நோய் எதிர்ப்பு சக்தி, மூளை - அறிவியல் அறிவோம்

 


திருப்பி அடிப்பேன்


முதுகில் குத்திய துரோகிகளை நண்பர்களைப் பற்றியல்ல நாம் பேசவிருப்பது. உடலுக்குள் நிறைய கிருமிகள் புகுகின்றன. அவற்றை உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பே எதிர்கொண்டு தாக்குகிறது. அதில் முக்கியமானது, வெள்ளை அணுக்கள். தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு குற்றங்களைத் தடுக்க பல்வேறு பிரிவுகள் உண்டோ, அதேபோல்தான் கிருமிகளை அழிக்கவும் சண்டையிடவும் நிறைய வேறுபட்ட வெள்ளை அணுக்கள் உண்டு. எடுத்துக்காட்டு. காசநோய் கிருமிகளோடு மேக்ரோபேஜ் எனும் வெள்ளை அணுக்கள் போரிடுகின்றன. 


கிருமிகள் உடலுக்குள் புகுவதை தடுக்க கண்களில் கண்ணீர், மூக்கில் சளி, வாயில் எச்சில், காதில் மெழுகு போன்ற திரவம், வயிற்றில் அமிலம் உருவாகிறது. இவற்றையும் மீறி கிருமி உடலுக்குள் வந்துவிட்டால், நீங்கள் மருத்துவரை சந்தித்து, அவர் கமிஷன் வாங்கும் இடத்தில் ஸ்கேன் எடுத்து, அவரது சொந்த மருந்தகத்தில் உள்ள விற்காத மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் நிலை வரலாம்.


காற்றில் உள்ள தூசி, பூவில் உள்ள மகரந்தம் ஒருவரின் உடலுக்குள் செல்லும்போது, அதை நோய் எதிர்ப்பு சக்தி எதிரியாக கிருமியாக நினைக்கிறது. அப்போது அதை எதிர்த்து தாக்குதல் நடத்துவதுதான் அலர்ஜி,தமிழில் ஒவ்வாமை. இதனால், ஒருவர் பால் பொருட்கள், வேர்க்கடலை, பூஞ்சை சார்ந்த பிற பொருட்களையும் சாப்பிட முடியாது. வாழ்க்கை முழுக்க அவர் கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வாமை ஒருமுறை வந்துவிட்டால், பிறகு அவர் அதை ஊக்குவிக்கும் எந்தவொரு உணவு பொருட்களையும் சாப்பிடக்கூடாது. அப்படி தெரிந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை செய்யும்படி நிலைமை மாறும். 


உடலுக்குள் கிருமி புகுந்துவிட்டால், அதை தாக்க வரும் ஆயுதம் ஆன்டிபாடி. இவை கிருமி மீது பல ட்ரில்லியன்களாக பிரிந்து ஒட்டிக்கொள்கின்றன. பிறகுதான் வெள்ளை அணுக்களின் தாக்குதல் தொடங்குகிறது. 


நாம் ஒருவரிடம் வாள் சண்டை அல்லது தற்காப்பு சண்டை போடுகிறோம் என்று வையுங்கள. அவரின் நிறை குறைகளை தெரிந்து வைத்திருப்போம் அல்லவா? இவனை இப்படித்தான் சமாளிக்கவேண்டும் என முடிவு செய்வோம். அதேதான். ஒருமுறை கிருமி நம்மைத் தாக்கிவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி, அந்த கிருமி, தாக்குதலை நினைவில் கொண்டிருக்கும். மீண்டும் ஒருமுறை தாக்கினால் கூட அதை எதிர்கொள்ளும் உத்தியை உடல் தானே வகுத்து போரிடும்.


கொள்ளைநோய்கள் பரவுகிறது. அதற்கு எதிராக நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்க வேண்டும். அப்போது என்ன செய்வீர்கள்.தடுப்பூசியை செலுத்தினால், அதிலுள்ள பலவீனமாக கிருமிகளோடு உடல் போரிட்டு தன்னை வலிமையாக்கிக்கொள்ளும். பிறகு அதே கிருமிகள் பலத்தோடு வந்து தாக்கினாலும் அதை எளிதாக இடது கையாலேயே எதிர்கொள்ள முடியும். அதேதான். அவ்வளவேதான். 

_______________________________


சிபியூ - அபாரமான மூளை!


ஒரு ஐஸ்க்ரீமை கல்யாண வீடல்லாமல் ஐபாகோவில் காசு கொடுத்து வாங்குகிறீர்கள்.இதைச் சாப்பிட வாய்தான் உழைக்கிறது என நினைக்கலாம்.ஆனால், கண்கள்தான் ஐஸ்க்ரீமைப் பார்த்து அதுபற்றிய தகவல்களை மூளைக்கு கூறுகிறது. அடுத்து, மூக்கு ஐஸ்க்ரீமின் மணத்தை உள்ளிழுத்து தகவல்களை மூளைக்கு அனுப்புகிறது. பிறகுதான், நாம் நாக்கால் நக்கி சாப்பிடுகிறோம். 


மூளையிலுள்ள நியூரான்கள், உடலிலுள்ள தசைக்கு தகவல்களை அனுப்புகின்றன. 


மூளையில் இரண்டு பகுதிகள் உண்டு. இடது, வலது என மூளை நூடுல்ஸ் பாக்கெட் போன்ற வடிவமைப்பில் பிரிக்கப்பட்டுள்ளது. இடதுபக்க மூளை பேச்சு, மொழி ஆகியவற்றைப் பார்த்துக் கொள்கிறது. வலதுபக்க மூளை உணர்ச்சிகளை கையாள்கிறது. 


நமது உடலின் அனைத்து பாகங்களின் இயக்கத்தை மூளை கட்டுப்படுத்துகிறது. மூளை பாதிக்கப்பட்டால் ஒருவர் சுயநினைவை இழந்துவிடுவார். அப்போது உடலின் இயல்பான செயல்பாடுகள் ஏதும் நடைபெறாது. 


நமது விரல்களில் நரம்பு முடிச்சுகள் உள்ளன. நியூரான்கள் மூளையில் இருந்து உடலுக்கு, உடலில் இருந்து மூளைக்கு சமிக்ஞைகளை தண்டுவடம் வழியாக அனுப்புகிறது. 


புகைப்படம் - பிபிசி







  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!