2053ஆம் ஆண்டில் புதிய தொழில்நுட்பங்கள்! - போன், கார், உயிர் பிழைக்கும் தொழில்நுட்பம், டிவி
2053ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள்
போன்
உங்கள் கையில் உள்ள போனைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது? இதில் செய்யவேண்டிய அனைத்தையும் 99 சதவீதம் செய்துவிட்டோம் என்றுதானே? இதுபற்றி ஆராய்ச்சியாளர் நீல் ஷா, எதிர்காலத்தில் போன் என்பது ஹெட்செட்டாக காதில் அல்லது மூளையில் பொருத்தப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார். வீடு, அலுவலகம், சாலை என பல்வேறு டிஜிட்டல் கருவிகளோடு இணைந்திருக்கும். இதனால் அடுத்தடுத்து நாம் என்ன செய்வோம் என்பதை போன் அறிந்து இருக்கும். போன் என்பது குறிப்பிட்ட நீள அகலத்தில் திரை கொண்டதாக இருக்காது. போனுக்கான சர்க்கியூட் போர்ட்டைக் கூட நீரில் கரையும் தன்மை கொண்டதாக தயாரிக்க வாய்ப்புள்ளது.
சோபி சராரா
டிவி
இன்று டிவி சேனலின் இடத்தை இணையம் எடுத்துக்கொண்டுவிட்டது. ஆனால் டிவி என்பது வீட்டில் ஹாலில் வைத்திருப்பது என்பதைக் கடந்ததாக மாறிவிட்டது. உள்ளங்கை அளவு கொண்டதாக போனை மடித்துவைத்துக்கொள்ளலாம். நீங்கள் செல்லும் காரில் உள்ள திரைகளை டிவியாக கருதலாம். எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவை, ஜெஃப் பெஜோசிஸின் ப்ளூஒரிஜினல்ஸ் டிவி சேவை ஆகியவை எதிர்காலத்தில் மக்களைக் கவரலாம். டிஸ்கவரின் பிளஸ் நிறுவனத்தின் டிவி சேவையையும் இதோடு கூறலாம். ஆப்பிள் விஷன் புரோ ஹெட்செட்டை காசுள்ள சீமான்கள் வாங்கி மாட்டி சந்தோஷப்படலாம். எதிர்காலத்தில் அனைவருக்கும் கண்களில் தனித்தனி டிவி போன்ற கருவிகள் இருக்கும். அதில் அவர்கள் அவர்களுக்கென தனித்த நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.
லாரன் குடே
ஆரோக்கியம்
எதிர்காலத்தில் மாத்திரைகளை சாப்பிட்டாலே பெரும் எடைகளை தூக்கி சுமந்து எடை குறைத்த சிரமமங்கள் இல்லாமல் போகும். ஒருவரின் நோக்கம் என்னவோ அதற்கேற்ப உடற்பயிற்சிகளை ஒருவர் அமைத்துக்கொள்ளலாம். இதற்கென அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி உருவம், உங்களைப்போலவே இருக்கும். இதன்மூலம் உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் பயிற்சிகளை தடையின்றி செய்யலாம். ஸ்மார்ட் வாட்ச்சுகள் இன்னும் பிரபலமாகலாம். ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களின் தகவல்களை சேகரித்து அதை டேட்டா மாடலாக சேகரிக்கலாம். சேமிக்கலாம். அனைத்து மக்களும் பல்வேறு வகையில் ஸ்மார்ட் வாட்சுகள் அணியும் சூழல் இருந்தால், நோய்த்தொற்று எச்சரிக்கயை எளிதாக பெறலாம். நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும்.
பூன் ஆஷ்வொர்த்
பிழைப்பது கடினம்
கடல்நீர் கொதிக்கும் நிலையில் இருக்கும். ஆறுகள் மண்மூடிக்கிடக்கும். காடுகள், காட்டுத்தீயில் எரிந்து கருப்பாக தெரியும். நாள் முழுக்க பனிமூட்டம் போல மாசுகள் இருக்கும். இந்த சூழலில் மனிதர்கள் கையில் அணிந்துள்ள வாட்சுகள் மூலம் கார்பன் டை ஆக்சைடு, அபாயமான நோய்த்தொற்றுகள், பூஞ்சைகளை கண்டறிந்து காத்துக்கொள்ள முயல்வார்கள். அப்போது கோவிட் -51் பாதிப்பு இருக்கும்.
