தகவல்களை ஜனநாயகப்படுத்துகிறது ஏஐ - கூகுள் இயக்குநர் சுந்தர் பிச்சை

 

 

 

 

 

 



 

 சுந்தர் பிச்சை நேர்காணல் - பகுதி 2

 

என்விடியா நிறுவனத்தோடு சேர்ந்து ஏஐ சிப்களை தயாரித்து வருகிறீர்கள். இப்படி செய்வது ஒரே நிறுவனத்திற்கு அதிக அதிகாரத்தை தருவது போல இருக்கிறதே?

நாங்கள் அந்த நிறுவனத்தோடு பத்தாண்டுகளுக்கு மேலாக தொழில் உறவைக் கொண்டிருக்கிறோம். ஆண்ட்ராய்ட் சார்ந்து ஒன்றாக வேலை செய்து வருகிறோம். ஏஐயைப் பொறுத்தவரை அவர்கள் நிறய கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறார்கள். எங்கள் க்ளவுட் வாடிக்கையாளர்கள் பலரும் என்விடியா வாடிக்கையாளர்கள்தான். செமிகண்டக்டர் துறை கடுமையான போட்டிகளைக் கொண்டது. இத்துறையில் முதலீடும் அதிகம் தேவை. நாங்கள் என்விடியா நிறுவனத்தோடு நல்ல உறவில் இருக்கிறோம்.

ஏஐ தொடர்பாக முறைப்படுத்தல் சட்டங்கள் வேண்டும் என கூறியிருக்கிறீர்கள். அந்த தொழில்நுட்பத்திற்கு பயன் அளிக்கும்படியான என்ன விஷயங்கள் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்?

மருத்துவ காப்பீடை ஒருவர் பரிந்துரைக்கிறார், காபி ஷாப்பிற்கு செல்வதற்கான பரிந்துரை என வரும்போது பாகுபாடு இல்லாமல் ஏஐ இயங்க வேண்டும். சட்டங்கள் உருவாகும்போது ஏஐயின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. அமெரிக்க அரசு இதுதொடர்பாக சட்டங்களை உருவாக்க வேண்டும். சட்டங்களை உருவாக்க அரசு, தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவருமே  ஒன்றாக இணைய வேண்டும். அப்போதுதான் முறையான சட்டங்கள் சாத்தியமாகும்.

ஏஐ, மனித இனத்தை அழித்துவிடும் என ஏராளமான ஆய்வு அமைப்புகள் கூறி வருகின்றனவே?

ஏஐயை நாம் பயன்படுத்துவதில் குறுகிய, மத்திய, நீண்டகால ஆபத்துகள் உள்ளன. அதை மறுக்க முடியாது. உங்கள் நாய்க்கு கிரியேட்டிவிட்டியான பல்வேறு பெயர்களைவைப்பது பற்றி ஏஐ கூறுவதை நான் ஏற்கிறேன். ஆனால், மூன்று வயது குழந்தைக்கு கொடுக்கும் மருந்துகள் பற்றி பரிந்துரைப்பதை எதிர்க்கிறேன். அப்படி செய்வது பொறுப்புணர்வு சார்ந்தது அல்ல. ஏஐ தகவல்களை வேகமாக தருவதோடு, பாகுபாடு கொண்டதாக இருக்காது.

நீங்கள் ஓப்பன்ஹெய்மர் படத்தை பார்த்துவிட்டீர்களா?

இல்லை நான் அந்த படத்தின் மூல நூலை இப்போதுதான் படித்து வருகிறேன். நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கும் படங்களை பார்க்கும் முன்னர் நூலை படித்துவிடும் பழக்கம் எனக்குண்டு.

நீங்கள் சமூகத்தில் செல்வாக்கான, ஆபத்தான தொழில்நுட்பத்தை கையாளும் இடத்தில் உள்ளீர்கள். ஓப்பன்ஹெய்மர் படத்தின் கதையும் கூட அதைப்பற்றியதுதானே?

