பிரேக் ஃபாஸ்டுக்கு சாலட் ஓகேவா?
சாலட் என்பது என்ன? காய்கறிகள், முட்டை, பழங்கள், தானியங்கள் ஆகியோவற்றோடு வெண்ணெய் சிறிது சேர்த்து சாப்பிடுவதுதான். இதனால், மாவுச்சத்து சாப்பிட்ட வயிறுகளுக்கு நிம்மதி நேராது. ஆனால் எடையின்றி இருக்கும் வயிறு பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். பல்வேறு சத்துகள் நிரம்பியுள்ள உணவு என்பதில் சந்தேகம் வேண்டாம்.
வானவில் நிறத்தில் காய்கறி பழங்களைக் கொண்ட உணவுகளை காலையில் எடுத்துக்கொள்ளுங்கள். அவை இன்னா நாற்பது இனியவை நாற்பது எழுதும் சிவராமன் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
உங்கள் வயிறு சாலட் சாப்பிட்டால் அவ்வளவு இனிமையாக உணரும். வயிற்றை லேஸ் பாக்கெட் போல பல்க்காக்கி காலையில் இட்லி, இரண்டு தோசை, மூன்று பூரி என போட்டு அடைத்து வைக்க வேண்டியதில்லை.
செரிமானம் எளிதாக ஆனாலே, டவுன்லோடும் பிரச்னையின்றி ஜியோ போல ஜிவ்வென ஆகுமே!
சூப்பர் மார்க்கெட்டுகளில் உப்பிட்டு சர்க்கரையிட்டு விற்கும் சாலட்டை வாங்காதீர்கள். நீங்களே தயாரியுங்கள். மற்றொன்று, காலையில் சாலட் சாப்பிட்டுவிட்டு மற்ற இரு வேளைகள் மயிலை பிரியாணி தின்றால் எந்த பிரயோஜனமுமில்லை. எனவே கட்டுப்பாடாக சாப்பிட்டால் வயிறு கடாமுடா சத்தமின்றி வாழ்வாங்கு வாழலாம்.
குச்சிக்கிழங்கு சிப்ஸ், நேந்திரம் சிப்ஸ் என ராஜராம்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி குவித்து தின்றால் வேறு வழியே இல்லை மாரடைப்பு வந்தே தீரும். கவனம்.
நன்றி: ஹெல்த்லைன்.காம்