மனநலன் பிரச்னையை, குறைபாட்டை அடையாளம் காட்டி குற்றத்திலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகள்!

 

 


 

 

 

 

பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள், வல்லுறவு செய்பவர்கள் சமூகத்தில உயர்ந்த அடுக்கில் இருந்தால் அவர்களுக்காக நீதி வளையும். ஒடுங்கி காலில் விழுந்து பணியும். நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்குகள் வரும்போது, குற்றவாளிகள் செய்த குற்றத்திற்கு வருந்தும் இயல்பில் இருக்கிறார்களா என நீதிமன்றம் கவனிக்கிறது. மனித தன்மையே இல்லாத நிலையில் உள்ளவர்களை தண்டித்து எந்த பிரயோஜனமும் இல்லை. ஒருவேளை தான் என்ன மனநிலையில் இருந்தேன், எப்படி கொலை செய்தேன் என்று தெரியவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டவர் கூறினால், மருத்துவசோதனை செய்து, மனநிலை குறைபாடு உடையவர் என நிரூபித்தால் அவருக்கு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படும். பதிலாக மனநல மையத்தில் ஒரு படுக்கை உறுதி செய்யப்படும்.

சிறையில் இருப்பதை விட மனநல மருத்துவமனையில் இருப்பது பாதுகாப்பானது என பலரும் நம்புகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தண்டனை ஏமாற்றமளிக்கும். ஆனால் சட்டம் இதை அனுமதிக்கிறது. ஒருவரின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அவராக வெளிப்படுத்துவது உண்டு. அதற்கு அவரின் செயல்களை கவனிக்க வேண்டும். தன்னைப் பற்றியே தெரியாதவர்கள், அடுத்தவர்களைப் பற்றி அறிய என்ன இருக்கிறது? மனநலன் பாதிக்கப்பட்டவர்களை மனநல மைய மருத்துவர்கள் கண்காணித்து சிகிச்சை அளிக்கிறார்கள். இவர்களின் சான்றிதழைப் பொறுத்து குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்படுவதும் உண்டு. இந்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கும் உளவியல் மருத்துவர்களுக்கும் எப்போதும் முரண்பாடு உண்டு. ஒருவரின் குற்றத்தைப் பொறுத்து ஒருவரை அணுகுவதா, அல்லது அவருக்கு ஏற்பட்ட மனநல குறைபாடு சார்ந்து அணுகுவதா என இரண்டுபுறங்களிலும் விவாதங்கள் இன்று வரை நிற்காமல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

யாரோ காதில் பேசுவது, தன்னை கண்காணிப்பது போன்ற பயம் மனதில் தோன்றினால் அவருக்கு மனநிலை குறைபாடு இருக்கலாம். ஆனால், இதற்கான சிகிச்சை என்பது மூளையை அமைதிபடுத்தி அதை தூங்க வைப்பதுதான். இதன்மூலம் ஒருவரின் செயல்பாடுகளை ஆபத்தாக மாறாமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் நம்புகிறார்கள். ஆனால் குற்றங்கள் நடைபெறுவதால் மருத்துவர்களின் கருத்து நடைமுறைக்கு வரவில்லை என நம்பலாம்.

குற்றங்களை தொடர்ச்சியாக செய்வது, அதில் மாட்டிக்கொண்டால் மனநிலை குறைபாடு காரணமாகவே தான் அப்படி வன்முறையில் இறங்கியதாக கூறுவது என்பது உலகம் முழுக்க உள்ளதுதான். மனசாட்சியை காசுக்கு விற்ற வழக்குரைஞர்களும் குற்றங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் குற்றவாளிகளை சட்டத்தின் கருணைப்படி வெளியே எடுத்து வர முயல்கிறார்கள். இந்த இடத்தில் குற்றவாளிகளின் குற்றங்களை கருத்தில் கொள்ளாமல் அவர் குணமடைந்து விட்டதாக சான்றிதழ் வழங்கி மருத்துவர்கள் செய்யும் செயல்கள், சமூகத்தில் பெரும் சிக்கல்களை உருவாக்குகின்றன. குற்றத்தை ஒருங்கிணைந்த தன்மையில் பார்த்து முடிவு செய்யாத அமைப்பு முறையில்தான் பிரச்னை உள்ளதை. கூறும் விஷயங்களை எளிதாக தனிநபருக்கு மாற்றிவிடும் ஆபத்து இருக்கிறது. செய்திகளில் நாடகத்தன்மையை கொண்டு வர ஊடகங்கள் இந்த முயற்சியை செய்கின்றன. அதை நாம் கைக்கொள்ள வேண்டியதில்லை.

வேலை, திருமணம், கட்டாய ராணுவசேவை, தேவாலயம் செல்வது என சமூகத்தில் எதிர்பார்க்கும் விஷயங்களை செய்துவிட்டு, தனது மனதை திருப்திபடுத்த கொலைகளில் இறங்கும் உத்தம வில்லன்கள் நிறையப் பேர் உண்டு. உண்மையில் இவர்களைக் கண்டுபிடிப்பதே கடினமான சவால். அவர்களாகவே செய்யும் குற்றங்களில் பிறழ்வு ஏற்படும்போது தானாகவே மாட்டிக்கொள்வார்கள். கொலைகளில் நம்பிக்கை உருவாகும்போது அவர்களாகவே இடைவெளியை குறைத்துக்கொண்டு தீவிரமாக கொலை செய்ய விரும்புவார்கள். இங்கு விஷயம் குற்றமல்ல. குற்றங்களை வேகமாக அடையாளம் கண்டு அரசு அமைப்புகள் தடுக்கின்றனவா என்பதே.

சைக்கோஸிஸ், பாரனோயா, ஸிசோபெரெனியா ஆகிய குறைபாடுகளுக்கு இடையில் மருத்துவ வரம்புகள், வரையறைகள் உண்டு. ஆனால் நடைமுறையில் ஒருவரின் செயல்பாடுகளை வைத்து நோயை கண்டுபிடிப்பது என்றால் அது மிக கடினமான ஒன்று.

நோயாளியின் நோய் வரலாறு பற்றிய அறிக்கை கையில் இருந்தால், இதுபோன்ற பிரச்னைகளை அடையாளம் கண்டுபிடிப்பது எளிது. அப்படி தெளிவான ஆய்வாதாரங்கள் இல்லாதபோது நிலைமை சற்று கடினமாகவே இருக்கும். இப்போது ஸிஸோபெரெனியா என்று கூறப்பட்ட மாணவன் பீட்டரைப் பற்றி பார்ப்போம்.

பீட்டர், அனைத்து விஷயங்களிலும் எதிர்மறையான கருத்துகளை கொண்டவன். நண்பர்கள் இல்லை. தனியாகவே திரிபவன். பெண்தோழிகளும் கூட கிடையாது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தவன், சக மாணவர்களை விட புத்திசாலி என பெயர் பெற்ற ஆள். நேர்த்தியாக சவரம் செய்யாதவன், ஒருவாரத்திற்கு முன்னர் புதிதாக இருந்திருக்கும் என நம்பக்கூடிய உடையை அணிந்திருப்பவன். ஒருநாள் திடீரென தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றப்பட்டான். எதற்கு தற்கொலை என்றபோது, ‘’அதை எப்படிஇருக்கும் என தெரிந்துகொள்ளத்தான் செய்தேன்’’ என பதில் சொன்னவன். இவன் எதிர்காலத்தில் சமூகத்தை பாதிக்கும் குற்றங்களை செய்வானா என்று கேட்டால், மருத்துவ அறியவில்படி அதற்கான வாய்ப்புள்ளது.

pinterest

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்