டிஜிட்டல் ஊடகங்கள் என்றால் என்ன, அதன் விதிமுறைகளைப் பற்றிய கையேடு!
டிஜிட்டல் ஜர்னலிசம் ஹேண்ட்புக் சேஜ் பதிப்பகம் இந்த நூலைப் பற்றி சற்று விரிவாக பேசவேண்டும். ஏற்கெனவே, இதைப்பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.அதை நினைவில் கொண்டிருக்கிறேன் நண்பர்களே. நூல் ஆய்வு நூல் என்பதால் 600 பக்கங்களுக்கும் மேல் செல்கிறது. இந்த நூல் முழுக்க உலகம் முழுக்க பல்வேறு டிஜிட்டல் ஊடகங்கள் எப்படி இயங்குகின்றன, எதிர்கொண்ட சிக்கல்கள் என்னென்ன, பெரும் ஊடகங்கள் இயல்பான வணிகத்தை மாற்ற முயன்ற நிறுவனங்களை எப்படி நசுக்கின என்று விளக்கமாக கூறியிருக்கிறார்கள். டிஜிட்டல் ஊடகங்கள் என்றால், இணையத்தில் உள்ள செய்தி வெளியீட்டு வலைத்தளங்கள் என்று புரிந்துகொள்ளலாம். இன்று வெறும் வலைத்தளங்கள் என்று இல்லாமல் தனியாக செய்திகளை வெளியிட்டு அதிலும் பெரும் சம்பாத்தியத்தைக் காட்டும் நிறுவனங்கள் உண்டு. வேடூநியூஸ், ஒன்இந்தியா ஆகிய தளங்கள் டிஜிட்டல் தளங்களை வெகுசனமயாக்கின. நல்லவிதமாக அல்ல. எலன் மஸ்க் எப்படி நான் எக்ஸில் வெளியிடும் வீடியோக்கள் ஒருவரை அங்கேயே அதிகநேரம் தங்க வைக்க வேண்டும் என்று கூறினார் அல்லவா, அதேபோல்தான். எந்தளவு மட்டமாக தலைப்பை வைக்க முடியுமோ அந்தளவு வைப்பார்கள். வியாபா...