ஏஐ மட்டும் ஆபத்தான செல்வாக்கான தொழில்நுட்பம் அல்ல. மரபணுவின் கிரிஸ்பிஆர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் அதையும் கூட பொறுப்புணர்வோடு கையாளவேண்டும். வரலாற்றில் இருந்து இந்த விஷயங்களைக் கற்க வேண்டும்.  முக்கியமான விவாதத்தின் அங்கமாக இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

கூகுளை விட்டு விலகிய பல்வேறு பணியாளர்கள், நிறுவனம் மிக மெதுவாக இயங்குகிறது என புகார் கூறினார்கள். உண்மையில் கூகுளை ஒரு ஸ்டார்ட் அப் போல இயக்கவேண்டும் என நினைக்கிறீர்களா?

நாங்கள் வேகமாக இயங்காதபோது கூகுள் க்ளவுட் துறையில் எப்படி லாபம் பார்த்திருக்க முடியும்? யூட்யூப் ஷார்ட்ஸ் குழு, பிக்சல் குழு, கூகுளின் தேடலில் ஏஐயை இணைக்கும் முயற்சி என நிறைய விஷயங்களில் வேகமாக செயல்பட்டுக்கொண்டுதானே இருக்கிறோம்.

கூகுளை விரும்பி பணியாற்றிய பணியாளர்கள்தான் அதை விட்டு விலகிய பிறகு புகார்களை கூறுகிறார்கள்?

வேறு பெரிய நிறுவனங்களில் இருந்த அதிகாரத்தை எதிர்கொள்ள முடியாமல்தானே கூகுளில் பல ஊழியர்கள் வந்து சேர்ந்திருக்கிறா்கள்? நாங்கள் பல ஊழியர்களை இழந்திருப்பது உண்மை. எங்களோடு பல்லாண்டுகளாக பயணிக்கும் ஊழியர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எந்த ஒரு பெரிய நிறுவனத்தைப் பார்த்தாலும் அதில் வேகமாக மாற்றங்களை செய்யமுடியாத பகுதிகள் உண்டு. நாங்கள் அதை சரி செய்ய முயன்று வருகிறோம். ஓப்பன் ஏஐ தனது சாட்ஜிபிடி மாடலை வெளியிட்டது கூட அதன்மூலமான குழுவில் இருந்த சிலர்தான்.

உங்களை போர்க்கால இயக்குநர் என்று கூறலாமா?

கூகுள் ஒரு தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனம். இத்துறை தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது. போர், அமைதி என்பதை நான் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சந்தித்து இருக்கிறேன். நாங்கள் மக்களுக்கு எப்படியான நிறுவனமாக இருக்கிறோம் என்பதே முக்கியம். பன்மைத்துவம் கொண்ட பல்வேறு விஷயங்களில் கூகுள் ஈடுபட்டு வருகிறது.

கூகுளின் இருபத்தைந்து ஆண்டு கால நிறைவு பற்றிய கடிதத்தில் உங்களுடைய இந்திய பூர்விகம் பற்றி பேசியிருந்தீர்கள். இன்று நீங்கள் பெரிய நிறுவனத்தை நிர்வகிக்கிறீர்கள். பணக்காரராக இருக்கிறீ்ர்கள். உங்களுடைய பயணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தொழில்நுட்பம் சார்ந்த துறையை தேர்ந்தெடுத்து இயங்கி வருவது மகிழ்ச்சி. கூகுளில் இணைந்து தகவல்களை பல கோடி மக்களுக்கு தரும்படியான பணியில் இருக்கிறேன். ஏஐ தொழில்நுட்பத்தை மேலும் ஜனநாயகப்படுத்துகிறது. இந்தியாவில் இருந்தபோது சனிக்கிழமைகளில் அம்மா எனக்கு தோசை சுட்டு தருவார். எனக்கு எளிமையாக இருப்பதே பிடிக்கும். வார இறுதியை எனது பெற்றோரோடு செலவிடுவேன். அதுவே எனக்கு விருப்பமானது.

வயர்ட் இதழ்

ஸ்டீவன் லெவி


pinterest










 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்