நிலவுக்கு ரீஎன்ட்ரி அவசியமா?








நிலவுக்கு மீண்டும் செல்ல அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக நிதி ஒதுக்குவதற்கான மசோதா விரைவில் தயாரிக்கப்பட்டு காங்கிரசில் அளிக்கப்படவுள்ளது.


1972 ஆம் ஆண்டு விண்வெளி வீரர் ஜூன் செர்னன், உள்ளிட்டோர் அடங்கிய குழு நிலவுக்கு சென்றது. அதற்குப்பிறகு அமெரிக்கா வேறு வேறு கோள்களுக்கு விண்கலங்களை அனுப்பியது. தொலைநோக்கிகளை அனுப்பி கண்காணித்ததே ஒழிய நிலவைக் கண்டுகொள்ளவில்லை. அடிக்கடி ஒரே விருந்தினர் வீட்டுக்கு போனால் போரடிக்குமா இல்லையா?


ஆனால் ட்ரம்ப் வெள்ளையர்களின் பெருமையை மீட்க வந்த பெருந்தகையல்லவா? எனவே நாம் மீண்டும் நிலவுக்கு போகப்போகிறோம். ரெடியாக இருங்கள். இதற்கான செலவு 1.6 பில்லியன் டாலர்கள். சீக்கிரமாக பட்ஜெட் தயாரியுங்கள் என உத்தரவிட்டு, அறிவிப்பையும் பத்திரிகையாளர்களுக்கு அறிவித்து விட்டார்.



திட்டத்தின் பெயர் ஆர்ட்டெமிஸ். இது அப்பல்லோவின் சகோதரி பெயர். எதற்கு இப்பெயர் சூட்டியுள்ளனர்? இந்த திட்டத்தில் முதன்முதலாக பெண் ஒருவரையும் இணைத்துக்கொண்டு செல்லவிருக்கின்றனர். 2024 ஆம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.


ஆனால் இதற்கு மக்களிடையே பெரிய ஆர்வமில்லை. கென்னடி காலத்திலேயே அமெரிக்கர்கள் நிலவுக்கு போய்விட்டு வந்துவிட்டனர். இப்போது எதற்கு என்பதுதான் கேள்வி. மேலும் வெப்பமயமாதல் குறித்த ஆராய்ச்சிக்கு பணத்தை செலவிடலாமே என்று 63 சதவீத அமெரிக்கர்கள் ப்யூ ஆய்வு அமைப்புக்கு தகவல் சொல்லியுள்ளனர். 13 சதவீத பேர் மட்டுமே நிலவுக்கு திரும்ப செல்ல ஆதரவு தெரிவித்துள்ளனர்.


நன்றி: அட்லாண்டிக் இதழ்