 ஆம் ஆண்டு பிறந்த செய்சாகு நல்ல புத்திசாலி. ஆனால் காது கேட்காத குறைபாடு உண்டு. சமூக அந்தஸ்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம். ஊர் முழுக்க இவரது குடும்பத்தை கேலி பேச அதுவே காரணமானது. எனவே அமைதியாக தன் மனதின் உள்முகமாக திரும்பியவர், ஜப்பானின் கடானா வாள் சண்டைப்படங்களைப் பார்க்கத் தொடங்கினார். ரசித்து மகிழ்ந்தார். அதுவே பின்னாளில் அவரது இயல்பு மாறவும் காரணமானது. ஒன்பது நபர்களை இரக்கமின்றி ஆசையோடு கத்தி கொண்டு குத்தினார். சிசுவோகா எனும் பகுதியில் நிகழ்ந்த குற்றச்சம்பவங்கள் அவை. 1938 ஆம் ஆண்டு செய்சாகு தன் குற்றத்தொடரைத் தொடங்கினார். ஆக.22 அன்று இரண்டு பெண்களை காம்போவாக கற்பழிக்க முயன்று தோற்றார். அந்த சின்ன விஷயத்திற்கு லபோ திபோ என அப்பெண்கள் வாயில் கைவைத்து எம்ஜிஆர் கால நாயகி போல அலற, அவர்களின் மூச்சை நிரந்தரமாக நிறுத்தினார். அப்போது செய்சாகுவின் வயது பதினான்கு. செய்சாகு தன் வேலையைக் காட்டிய காலம் போர் காலம் என்பதால் அரசும் பெரியளவு கண்டுகொள்ளவில்லை. இதனால் அவரின் கொலைவெறி எல்லை தாண்டி சென்று அவரின் அண்ணன், அண்ணன் மனைவி, குழந்தை, தந்தை

குழந்தைகளைக் கொன்றால் காசு!

படம்
அசுரகுலம் சைக்கோ கொலைகாரர்கள் மியூகி இஷிகாவா 1948 ஆம் ஆண்டு ஜனவரி  12. டோக்கியோவின் வசிடா பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் ஐந்து குழந்தைகள் இறந்துபோனதை விசாரித்து வந்தார்கள். குழந்தையை எதேச்சையாக பிரேத பரிசோதனை செய்தபோதுதான் குழந்தைகள் இயற்கையாக இறக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. அந்த குற்றத்திற்கு காரணம் என மியூகி இஷிகாவை கைது செய்த து காவல்துறை. ஐந்து குழந்தைகள் மட்டுமல்ல, நூறு குழந்தைகளுக்கு மேல் கொல்லப்பட்ட விவகாரம் அப்போதுதான் தெரிய வந்தது. 1897 ஆம் ஆண்டு இஷிகாவா பிறந்தார். இவரின் இளமைக்காலம் பற்றி அதிக விவகாரங்கள் தெரியவில்லை. ஜப்பானின் குனிடோமி நகரில் பிறந்தார். டோக்கியோ பல்கலையில் பிறந்தவர், டகேஷி இஷிகாவாவை மணந்தார். மியூகியின் வேலை, கோடோபுகி  மருத்துவமனையில் செவிலி. பின்னர்,  அம்மருத்துவமனையின் இயக்குநரானார். இம்மருத்துவமனை குழந்தைகள் பிறப்புக்கு புகழ்பெற்றது. அந்த காலகட்டத்தில் ஜப்பானில் கருக்கலைப்பு தடைசெய்யப்பட்டிருந்தது. பல தம்பதிகள் குழந்தை கருவாக இருக்கும் நிலையிலும், குழந்தை வளர்க்க முடியாதவர்களும் அந்த மருத்துவமனைக்கு வந்தனர். இந்த குழந்

டாக்சி டிரைவரின் விபச்சார வெறியாட்டம்!

படம்
அசுரகுலம் ஹிரோகி ஹிடாகா பெரிய கொலைகாரர் என்று சொல்லமுடியாது. நான்கு கொலைகள்தான் செய்தார். 1996 ஆம் ஆண்டு சம்பவத்தை நிகழ்த்தி புகழ்பெற்றார். 1962 ஆம் ஆண்டு பிறந்த ஹிரோகி நல்ல மாணவர்தான். ஆனால் பல்கலையில் சேர எழுதிய தேர்வு தோல்வி தர அஞ்சாதே கிருபாவாக மாறி சரக்கு போட்டு துயரத்தில் ஆழ்ந்தார். ஃபுகுகோகா பல்கலையில் சீட்டு கிடைத்தாலும் ஏனோ ஹிரோகிக்கு அது செட் ஆகவில்லை. சோற்றுக்கு வழிவேண்டுமே? 1989 ஆம் ஆண்டு டாக்சி ஓட்டத் தொடங்கினார்.  வாழ்க்கை ஏதோதானோவென ஓடியது. தொண்ணூற்று ஒன்றில் திருமணம் நடந்தது. ஓராண்டிலேயே குழந்தை பிறந்தது. ஜாதகத்தில் சந்திரன் நீச்சமானாரா என்று தெரியவில்லை. ஹிரோகியின் மனைவி, மனநிலை பிறழ்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் ஹிரோகிக்குள் உள்ளிருந்த சாத்தான் சுவர் ஏறிக் குதித்தார். 1996 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் செக்சுக்கான என அணுகிய நான்கு பெண்களைப் போட்டுத்தள்ளினார். சும்மாயிருப்பார்களா ஜப்பான் போலீஸ். வளைத்து பிடித்தார்கள். கொலையோடு பெண்களிடம் 1, 20, 000 டாலர்களை ஆட்டையப் போட்டிருந்ததைக் கண்டுபிடித்து தங்கள் பாக்கெட்டில் சேமி