என் ரத்தத்தின் ரத்தமே! தமிழே உயிர்மூச்சே!
என் ரத்தத்தின் ரத்தமே! தமிழே உயிர்மூச்சே!
இது அதிமுக பற்றிய கட்டுரையல்ல. நமது உடலில் ஓடும் ரத்தம் பற்றியது. ரத்தம் என்றால் என்ன? ரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதற்கு காரணம், அதிலுள்ள சிவப்பு அணுக்கள் என பள்ளிகளில் படித்தறிந்திருப்போம். கூடவே, அதில் பிளாஸ்மா, வெள்ளை அணுக்கள், பிளாடேட்ஸ் ஆகியவை இருக்கும்.
உடலிலுள்ள ரத்தத்தை இதயம் பல்வேறு உறுப்புகளுக்கு பிரித்து அனுப்புகிறது. ஊரில் குடிநீரை நீருந்து நிலையம் வைத்து விநியோகம் செய்கிறார்களே அதுபோல...
சிவப்பு அணுக்கள், ரத்தத்தை மட்டுமல்ல, அதனோடு உயிர்க்காற்றையும் (ஆக்சிஜனையும்) உடன் கொண்டு செல்கிறது. சிவப்பு அணுக்கள் ரத்தத்தில் உள்ள அளவு 44 சதவீதம்.
ஒருவரின் உடலில் காயமானால் அங்கு ரத்தம் தடைபடுகிறது. காயமான இடத்தில் ரத்தம் கூழ் போல மாறுகிறது. இதை பிளாடேட்ஸ் செய்வதால் ரத்தப்போக்கு நிற்கிறது. ரத்தம் உறைந்து போதல் என்று இதைக் குறிப்பிடலாம். இதில் ஃபிப்ரின் என்ற புரதத்தின் பங்கும் உள்ளது.
பிளாஸ்மா என்று மேலே குறிப்பிட்டோம் அல்லவா? அதை ரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்தால் மெல்லிய மஞ்சள் நிறம் கொண்ட நீர் போல இருக்கும்.
இனி நுரையீரல் பற்றி பார்ப்போம்.
நாம் ஒருநாளைக்கு தோராயமாக 23 ஆயிரம் முறை மூச்சுவிடுகிறோம்.
நுரையீரலில் 2,400 கி.மீ நீளமுள்ள காற்று குழாய்கள் உள்ளன.
இரண்டு நுரையீரல்களிலும் அளவு வேறுபாடு உண்டு. இதயத்திற்கு இடம் தரவேண்டும் என்பதால் நுரையீரல்களில் ஒன்று அளவில் சற்று சிறியதாக இருக்கும்.
உயிர்க்காற்றை உள்ளே இழுந்து வெளியே விடும்போது கரியமில வாயுவாக மாறுகிறது. கடினமான உடல் உழைப்பு வேலைகளை செய்யும்போது உடலுக்கு உயிர்க்காற்றின் தேவை அதிகரிக்கிறது. இதனால், ஒருவருக்கு மூச்சிரைப்பு ஏற்படுகிறது.
நுரையீரல் சிறு துளைகள் கொண்ட பை போல இருக்கும். இங்குதான் உயிர்க்காற்று ரத்தத்தில் கலக்கிறது.
பனிக்காலத்தில் அதாவது டிசம்பரில் நாம் வாய் வழியாக காற்றை ஊதும்போது கண்ணாடியில் பனிபோல மாறி பிறகு அது நீர்த்திவலைகளாகும். இதற்கு காரணம், நீர் ஆவியாகி நீராக மாறும் செயல்முறைதான்.
விக்கல் வருவதைப் பற்றி பல்வேறு மூடநம்பிக்கைகள், மதவாத நாடான இந்தியாவில் உண்டு. விக்கல் வருவதற்கு காரணம் உயிர்க்காற்றை உள்ளே வெளியே அனுப்பும் உறுப்பு தற்காலிகமாக தாறுமாறாக வேலை செய்வதேயாகும். காகித பையை முகத்தில் கட்டிக்க்கொண்டு மூச்சுவிடுவது, சற்றுநேரம் மூச்சை உள்ளே இழுக்காமல் இருப்பது, குளிர்ந்த நீர் பருகுவது விக்கலைத் தீர்க்கும் வழிமுறைகளாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக