யூதர் என்ற காரணத்திற்காக வேட்டையாடப்பட்ட உளவியலாளர் செர்ஜ் மாஸ்கோவிசி
செர்ஜ் மாஸ்கோவிசி
ரோமானியாவின் பிரெய்லாவில் யூதக்குடும்பத்தில் பிறந்தார். பிறகு பள்ளியில் சேர்ந்தார். யூதர் என்ற ஒரே காரணத்திற்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1941ஆம் ஆண்டு, யூதர்கள் அவர்களின் மதம் காரணமாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். செர்ஜூவும் அவரது தந்தையும் உயிர் பிழைக்க பல்வேறு நகரங்களுக்கு நகர்ந்து சென்றுகொண்டே இருந்தனர்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரெஞ்சு மொழியைக் கற்றார். அப்போது 'டா 'எனும் கலை பத்திரிகையை துணை நிறுவனராக இருந்து தொடங்கி நடத்தினார். பின்னாளில் இந்த பத்திரிக்கை தணிக்கை சட்டம் காரணமாக தடை செய்யப்பட்டது. ரோமானியாவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு முகாம்கள் வழியாக நகர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு பிரான்சிற்கு சென்றார். 1949ஆம் ஆண்டு, உளவியலில் பட்டம் வென்றார். முனைவர் படிப்பை, டேனியல் லாகாசே என்பவரின் வழிகாட்டலில் செய்தார். இதற்கான கல்வித்தொகையை அகதி என்ற அடையாளத்தின் கீழ் பெற்றார். 1965ஆம் ஆண்டு, சமூக உளவியலுக்கான ஐரோப்பிய ஆய்வகத்தை உருவாக்கினார். அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் உளவியல் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
முக்கிய படைப்புகள்
1961 சைக்கோ அனாலிசிஸ்
1976 சோசியல் இன்ஃப்ளூயன்ஸ் அண்ட் சோசியல் சேஞ்ச்
1981 தி ஏஜ் ஆஃப் தி க்ரௌட்
Brăila, Romania
Paris, France
Photo by: Fondation Balzan
கருத்துகள்
கருத்துரையிடுக