டிஜிட்டல் ஊடகங்கள் என்றால் என்ன, அதன் விதிமுறைகளைப் பற்றிய கையேடு!

 டிஜிட்டல் ஜர்னலிசம் ஹேண்ட்புக்
சேஜ் பதிப்பகம்

இந்த நூலைப் பற்றி சற்று விரிவாக பேசவேண்டும். ஏற்கெனவே, இதைப்பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.அதை நினைவில் கொண்டிருக்கிறேன் நண்பர்களே. நூல் ஆய்வு நூல் என்பதால் 600 பக்கங்களுக்கும் மேல் செல்கிறது. இந்த நூல் முழுக்க உலகம் முழுக்க பல்வேறு டிஜிட்டல் ஊடகங்கள் எப்படி இயங்குகின்றன, எதிர்கொண்ட சிக்கல்கள் என்னென்ன, பெரும் ஊடகங்கள் இயல்பான வணிகத்தை மாற்ற முயன்ற நிறுவனங்களை எப்படி நசுக்கின என்று விளக்கமாக கூறியிருக்கிறார்கள். 

டிஜிட்டல் ஊடகங்கள் என்றால், இணையத்தில் உள்ள செய்தி வெளியீட்டு வலைத்தளங்கள் என்று புரிந்துகொள்ளலாம். இன்று வெறும் வலைத்தளங்கள் என்று இல்லாமல் தனியாக செய்திகளை வெளியிட்டு அதிலும் பெரும் சம்பாத்தியத்தைக் காட்டும் நிறுவனங்கள் உண்டு. வேடூநியூஸ், ஒன்இந்தியா ஆகிய தளங்கள் டிஜிட்டல் தளங்களை வெகுசனமயாக்கின. நல்லவிதமாக அல்ல. 

எலன் மஸ்க் எப்படி நான் எக்ஸில் வெளியிடும் வீடியோக்கள் ஒருவரை அங்கேயே அதிகநேரம் தங்க வைக்க வேண்டும் என்று கூறினார் அல்லவா, அதேபோல்தான். எந்தளவு மட்டமாக தலைப்பை வைக்க முடியுமோ அந்தளவு வைப்பார்கள். வியாபாரம் அல்லவா? இறுதியாக லட்சியம் எப்படி இருந்தாலும், இறுதியாக கரன்சி மணத்தில்தான் வந்து நிற்கிறோம். இதை ஒரு கையேடு என்றே கொள்ளலாம். நூல் முழுக்க ஊடகவியலாளர்கள் எழுதிய ஏராளமான நூல்கள் பேசப்பட்டு எடுத்துக்காட்டுக்காக காட்டப்படுகின்றன. 

ஊடக துறையில் உள்ளவர் இந்த நூலை படிக்கும்போது, இன்னும் கவனமாக தன்னுடைய வேலையை செய்ய முயல வாய்ப்புள்ளது. ஆனால், குடும்ப பிரச்னைகள்,சம்பளத்திற்காக மட்டுமே உழைக்கிற மனப்பாங்கு உள்ளவர்களிடம் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. மேற்கு நாடுகளில் ஏற்கெனவே பல்வேறு விஷயங்களை முயற்சி செய்துவிட்டனர். அதை நாம் இப்போது பெயர்களை தமிழில் அல்லது வேறு பிராந்திய மொழிகளில் மாற்றி டிவிகளில் செய்துகொண்டிருக்கிறோம். மாற்றங்கள் மிக மெதுவாக நடக்கிற சமூகம், இந்தியா. ஏற்கெனவே இங்கு பலரும் ஒன்றிய அரசின் விளம்பர பணத்திற்காக மண்டியிட்டுவிட்டனர். இன்னும் முதுகெலும்புடன் இருப்பவர்கள், காவல்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையின் பரிசோதனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். மக்களை கண்காணிக்க சஞ்சார் சாதி என வடமொழி பெயரில் தனி கண்காணிப்பு ஆப்பும் கூட ரெடியாகிவிட்டது. இனி என்னாகுமோ? 

ஊடகங்களைப் பொறுத்தவரை அதை நம்புபவர்கள் இனி யாருமே இருக்க மாட்டார்கள். நிலைமை அப்படி மாறிவிட்டது. டிஜிட்டல் ஊடகம் என்றால் என்ன, அதைப்பற்றிய வரையறை, விதிகள், செய்த முயற்சிகள், உருவான சிக்கல்கள், முரண்பாடுகள் என பலவும் நூலில் உள்ளது. அதை வாசிக்கும்போதே நம்முடைய செயல்பாடு எப்படி இருக்கவேண்டுமென உறுதியாகிவிடும். ஊடகம் அல்லாதவர் படித்தால், அத்துறை செயல்படுவதை உள்ள நிர்பந்தங்களை சிக்கல்களை அறிந்துகொள்ள முடியும். 

கோமாளிமேடை குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!