இடுகைகள்

எக்ஸ்குளூசிவ்-ஆகாசவாணி சிக்னேச்சர் ட்யூன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆல் இந்தியா ரேடியோவின் சிக்னேச்சர் ட்யூன் இசையமைப்பாளர்!

படம்
ஆகாசவாணியின் சிக்னேச்சர் ட்யூனை உருவாக்கிய ஜெர்மனி அகதி! இந்தியாவின் முதல் வானொலியான ஆகாசவாணியை எப்போது ட்யூன் செய்தாலும் வரும் சிக்னேச்சர் ட்யூன் யாராலும் மறக்கமுடியாத ஒன்று. ட்யூனின் இனிமையால் எங்குகேட்டாலும் மிகச்சரியாக ஞாபகப்படுத்தி சொல்லும் நமக்கு அதனை உருவாக்கியவர் யாரென்றால் உதட்டை பிதுக்குவோம். வரலாற்று பொக்கிஷமாக இன்று மாறிய அந்த சிக்னேச்சர் ட்யூனின் பிரம்மா, ஜெர்மன் அகதியாக இந்தியாவுக்கு வந்த இசையசைப்பாளர் வால்டர் காஃப்மன். இசையின் தொடக்கம்! ஜெர்மனியின் கார்ல்ஸ்பாத் நகரில் 1907 ஆம் ஆண்டு பிறந்த வால்டர் காஃப்மன் 1930 ஆம் ஆண்டு பெர்லினில் உள்ள Staatlich Hochschule für Musik    கல்லூரியில் இசை கற்றார். பிராக்கிலுள்ள ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் மியூசிக்காலஜியில் முனைவர் படிப்பை தேர்ந்து படித்தவர், இவரின் வழிகாட்டி ஆசிரியர் குஸ்டாவ் பெக்கிங் நாஸியின் இளைஞர்பிரிவு உறுப்பினர் என்பதை அறிந்து அதிர்ச்சியுற்று, முனைவர் பட்டத்தை பெற மறுத்துவிட்டார். பின் பெர்லினில் 1927-1933 வரை பெர்லின், கார்ல்ஸ்பாத், ஈஜெர் நகரங்களில் ஓபரா நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார