எப்படி கடத்தப்படுகிறது ஹவாலா தங்கம்!



Image result for gold smuggle




கடத்தல் வாகனமாக மனித உடல்

காசு கொடுத்து வாங்கும் பொருள் நாட்டையும் வீட்டையும் வளர்ப்பது உண்மைதான். ஆனால் வரிகொடுக்காமல் வரும் தங்கம்தான் இன்று நகைச்சந்தையை ஆட்சி செய்து வருகிறது. ஹவாலா முறையில் செயல்படும் உலகளாவிய வலைப்பின்னல் இதில் உள்ளது.

2018-19 ஆம் ஆண்டில் மட்டும் கடத்தல் வலைப்பின்னல்களால் கடத்தப்படும் தங்கத்தின் சதவீதம் 46 என சுங்கத்துறை கணக்கு சொல்லியுள்ளது. கடந்த ஆண்டு 109 கிலோ தங்கத்தைக் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு 40 கோடி.

இதனைக் கடத்திக் கொண்டு வருபவருக்கு நூறுகிராமுக்கு ரூ.350 தருகின்றனர். எனவே கிலோகிராமாக கடத்தினால்தான் நல்ல வரும்படி கிடைக்கும் என கடத்தி வருகின்றனர். வெளிநாட்டு தங்கத்திற்கு 38.5 சதவீத வரியை இந்தியா விதிக்கிறது. இதனால், கடத்தல்காரர்களுக்கு கிடைக்கும் லாபம், 15 லட்சம் ரூபாய்.

இதில் சுங்கத்துறையிடம் ஆட்கள் சிக்கிக்கொண்டாலும் லாபம் கிடைக்கும் பாதுகாப்பான வியாபாரத்தை இந்த கள்ளக்கடத்தல் குழு செய்துகொள்கிறது. தங்கத்தை கடத்தும் ஆட்கள் அனைவரிடமும் 600 கிராம் தங்கத்திற்கு குறைவான அளவே வழங்கப்படுகிறது. பெரும்பாலும் தங்கத்தை கடத்துபவருடன் சக பயணியாகவே கடத்தல் தலைவர் வருவது வழக்கம். அயன் சூர்யா போல பல வேடங்களை இடுவதால் அவர்களை உடனே கண்டுபிடிக்க முடிவதில்லை.

இலங்கையிலிருந்து கப்பல் வழியாக கடத்தும் தங்கத்திற்கு தமிழகம், கேரளத்தில் பெரும் வரவேற்பு உண்டு. இதனால், வான்வழியோடு கடல், சாலை வழிகளையம் போலீசார் சோதிப்பது உண்டு.

நன்றி:TOI

பிரபலமான இடுகைகள்