இடுகைகள்

இனப்பெருக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்கள் இல்லாத சூழலில் உயிர்பிழைத்து வாழுமா நாய்கள்?

படம்
  மனிதர்கள் இல்லாத உலகம் ஓடிடிகளில், இணையத்தில் உள்ள மனிதர்கள் பலரும், உலகம் அழியும் சூழலில் மனிதர்கள் எப்படி பிழைப்பது என யோசித்து வருகிறார்கள். இதைப்பற்றி நாவல், சிறுகதை, குறும்படம், வெப்தொடர், திரைப்படம் என படைப்புகளை   எடுத்துவருகிறார்கள். நோயோ அல்லது அணு ஆயுதங்கள் கொண்ட போராலோ மக்கள் பேரழிவை சந்தித்து மீண்டும் உலகில் வாழத் தொடங்குவதுதான் கதை. இந்த மையப்பொருளை அப்படியே மனிதர்கள் இல்லாத உலகில் விலங்குகள் குறிப்பாக நாய்களை வைத்து யோசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும்? பல்லாண்டுகளுக்கு முன்னரே வீட்டு விலங்கான நாய், மீண்டும் காட்டுக்குத் திரும்பி உணவுக்காக வேட்டையாட முடியுமா, மனிதர்கள் துணையில்லாமல் தன்னைக் காத்துக்கொள்ளுமா என்ற கேள்வி முக்கியமானது. இதே கேள்வியை பூங்காக்களில் உள்ள மனிதர்களைக் கேட்டால், அது சாத்தியமே இல்லை என்று கூறி காரணங்களை அடுக்குவார்கள். ஆனால், அது அவர்கள் பார்வைக் கோணத்தில் சரியாக இருக்கலாம். முழுக்க உண்மையல்ல.   தொடக்கத்தில் சில நாய் இனங்கள் இப்படி தடுமாறினாலும், விரைவில் சூழலுக்கு ஏற்ப தன்னை பொருத்திக்கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். காட்டுக்குள

இங்கிலாந்தில் அழிந்துவரும் ஹாசல் டோர்மவுசைக் காப்பாற்ற முயலும் ஆராய்ச்சியாளர்!

படம்
  இயான் வொய்ட் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்  இயான் வொய்ட்  இங்கிலாந்தில் உள்ள டோர்மைஸ் என்ற சிறு விலங்கு அழிவின் விளிம்பில் உள்ளது. ஏற்கெனவே அங்குள்ள 17 கவுண்டியில் இந்த விலங்கு அழிந்துவிட்டது. 2022 ஆம் ஆண்டு இயான் வொய்டின் பீப்புள் ட்ரஸ்ட் ஃபார் என்டேஞ்சர்ட் ஸ்பீசிஸ் என்ற அமைப்பு, டோர்மைஸைக் காப்பாற்ற முயன்று வருகிறது.  டோர்மைஸ் சிறு விலங்கினத்தை காப்பாற்ற என்ன செய்து வருகிறீர்கள்? தேசிய டோர்மவுஸ் கண்காணிப்பு நிகழ்ச்சியை  நான் உருவாக்கி நிர்வாகம் செய்து வருகிறேன். இந்த சிறு விலங்கின் சூழல், இயற்கையில் இதன் பங்கு, இனப்பெருக்கம் பற்றியும் ஆராய்ந்து வருகிறேன்.  பிறர் டோர்மவுசைப் பாதுகாக்க ஒத்துழைக்கிறார்களா? அது சோகமான விஷயம்தான். இப்படி எலியை ஒத்த விலங்கு அழிந்து வருகிறது என்றால் பலரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 2000ஆம் ஆண்டு ஹாசல் டோர்மவுஸ் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துவிட்டது. பிறகுதான் அரசு அமைப்புகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சிறு விலங்கினத்தை பாதுகாக்க முனைந்தன.  என்ன சவால்களை சந்தித்தீர்கள்? வாழிடங்களே மிகவும் குறைந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் சாலைகள், ரயில் நிலையங்கள

உலக நாடுகளில் காலநிலை மாற்றத்தில் ஏற்படும் விளைவுகள்!

