குடிமகனே... இந்தியாவின் குடிமகனே!




Jesse James Spiced Whiskey





ஆல்கஹால் குடிகாரர்கள்

உலகமெங்கும் ஆல்கஹால் பருகும் அளவு அதிகரித்து வருகிறது. இதிலும் சீனர்கள் இந்தியர்களை மிஞ்சி விட்டார்கள். அண்மையில் இதுகுறித்து லான்செட் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொண்ணூறுகளை விட 2017 ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் வயது வந்தோர் பருகும் ஆல்கஹாலின் அளவு பத்து சதவீதம் கூடியுள்ளது. 

மால்டோவா அனைத்து நாடுகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதற்கடுத்து ரஷ்யா, பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வருகின்றன. மால்டோவா நாடு தனிநபராக குடிக்கும் ஆல்கஹால் அளவு பதினைந்து லிட்டர். 

தொண்ணூறுகளில் உலகில் குடிக்கும் மதுபானங்களின் சராசரி அளவு 5.9 லிட்டராக இருந்தது. தற்போது இந்த அளவு 6.5 லிட்டராக மாறியுள்ளது. இந்தியாவில் 40 சதவீத ஆண்களும் 22 சதவீத பெண்களும் மது அருந்துகின்றனர். இது தொண்ணூறுகளைவிட இருமடங்கு அதிகம்.

இந்த எண்ணிக்கை இப்படியே வளர்ந்தால் உலகமெங்கும் 2030 ஆம் ஆண்டு அரைவாசி வயது வந்தோர் மதுவருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பார்கள். உலக சுகாதார நிறுவனம் இது குறித்து பிரசாரத்தை செய்து வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் 10 சதவீத மக்களை இப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது லட்சியமாக கூறியுள்ளது.

சீனாவில் பீரும், பிற வகைகளையும் மக்கள் அதிகம் பருகுகின்றனர். சராசரியாக ஏழு லிட்டர் மதுவகைகளை பருகிவருகின்றனர். 2030 ஆம் ஆண்டு வாக்கில் சீன இளைஞர்கள் இன்னும் பத்து லிட்டர் மதுவகைகளை பருகும் வாய்ப்பு உள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மது வகைகளை பருகும் விகிதம் குறைந்து வருகிறது.

மது பருகுவதால் 200 நோய்களுக்கு மேல் ஏற்படுவதாகவும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகளும் ஏற்படுவதாக தகவல் கூறுகிறது.

நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா