தள்ளிப்போடாதீங்க மக்களே!
தள்ளிப்போடாதீங்க!
காலையில் பேஸ்ட் அழுத்தி பல் விளக்கு பாலாஜி தயங்கி தயங்கி தேய்க்கணுமா ப்ரோ என்பான். போடா பக்கி என்றவுடன் பாத்ரூமுக்கு போனவன், ஐந்து நிமிஷத்தில் திரும்பி காபி கப்பைத் தூக்குவான்.
பையன் படு சுறுசுறுப்பு என வியக்கும்போதே, நாளிதழ் படிக்கும் என் மீது இடது காலைத் தூக்கிப்போட்டு அப்படியொரு அப்பாவித்தனத்தோடு தூங்கிவிடுவான். காபி குடிச்சா சுறுசுறுப்புன்னு சண்டாளி டிவில சொன்னாளேன்னா அதுக்கு நடைமுறையில எந்த எக்சாம்பிளும் கிடையாதுன்னு அஷ்ரத் ராவுத்தர் வேறு கம்யூனிஸ்டா மாறி மல்லுக்கு நிற்பார். பாலாஜியின் தோழர்தான்.
எந்த இன்டர்வியூவுக்கும் தனக்கு தெரியுதோ இல்லையோ அப்ளை பண்ணி உள்ளே புகுந்து காலி செய்வது பாலாஜியின் வழக்கம். கேம் டிசைனுக்கான பயிற்சியையே இன்டர்வியூக்கு முதல்நாள் உட்கார்ந்து செய்து வியக்க வைப்பார். இன்டர்வியூ ரிசல்ட், பாலாஜிக்கு முன்னதாகவே உலகிற்கு தெரிந்துவிடும். அதேதான். தள்ளிப்போடாதே என்று கூறுவது. கிளாசுக்கு போகும் நேரம் தவிர்த்து என்னதான் செய்கிறார். எப்போதும் பப்ஜியில்தான் இருப்பார்.
அனைத்து இடங்களிலும் பிரச்னையாவது இதுதான். இதுகுறித்த டேட்டா பார்வை இதோ.
2014 ஆம் ஆண்டு ஒட்டாவாவிலுள்ள கார்லெட்டன் பல்கலையில் மாணவர்களிடம் தள்ளிப்போடும் பழக்கம் உள்ளதையும் அதன் வகைகளையும் கண்டுபிடித்தனர். எத்தனை வகை - 6
வேலை செய்யும்போது இணையத்தில் வெட்டியாக வலைத்தளங்களை மேய்பவர்களின் எண்ணிக்கை விகிதம் 45 சதவீதம் (2017)
இன்ஸ்டாகிராம் நிறுவனர் கெவின் சிஸ்ட்ரோம் தள்ளிப்போடும் பழக்கத்தை ஒழிக்கவே ஐந்து நிமிட பயிற்சிகளை செய்துவருகிறார்.
2007 ஆம் ஆண்டு செய்த ஆராய்ச்சியில் 85 சதவீத மாணவர்களுக்கு தள்ளிப்போடும் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் 20 சதவீத எக்ஸ்ட்ரீம் தன்மையிலுள்ள தள்ளிப்போடும் சிட்டிசன்கள் உள்ளனர் என்கின்றார் உளவியல் மருத்துவர் ஜோசப் ஃபெராசி(டிபால் பல்கலைக்கழகம்)
நன்றி: க்வார்ட்ஸ்