சமூகத்தை புரிந்துகொள்ள வேண்டுமா? அதை மாற்ற முயலுங்கள் போதும்!

 











கர்ட் லெவின் 


ஜெர்மனிய - அமெரிக்க உளவியலாளர். 1890ஆம் ஆண்டு போலந்தில் உள்ள மொகில்னோ என்ற நகரில் மத்தியதரவர்க்க யூத குடும்பத்தில் பிறந்தார். 1905ஆம் ஆண்டு குடும்பம், பெர்லினுக்கு இடம்பெயர்ந்தது. ஃப்ரெய்ட்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். பிறகு, முனிச் பல்கலைக்கழகத்தில் உயிரியல் படித்தார். முதல் உலகப்போரில் ஜெர்மனி ராணுவத்தில் இணைந்து சேவை செய்தார். ஆனால் காயம்பட்டதால் நாடு திரும்பியவர், முனைவர் படிப்பை முடித்தார். பெர்லினில் உள்ள உளவியல் மையத்தில் மூன்று ஆண்டுகள் வேலை செய்தார். யூதர் என்பதால் வேலையை விட்டு விலகுமாறு அச்சுறுத்தப்பட்டார். எனவே, ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்தார். முதலில் கார்னல் பல்கலைக்கழகத்தி்ல் வேலை செய்துவிட்டு பிறகு ஐவோவா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். எம்ஐடிக்கு சொந்தமான குரூப் டைனமிக்ஸ் அமைப்பின் தலைவராக இருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதயபாதிப்பு ஏற்பட்டு காலமானார். 


முக்கிய படைப்புகள்


1935 எ டைனமிக் தியரி ஆஃப் பர்சனாலிட்டி

1948 ரிசால்விங் சோசியல் கான்ஃபிலிக்ட்ஸ்

1951 ஃபீல்ட் தியரி இன் சோசியல்


allaboutpsychology.com

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்