பெட்ரோல் டேங்கில் சர்க்கரை போட்டால் என்னாகும்?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
வாகனங்களின் டேங்கில் சர்க்கரையைப் போட்டால் இஞ்சின் சேதமாகுமா?
கொட்டும் சர்க்கரை வீணாகும். அடுத்து பர்சின் பணம் காலியாகும்.
நிறைய படங்களைப் பார்த்துவிட்டு அந்த பாதிப்பில் கேட்கிறீர்கள். ஆனால் உண்மையில் சர்க்கரை என்பது பெட்ரோல், டீசலில் கரையும் தன்மை கொண்டதல்ல. லிட்டர் அளவில் ஒரு டீஸ்பூன் என்பது பிரச்னை அல்ல. ஆனால் பாரி சுகர் போன்ற பாக்கெட்டுகளை வாங்கி கிலோ கணக்கில் கொட்டினால் டேங்க் முழுக்க நிறையும் சர்க்கரை வண்டி இயக்கத்திற்கான பெட்ரோல், டீசலை வண்டிக்கு செலவிட விடாது.
மற்றபடி மெக்கானிக் உங்களது பர்சின் கனம் குறைக்கச்செய்யும் வித்தைகள் இதில் வராது. இஞ்சின் போயிடுச்சு சார் என்று கூறுவது சும்மா ஹம்பக். டேங்கை சுத்தம் செய்தால் போதும். பத்மினி கார் முதல் போர்ச் கார் வரை பிரமாதமாக ஓடும்.