காற்றை வடிகட்டும் மாஸ்குகளை மக்கள் அனைவரும் அணிந்திருப்பார்கள். உண்ணும் உணவுகளை மொபைலில் ஸ்கேன் செய்து அதிலுள்ள விஷத்தை அறிவது கட்டாயமாகி இருக்கும். ராணுவத்தில் ரோபோட்டுகள் பிரிவு பல்வேறு ஆபத்தான சூழலில் மக்களைக் காப்பாற்றுவார்கள். தீயணைப்பு துறையில் முழுக்க தானியங்கி ரோபோட்டுகள் இருக்கும். வெள்ள பாதிப்புகளை வருவதை ஏஐ திறன் கொண்ட பாட்டுகள் கண்டறிந்து அறிவிக்கும். இதன்மூலம் மக்கள் எளிதாக தப்பி வேறிடம் செல்லலாம். மக்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான தொழில்நுட்பங்கள் மேம்படும். உயிர் பிழைத்தால்தானே வாழ்ந்திருக்க முடியும்.
ஹெட்போன்
ஓவர் இயர், இன் இயர் என ஹெட்போன்கள் உள்ளன. ஓவர் இயர் போன்கள் காதுகளுக்கு மிகச்சரியாக பொருந்தும் வகையில் இருக்கும். த்ரீடி பிரிண்டிங் முறையில் ஒருவரின் காது அமைப்புக்கு என பொருத்தமாக அமைப்பார்கள். ஓவ்வொருவரின் காதுமடல்களுக்கு பொருத்தமான ஹெட்போன்கள் தயாரிக்கப்படும். இதனால் ஹெட்போன்களை ஒருவர் காதில் பொருத்தியிருக்கிறார் என்பதையே மறந்துவிடுவார்கள். இயர் போன்கள் தனி கணினி போன்று செயல்படும். ஒருவர் இயர்போன் அதாவது இன் இயர்போன் இல்லாமல் இனி வாழவே முடியாத நிலை இருக்கும். அந்த இயர் போன்களை வைத்து அழைப்பு, பிற மொழிகளை மொழிபெயர்ப்பது ஆகியவற்றை செய்யலாம். இதை இயக்க குரல் கட்டளைகள் போதுமானது. ஹெட்போன்களுக்கான பேட்டரி முக்கியம். ஒருவரின் உடல் அசைவுகளைப் பொறுத்து பேட்டரி தன்னை சார்ஜ் செய்துகொள்ளும் வசதிகள் உருவாகும். இசையின் தரமும் உங்கள் அருகில் ஒருவர் அமர்ந்து ட்ரம்ஸ் வாசிப்பது, கிடார் இசைப்பது போன்ற உணர்வு உருவாகும்.
சைமன் லூகாஸ்
கார்
பறக்கும் கார்கள் என்பது முக்கியமான கனவு. ஆனால் இதை ஓட்டப்போவது மனிதர்கள் அல்ல ரோபோட்டுகள்தான். இப்போது மின் வாகனங்கள்தான் அதிகம் மக்களால் விரும்பபடுகின்றன. இதில் பயன்படுத்தும் பேட்டரிகள்தான் பெரும் பலவீனம். அதை மாற்றுவதற்கு நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அதிக திறன் கொண்டவையாக இருக்க வாய்ப்புள்ளது. எரிபொருள் என்பதே ஹைட்ரஜனுக்கு மாறலாம். ஓடிடிகளுக்கு சந்தா கட்டுவது போல சந்தா கட்டி ரோபோடாக்சிகளை புக் செய்து பயணிக்கலாம். அதில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் இணையத்தின் உதவியால் பொருத்தப்பட்டிருக்கும். வீடியோ சேவை, ஆக்மென்ட் ரியாலிட்டி தகவல், பாதுகாப்பு வசதிகள், உங்களின் மனநிலைக்கு ஏற்ற வாசனை திரவியங்கள் இருக்கும்.
ஜெர்மி வொயிட்
வயர்ட் இதழ் கட்டுரை
pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக