ஆப் வழியாக மக்களை, கட்சி உறுப்பினர்களை கண்காணிக்கும் ஷி ச்சின்பிங்!
ஆப் வழியாக கண்காணிப்பு சீனாவில் ஷி ச்சின்பிங் செல்வாக்கு என்பது தானாக வளர்ந்தது என்று கூறுவதை விட அதை அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியின் செல்வாக்கில் வளர்த்தெடுத்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும். ஏற்கெனவே ஷி யின் உரைகளை நூலாக வெளியிட்டு கட்சி பள்ளிகளில் பாடமாக வைத்துவிட்டனர். அடுத்தகட்டமாக, ஆப் ஒன்றை உருவாக்கி வெளியிட்டனர். மிகப்பெரிய அதிகாரத்திடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் ஆப்பின் பெயர். ஷி ச்சின்பிங் சிந்தனைகளிலிருந்து அரசு அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பலரும் கற்றுக்கொள்ளலாம். இதை கட்சியின் பிரச்சார நிறுவனம் கண்காணிக்கும். 2019ஆம் ஆண்டு வாக்கில் ஆப்பில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டுகிறது. பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 40-60 சதவீதமாக உள்ளது. இந்த ஆப்பை பொதுவுடைமைக் கட்சிக்காக தயாரித்து கொடுத்தது அலிபாபா குழுமம். குழந்தைகளின் விளையாட்டுப் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை ஷி ச்சின்பிங் எண்ணங்கள் வண்ணங்களைப் பற்றி ஒருவர் படிக்காமல் தேர்வு எழுதாமல் வெளியே வரமுடியாது. கொரோனா காலத்தில் ஷியின் ஆப் பயன்பாடு, அதிகரித்தது. ...