சினிமா பார்த்து கொலைகாரர் ஆனார்!


Seisaku Nakamura is listed (or ranked) 10 on the list Famous Japanese Serial Killers
அசுரகுலம்

செய்சாகு நகமுரா


ஜப்பானில் 1924 ஆம் ஆண்டு பிறந்த செய்சாகு நல்ல புத்திசாலி. ஆனால் காது கேட்காத குறைபாடு உண்டு. சமூக அந்தஸ்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம். ஊர் முழுக்க இவரது குடும்பத்தை கேலி பேச அதுவே காரணமானது. எனவே அமைதியாக தன் மனதின் உள்முகமாக திரும்பியவர், ஜப்பானின் கடானா வாள் சண்டைப்படங்களைப் பார்க்கத் தொடங்கினார். ரசித்து மகிழ்ந்தார்.

அதுவே பின்னாளில் அவரது இயல்பு மாறவும் காரணமானது. ஒன்பது நபர்களை இரக்கமின்றி ஆசையோடு கத்தி கொண்டு குத்தினார். சிசுவோகா எனும் பகுதியில் நிகழ்ந்த குற்றச்சம்பவங்கள் அவை.

1938 ஆம் ஆண்டு செய்சாகு தன் குற்றத்தொடரைத் தொடங்கினார். ஆக.22 அன்று இரண்டு பெண்களை காம்போவாக கற்பழிக்க முயன்று தோற்றார். அந்த சின்ன விஷயத்திற்கு லபோ திபோ என அப்பெண்கள் வாயில் கைவைத்து எம்ஜிஆர் கால நாயகி போல அலற, அவர்களின் மூச்சை நிரந்தரமாக நிறுத்தினார். அப்போது செய்சாகுவின் வயது பதினான்கு.

செய்சாகு தன் வேலையைக் காட்டிய காலம் போர் காலம் என்பதால் அரசும் பெரியளவு கண்டுகொள்ளவில்லை. இதனால் அவரின் கொலைவெறி எல்லை தாண்டி சென்று அவரின் அண்ணன், அண்ணன் மனைவி, குழந்தை, தந்தை என எல்லாலோரையும் கொலைசெய்ய முயற்சி, தாக்குதல் என முடிந்தது. 1941 ஆம் ஆண்டு, ஆக.18 அன்று அவரின் வயது 17. அந்த வயதில் மூன்றாவது கொலையைச் செய்தார். அடுத்ததாக, நான்காவது நபரை கடுமையாக படுகாயப்படுத்தினார். மேலே சொன்ன கொலை முயற்சி நடந்தது செப்.27 ஆம் தேதி. இவரால் தாக்கப்பட்ட சகோதரர் இறைவனடி சேர்ந்தார். பிறருக்கு நல்ல காயம்.

பலரும் அச்சமயத்தில் இவர் மீது புகார் சொல்ல பயந்தனர். காரணம், செய்சாகுவின் கட்டற்ற வன்முறை குணம்தான்.

1942 ஆம் ஆண்டு அக்.12 அன்று, இவரை ஜப்பான் அரசு கைது செய்தது. ஒன்பது கொலைகளுக்கு விசாரணை நடந்தது. மரணதண்டனை விதிக்கப்பட 1944 ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று தூக்கிலிடப்பட்டார்.

கொலை பாணி

படத்தில் கட்டானா வாள்களை சாமுராய் சுற்றுவது பிடிக்கும் என்பதால் கொலைக்கு சரியான ஆயுதம் கத்தி என முடிவுக்கு வந்தார். அதில்தான் பதினோரு பேர்களை குத்தினார். சிலர் காயம்பட்டு பிழைத்தார்கள். சிலர் இறைவனின் முகத்தை சொர்கத்தில் தரிசித்தனர்.

1938 முதல் 1942 வரை கொலை சாம்ராஜ்யம் நடத்திய செய்சாகுவின் அட்டூழியங்களைப் பொறுக்கமுடியாமல் இவரது தந்தை தற்கொலை செய்துகொண்டார்.

ஆக்கம்: பொன்னையன் சேகர்

நன்றி: கில்லர் பீடியா, ரிவால்வி, கில்லர் க்ளவுடு



பிரபலமான இடுகைகள்