முதல் உலகப்போர் - சாதித்த தலைவர்கள்




Image result for world war 1




முதல் உலகப்போரில் முக்கியமான தலைவர்கள்!


கெய்சர் வில்ஹெய்ம்(2):

ஜெர்மனியைச் சேர்ந்த கொடூரமான மன்னர். அதிகாரம், வட்டார அரசியல் விவகாரத்தைத் தொடங்கியவர் இவரே. ஆஸ்திரியா ஹங்கேரியா நாடுகளுடன் இணைந்து செர்பியாவின் மீது போர் அறிவித்தார். இதனை பின்னாளில் ஜெர்மனி அப்படியே பின்பற்றியது.

அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன்

அமெரிக்காவுக்கு போரில் ஈடுபட விருப்பம் இல்லை என்று கூறி தேர்தலில் நின்று வென்ற ஆளுமை. இவரே. 1913 முதல் 21 வரை அதிபராக இருந்தவரின் போர் குறித்த முடிவை ஜெர்மனி மாற்றியது. அமெரிக்க வணிகர்களின் கப்பலை ஜெர்மனி தாக்க, அமெரிக்கா போரில் குதித்தது.


டேவிட் லாய்டு ஜார்ஜ்


இங்கிலாந்து முதலில் போரில் ஈடுபட வேண்டாம் என்றே நினைத்தது. ஆனால் ஜெர்மனியின் அதிகார வேட்கை இங்கிலாந்தின் அந்தஸ்தை குலைத்துவிடுமோ என்று நினைத்தவுடனே போரில் குதித்தது. அதனை தீர்மானித்தவர் பிரதமரான டேவிட்தான்.


ப்ரீமியர் ஜார்ஜஸ் கிலிமென்சியு


பிரான்ஸ் நாட்டின் புலி என அழைக்கப்பட்ட தலைவர். பாரிஸ் மாநாட்டில் ஜெர்மனிக்கு எதிராக பல்வேறு முன்மொழிவுகளை கூறி அந்நாட்டை முடக்கியது இவர் சாதனை.


ஜார் நிக்கோலஸ் 2

செர்பியாவின் மீது போர் என்றதும் அதனைக் காப்பாற்ற வந்த நாடு ரஷ்யாதான்.இந்த நடவடிக்கைக்குப் பிறகு ரஷ்யாவிலும் புரட்சி வெடித்தது. நிக்கோலஸ் அரசு அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டார்.

வின்ஸ்டன் சர்ச்சில்

இங்கிலாந்தின் வலிமையான அரசியல் தலைவர். துருக்கியின் கலிபோலி எனும் இடத்தை தாக்க திட்டமிட்டார். இதன் மூலம் ரஷ்யா செல்வதற்கான நீர் வழித்தடத்தை உருவாக்க முனைந்தார். ஆனால் திட்டம் சொதப்ப தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜெனரல் ஜான் ஜே பெர்சிங்

ஐரோப்பாவில் நடைபெற்ற போரில் படைகளைச் செலுத்திய படைத்தலைவர். படையை தீர்க்கமான திட்டங்களைத் தீட்டி வெற்றிபெறச்செய்தவருக்கு, அமெரிக்க அரசு உயரிய பதவி தந்து கௌரவப்படுத்தியது.

மான்ஃப்ரெட் வான் ரிச்தோஃபென்

ஜெர்மனி வீரர். ரெட் பாரோன் என அழைக்கப்படுபவர், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கடுமையாக பாடுபட்டவர். ஏறத்தாழ 80 விமானங்களை சுட்டு வீழ்த்திய வீரர்


நன்றி: சீதா ஜனனி

மூலம்: உலகப்போர் 1 ஸ்டீபன் ஆட் ஃபினோஸ்கி.




பிரபலமான இடுகைகள்