படம்
  உலகமெங்கும் மாறும் காலநிலை!  ஆண்டுதோறும் ஜப்பானின் ஒகினாவா நகரில், வசந்தகாலத்தின் போது செர்ரி மரங்கள் பூத்துக்குலுங்கும். பூக்கள் மெல்ல மலர்வது ஒகினாவாவில் தொடங்கி டோக்கியோ நகரம் வரை நீளும். அந்நாட்டில் மலர்ந்த பூக்களைக்  காண்பதை ஹனாமி (Hanami festival)என்ற பெயரில் விழாவாக கொண்டாடுகின்றனர். ஜப்பானில், மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை  செர்ரி பூக்கள் மலர்ந்து வந்தன. ஆனால், கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியே, ஜப்பானின் கியோட்டோ நகரில் செர்ரி பூக்கள் முழுமையாக மலர்ந்துவிட்டன. இப்படி பூக்கள் வேகமாக மலர, காலநிலை மாற்றமே காரணம். பருவகாலங்களில் மாற்றம் ஏற்படுவது, உயிரினங்களின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும்.  “சூழலின் இசைவு நிலைக்கு, காலம் முக்கியமான காரணி” என்றார் கென்யாவிலுள்ள  ஐ.நா. சூழல் திட்டத்தைச் (UNEP) சேர்ந்த மார்டென் கப்பெல்லெ.   தாவரங்கள், பறவைகள் ஆகியவற்றின் சூழல் பங்களிப்பு பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்கு பினாலஜி (Phenology) என்று பெயர். 1853ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டு தாவரவியலாளர் சார்லஸ் மோரென் (Charles morren), பினாலஜி என்ற வார்த்தையை முதன்முறையாக அறிமுகம் செய்தார். பின்னாள

அன்டார்டிகாவின் வெடால் கடலில் வாழும் மீன்கள்!

படம்
  லட்சக்கணக்கான   மீன்கள் வாழும் காலனி! அன்டார்டிகாவில் வெடால் கடல் அமைந்துள்ளது. இங்கு, 500 மீட்டருக்கு கீழே தான் ஏராளமான மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. 240 சதுர கி.மீ. தொலைவில் லட்சக்கணக்கான மீன்களின் வளை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றிய ஆய்வறிக்கை கரன்ட் பயாலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளது. கடலில் வாழும் ஐஸ் மீன்கள் இங்குள்ள சூழலுக்கு எந்த விதத்தில் பயனளிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் இதுவரை ஆராய்ச்சி செய்யவில்லை.  ஜெர்மனியைச் சேர்ந்த ஆழ்கடல் ஆய்வாளர் ஆடுன் பர்சர், ஐஸ் மீன்களைப் பற்றிய தகவல்களை கண்டறிந்தார். இவர் ஜெர்மனியின் ஆல்ஃபிரட் வெக்னர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். ஐஸ்கட்டிகளை துளைத்துச் செல்லும் வாகனத்துடன் சென்றவர், ஆராய்ச்சியை பதிவு செய்துள்ளார். கடல் படுகையை ஒலி மூலம் வரைபடமாக்கியுள்ளார்.  ஆய்வாளர்கள், நீருக்குள் சென்று ஆய்வு செய்தபோது, வட்டவடிவிலான வளையைக் கண்டனர். அங்கு, சிறுகற்களை அடுக்கி அதில் ஐஸ்ஃபிஷ் தனது முட்டைகளை இட்டிருந்தது. இந்த மீன் இனம், அன்டார்டிகாவில் மட்டுமே காணப்படுகிறது. இங்குள்ள கடுமையான குளிரையும் சமாளித்து மீன் வாழப்பழகிவிட்ட

நிலத்தில் கூடு அமைத்து இனப்பெருக்கும் செய்யும் சின்ன சீழ்க்கை சிறகி!

படம்
  சின்ன சீழ்க்கை சிறகி சின்ன சீழ்க்கை சிறகி பெயர்: சின்ன சீழ்க்கை சிறகி (lesser whistiling duck ) குடும்பம்:  அனாடிடே (Anatidae) இனம்:  டி. ஜவானிகா (D. javanica)   அறிவியல் பெயர்: டெண்ட்ரோசைக்னா ஜவானிகா (Dendrocygna javanica) சிறப்பம்சங்கள்  சாக்லெட் நிறம், பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆண், பெண் பறவைகள் அமைப்பில் அதிக வேறுபாடுகள் இருக்காது. சிறு தவளை, மீன், புழுக்கள், நீர்தாவரங்கள், தானியங்களை உட்கொள்கிறது. நிலத்தில் கூடுகளை அமைத்து இனப்பெருக்கம் செய்கிறது.  எங்கு பார்க்கலாம் இந்திய துணைக்கண்டம், தெற்காசியாவில் அதிகம் காணப்படுகின்றன. அறுவடை செய்த சதுப்புநிலம், ஈரமுள்ள வயல்கள், ஏரிகளில் பார்க்கலாம்.  ஐயுசிஎன் பட்டியல் அழியும் நிலையில் இல்லாதவை  (Least concern LC) 3.1 ஆயுள் 9 ஆண்டுகள் முட்டைகளின் எண்ணிக்கை 7 முதல் 12 வரை எழுப்பும் ஒலி சீசிக்...சீசிக் ( “seasick-seasick.") ஆதாரம் https://www.thainationalparks.com/species/lesser-whistling-duck https://www.beautyofbirds.com/lesserwhistlingducks.html