இடுகைகள்

கர்ட் லெவின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூகத்தை புரிந்துகொள்ள வேண்டுமா? அதை மாற்ற முயலுங்கள் போதும்!

படம்
  கர்ட் லெவின்  ஜெர்மனிய - அமெரிக்க உளவியலாளர். 1890ஆம் ஆண்டு போலந்தில் உள்ள மொகில்னோ என்ற நகரில் மத்தியதரவர்க்க யூத குடும்பத்தில் பிறந்தார். 1905ஆம் ஆண்டு குடும்பம், பெர்லினுக்கு இடம்பெயர்ந்தது. ஃப்ரெய்ட்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். பிறகு, முனிச் பல்கலைக்கழகத்தில் உயிரியல் படித்தார். முதல் உலகப்போரில் ஜெர்மனி ராணுவத்தில் இணைந்து சேவை செய்தார். ஆனால் காயம்பட்டதால் நாடு திரும்பியவர், முனைவர் படிப்பை முடித்தார். பெர்லினில் உள்ள உளவியல் மையத்தில் மூன்று ஆண்டுகள் வேலை செய்தார். யூதர் என்பதால் வேலையை விட்டு விலகுமாறு அச்சுறுத்தப்பட்டார். எனவே, ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்தார். முதலில் கார்னல் பல்கலைக்கழகத்தி்ல் வேலை செய்துவிட்டு பிறகு ஐவோவா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். எம்ஐடிக்கு சொந்தமான குரூப் டைனமிக்ஸ் அமைப்பின் தலைவராக இருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதயபாதிப்பு ஏற்பட்டு காலமானார்.  முக்கிய படைப்புகள் 1935 எ டைனமிக் தியரி ஆஃப் பர்சனாலிட்டி 1948 ரிசால்விங் சோசியல் கான்ஃபிலிக்ட்ஸ் 1951 ஃபீல்ட் தியரி இன் சோசியல் allaboutpsychology.com

சமூக உளவியலின் தந்தை கர்ட் லெவின்!

படம்
  ஒருவரின் குணநலன்களுக்கு அடிப்படையானது என்ன? அவரின் தனிப்பட்ட இயல்பா, அல்லது அவரைச் சுற்றியுள்ள அல்லது அவர் வாழும் சூழலா? இந்த கேள்வி பலருக்கும் இருக்கும். தொடக்கத்தில் சூழல் மட்டும்தான் என சூழலியலாளர்கள் நம்பினர். ஆனால் 1920ஆம் ஆண்டு, கர்ட் லெவின் வெறும் சூழல் மட்டுமல்ல தனிநபரும் கூடத்தான் அவரின் ஆளுமை மாற்றத்திற்கு காரணம் என்று கூறினார்.  இரண்டு எதிரெதிரான விசைகள் மனிதரை அவரது இலக்கு நோக்கி அழைத்துச்செல்ல உதவுகிறது என கர்ட் லெவின் கூறினார். இவர் கூறிய கருத்துகள், அன்றைய உளவியல் உலகிற்கு சற்று புரட்சிகரமானவை.  தன்னைத்தானே மாற்றியமைப்பது கடினமான ஒன்று. ஒருவர் அதுவரை சேமித்து வைத்த கொள்கைகளை தூக்கிப்போட்டுவிட்டு அனைத்தையும் மாற்றியமைத்து இலக்கை நிர்ணயித்து பயணம் செய்வது கடினம். அதுவே அமைப்பு ஒன்றை இதுபோல மாற்றினால் அதில் ஏராளமானவர்களின் பார்வை, அறிவு, தலையீடு என அனைத்துமே இருக்கும். இதையெல்லாம் உள்ளீடாக பெற்று அமைப்பு தன்னை மாற்றிக்கொள்கிறது. அப்படித்தான் காலத்திற்கேற்ப சவால்களை சமாளித்து வெல்ல முயல்கிறது.  ஒரு அமைப்பை மாற்ற முயலும்போதுதான் அதை முழுமையாக புரிந்துகொள்ளவே முடியும் என்று