சர்வாதிகார நாடாகிறதா வங்கதேசம்?



Poet Henry Swaopon and Lawyer Imtiaz Mahmood.



வங்கதேசத்தில் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த தற்காக கவிஞர் ஹென்றி, வழக்கறிஞர் இம்தியாஸ் ஆகியோர் தடாலடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. கவிஞர் ஹென்றி, கத்தோலிக்க பிஷப் ஏப்ரல் 22, 2019 அன்று நடத்திய கலாசார நிகழ்ச்சியை தள்ளி வைத்திருந்தால் பல நூறு பேர் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என செய்தியை சமூக வலைத்தளத்தில் எழுதியிருந்தார். அந்நாளுக்குப் பிறகுதான் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. உடனே கோபமான அடிப்படைவாதிகள், ஹென்றிக்கு கொலைமிரட்டல்களை விடுக்க தொடங்கினர்.


ஹென்றி தன் நகரத்தில் நடக்கும்  ஊழல், நிர்வாக சீர்கேடு ஆகியவற்றைப் பற்றியும் எழுதி வந்தவர் ஆவர். அவர் தற்போது டிஜிட்டல் பாதுகாப்பு சட்டப்படி கைதாகியுள்ளார்.

பொதுவாக மதம் குறித்து எழுதினால் முஸ்லீம் அடிப்படைவாதிகள்தான் கொந்தளித்து எழுவார்கள். இப்போது கிறிஸ்தவர்கள் அந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை மனநல சிகிச்சைதான். எனவே வழக்கை தடை செய்து கவிஞர் ஹென்றியை விடுதலை செய்ய வேண்டுமென ஸ்வாகிரிட்டோ நோமன் என்பவர் எழுதியுள்ளார்.

வங்காளி ஒருவர் காக்ராச்சாரி பகுதியில் கொலை செய்யப்பட்டது குறித்து எழுதியதற்காகவும், வன்முறையைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் கீழும் வழக்குரைஞர் இம்தியாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கவிஞர் ஹென்றி கைது செய்யப்ட்ட அடுத்த நாள்(மே 15) இம்தியாஸ் கைதானார்.


சுதந்திரமா பேசுவதற்கும் எழுதுவதற்கும் தடைசெய்யும் சட்டங்களை நீக்குவது அவசியம். கைது செய்யப்பட்டுள்ள ஹென்றி, இம்தியாஸ் ஆகியோரை அரசு விடுதலை செய்ய வேண்டும் என பத்திரிகையாளர் பிரபோஸ் அமின் கருத்து தெரிவித்துள்ளார்.


நன்றி: குளோபல் வாய்ஸ்