அதிர வைத்த கொலைகாரர்கள்!
வெளிநாட்டு சைக்கோ கொலைகாரர்களை மட்டும் பார்த்திருப்போம். ஆசியாவிலும் அதுபோன்ற பலரும் அறியாத ஆட்கள் உண்டு. நாம் அவர்களில் சிலரைப் பார்ப்போம்.
அஹ்மத் சுராட்ஜி
சிறுவயதிலிருந்து திருட்டு, தெருச்சண்டை என வரிந்துகட்டுபவர் எங்கு புழங்கி வருவார். அதேதான். சிறையில்தான். பின் ஊரில் என்ன மரியாதை இருக்கும். ஆனால் அஹ்மத் தன்னை நோய்களைத் தீர்ப்பவராக நினைத்துக்கொண்டார்.
சாதாரணமாக ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் என்னாகும்? உலகம் நம்பும்தானே. அதேதான் இங்கும் நடந்தது. ஆனால் அதற்கான விலை எத்தனை உயிர்கள் தெரியுமா? 42 பெண்களை கொன்று புதைத்தார். அவர்களிடம் எதையும் திருடவில்லையா? திருடினார். ஆம் அவர்களின் எச்சிலை மட்டுமே சேமித்து வைத்தார். அது தனக்கு மாந்திரீகத்தில் பெரும் சக்தியை அளிக்கும் என உளமாற நம்பினார்.
கரும்புக் காட்டில் பெண்களை புதைத்த இடங்களை மகிழ்ச்சியாக பரவசத்துடன் போலீசுக்கு சுட்டிக்காட்டினார் அஹ்மத். சும்மா விடுவார்களா? நன்கு உதைத்து சிறையில் தள்ளியவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
ரோஷூ கா
ரோஷூ கா, காதலித்தார். எத்தனைப் பேரை தெரியுமா? நூற்றுக்கணக்கான பெண்களை. சிலர் காதலை ஏற்றனர். பலர் ஏற்கவில்லை. எனவே அவர்களைக் கொன்றேன் என மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்.
ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை காதலித்து சித்திரவதை செய்து அவர்களைக் கொன்றார். இந்த எண்ணிக்கை பதினொன்று. இதற்காக குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை அறிவிக்கப்பட்டது.
ஜாவேத் இக்பால்
பாகிஸ்தான்காரர். நல்ல வசதி, படிப்பும்கூட இருந்தது. சமூக மதிப்பான ஆள்தான். ஆனால் நான் நூறு சிறுவர்களை கொலை செய்துவிட்டேன் என தானாகவே பத்திரிகைக்கு கடிதம் எழுதிப்போட்டு போலீசில் சரணடைந்தார்.
போலீஸ் அவரது வீட்டுக்கு போய் சோதனை செய்தபோது, எதையும் இக்பால் மறைக்கவில்லை. உள்ளது உள்ளபடி உடலை ஆசிட்டில் கரைத்த பேரல், உடைகள் என அத்தனையும் அப்படியே இருந்திருக்கிறது. ஆதாரங்களையும் அளித்து கைதான சைக்கோ மனிதர் உலகிலேயே இவர் ஒருவர்தான்.
ஆறிலிருந்து 17 வயது வரையிலான சிறுவர்களை மட்டும் டார்க்கெட் வைத்து கொன்றார்.
இறுதியில் சிறை தண்டனை அனுபவிக்கும்போதே இறந்துபோனார். தற்கொலை என சொல்லி போலீஸ் கேசை மூடியது.
பொதுவாக சைக்கோ கொலைகார ர்களுக்கு உடலில் ஒய் குரோமோசோம் இருந்தால் அவர்களுக்கு வன்முறை மீது பெருவிருப்பம் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அடிப்படையில் குழந்தைகளை எக்காரணம் கொண்டும் மனதை புகையவிடக்கூடாது. வளர்ந்தபின்னும் குழந்தைகளை இயக்குவது சிறுவயது நினைவுகள் என்பதை மறக்காதீர்கள். பின்னாளில் அவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விடும். எனவே கிண்டல் செய்வது போன்ற செயல்களை ஒருவர் பிடிக்கவில்லை என்று சிக்னல் காட்டினால் அதனை நிறுத்திவிடுவது உங்களுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கே நல்லது.
ஆக்கம் - பொன்னையன் சேகர்
நன்றி: தேசிபிளிட்ஸ்.காம்