விமான மாஸ்க்கில் ஆக்சிஜன் எப்படி உருவாகிறது?




Image result for emergency mask at flight




ஏன்?எதற்கு?எப்படி?

மிஸ்டர் ரோனி

விமானங்களில் அவசரநிலையின்போது தலைக்கு மேலிருந்து மாஸ்குகள் கீழே வரும். அவற்றை மூக்கில் பயணிகள் பொருத்த ஆக்சிஜன் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது?


விமானநிறுவனங்களைப் பொறுத்தவரை பயணிகள் கொடுக்கும் காசு அவர்களை மற்றொரு இடத்தில் கொண்டுபோய் இறக்கிவிடுவதற்குத்தான். எனவே முடிந்தவரை அவர்களுக்கு ஏர் இந்தியா போல சல்லீசாக வெஜ் உணவைப் போட்டு போய்த்தொலை என அனுப்பிவிடவே நினைக்கின்றன.

மேலும் விமானங்களில் கொண்டு செல்வதற்கான சுமைகள் குறைவாக இருப்பது எரிபொருளைச் சிக்கனப்படுத்தும். எனவே, பயணிகள் உயிர்பிழைக்க சிலிண்டர்களை தூக்கிச்செல்வது சாத்தியம் இல்லை. 200 பயணிகள் என்றால் 200 சிலிண்டர். யோசித்துப்பாருங்கள். விலையும் ஜாஸ்தி சுமையும் அதிகம். இதற்கான ஆராய்ச்சியில் கிடைத்த துதான். சோடியம் குளோரைடு. இதனை சூடுபடுத்தினால் ஆக்சிஜன் கிடைக்கும்.

விமானங்களிலுள்ள மாஸ்கில் ஆக்சிஜன் இருக்காது. சோடியம் குளோரைடு இருக்கும். இதனை சூடுபடுத்தினால் ஆக்சிஜன் கிடைக்கும். ஆக்சிஜனைக் கொண்டு செல்வதற்கான பிரச்னை தீர்ந்ததா?

இதனால் நீங்கள் உயிர்பிழைத்துவிட முடியும் என நிம்மதியாகி விடாதீர்கள். இந்த வசதியும் 20 நிமிடங்களுக்குத்தான் உதவும்.


நன்றி: க்யூரியாசிட்டி

image: daily express





பிரபலமான இடுகைகள்