மருத்துவ சோதனையால் நோயுற்ற கிராம மக்களைக் காப்பாற்ற கொலைத்தாண்டவமாடும் பொதுநல நேசன்!

 

 

 

 

 



 

 

 

பத்ராத்ரி

தெலுங்கு

ஶ்ரீஹரி, கஜாலா


பத்ராத்ரி என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மருந்துகளை பார்மசூட்டிகல் நிறுவன அதிபர் பரிசோதிக்கிறார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர், அவரது துறைசார்ந்த பிற அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். இதனால் அந்த கிராமத்தில் வாழும் பல நூறு மக்கள் வியாதி வந்து வாழும் பிணம் போல மாறுகிறார்கள். இதை தடுக்க அந்த கிராமத்தில் உள்ள ரகுராம் என்பவர் முயல்கிறார். அவரது தம்பியை மருத்துவம் படிக்க வைக்கிறார். கிராமத்தினர் நோய்களிலிருந்து மீண்டனரா என்பதே கதை.


தொடக்க காட்சியில் சிறைக்குள் சென்று குற்றவாளி ஒருவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொல்கிறார் ரகுராம். அடுத்து, போலீசார் துரத்த அவர்களை பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து பீதிக்குள்ளாக்கி தப்பித்து பத்ராத்ரி வருகிறார். அங்குள்ள மக்களுக்கு தம்பி கொடுத்ததாக மாத்திரைகளை கொடுக்கிறார். அவரது குடும்பத்தில் அம்மா, மாமா, அவரின் பெண் ஆகியோர் இருக்கிறார்கள். மாமா பெண்ணை, மருத்துவரான பிறகு தம்பி திருமணம் செய்துகொள்வதுதான் ஏற்பாடு. அதைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால் ரகுராம் சற்று மனம் கலங்கியபடி பேச முடியாமல் தடுமாறுகிறார்.


கதையில் பெரிய திருப்பம் ஏதுமில்லை. அவரது தம்பி உயிரோடு இல்லை. அமைச்சர், தொழிலதிபரால் கொல்லப்பட்டு விடுகிறார். அதற்காக அண்ணன் ரகுராம், தம்பியின் கல்லூரி தோழர்களோடு சேர்ந்து பழிவாங்க நினைக்கிறார். கூடவே மக்களை காப்பாற்ற முயல்கிறார். இந்த முயற்சியில் அவர் சந்திக்கும் ஏற்ற இறக்கங்கள்தான் பிற காட்சிகளாக விரிகின்றன.


காமெடியன் வேணு வரும் காட்சிகள் மட்டுமே ஆறுதலாக இருக்கின்றன. கஜாலாவின் பாத்திரத்தை எப்படி உருவாக்குவது என இயக்குநர் யோசிக்கவில்லை. அப்படியே காமெடியனோடு வந்து நில்லுங்கள் போதும் என கூறியிருக்கிறார். அவரும் அப்படியே வந்து நின்று மணிசர்மாவின் பாடல்களுக்கு நடனம் ஆடிவிட்டு போகிறார். சொல்லும்படி ஏதுமில்லை. கஜாலாவுக்கு ரகுராமின் கட்டுமஸ்தான உடலைப் பார்த்தவுடனே வியாழன் என்றால் விகடன் வருவது போல காதல் சட்டென வந்துவிடுகிறது.


துவரை டீஷர்ட், ஷார்ட்ஸ், த்ரீபோர்த் அணிந்தவர் புடவை அணியத் தொடங்குகிறார். இயக்குநர் மூளையில் பூஞ்சை பூக்கத் தொடங்கிய நேரம் அது. வாட் எ கிரியேட்டிவிட்டி!


நிலத்தில் விவசாயம் பார்த்து ந்த பணத்தில் தனது தம்பியை மருத்துவம் படிக்க வைக்கிறார் ரகுராம். ஊர் மக்களுக்கு உதவுவது என்பது தானாக இழுத்துப்போட்டுக்கொண்டு செய்யும் வெட்டி வேலை. இதில் அவரை ஊர் மக்கள் னைவரும் சேர்ந்து ஏமாத்திட்டீங்களே என்று சொல்ல என்ன காரணம் இருக்கிறது?


படத்தின் இறுதிக்காட்சியை கல்யாண வீடியோ பாணியில் எடுத்திருக்கிறார்கள். இரண்டு அரசு அதிகாரிகளை கொன்று, அமைச்சரை கடத்தியவரை நீதிபதியே பாராட்டுகிறார். என்ன லாஜிக்கோ... இதெல்லாம் ஶ்ரீஹரி யுனிவர்ஸ் என நினைக்கிறேன். எனவே சொல்ல ஏதுமில்லை. நாயகன் ரகுராம் பாத்திரத்தில் நடித்துள்ள ஶ்ரீஹரி கட்டுமஸ்தான உடல் வைத்திருக்கிறார். இதனால் அவர் எத்தனை பேரை அடித்தாலும் நம்ப முடிகிறது. அதற்காக, இஷ்டப்படி சண்டைக்காட்சிகளை வைப்பதா என்ன?


இன்னொரு படத்தில் ஶ்ரீஹரியை பாம்பு நான்கு முறை கடிக்கும். பாம்பு புற்றில் இருந்து முட்டையை எடுத்துக்கொண்டு ஓடிவருவார். அவரை தடுக்கும் நாகத்தை கும்பிடும் மக்களை அடித்து உதைத்து பதினைந்து நிமிடம் சண்டை போட்டும் விஷம் பாதிக்காது. நாயகன் அல்லவா, அவருக்கு ஏதும் ஆகாது.


கோமாளிமேடை டீம்

Bhadradri Movie is directed by the Mallikharjun and produced by M. Sivakumar


கருத்துகள்